வாட்ஸ்அப் தரும் வசதிகள்

இன்றைய நிலையில் வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரும் பயன்படுத்தும் செயலியாக மாறியிருக்கிறது. வீடியோ காலிங் உள்ளிட்ட பலபுதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து தன் வாடிக்கையாளரை தக்கவைத்துக் கொண்டிருக்கும் வாட்ஸ்அப் இன்னும் பல வசதிகளை அறிமுகம் செய்ய உள்ளது.வீடியோக்கள் டவுன்லோட் ஆகும்போதே பார்க்கும் வசதி,யுனிக்கோடு 9.0 வுடன் கூடிய புதிய எமோஜி படங்கள் ஆகியசில வசதிகள் ஒரு சில வாரங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளன.

இணையம் இல்லாத இடத்திலும்...

அதேபோல மற்றொரு அம்சமாக, இணைய சிக்னல் கிடைக் காத இடங்களிலிருந்தும் இனி வாட்ஸ் அப்பிலிருந்து மெசேஜ் அனுப்பலாம் என்ற வசதி அறிமுகமாகியுள்ளது. இது எப்படி செயல்படுகிறது என்றால், பயணத்தில் இருக்கும்போதோ, சிக்னல் தடை இருந்தாலோ அந்த நேரத்தில் அனுப்பப்படும் வாட்ஸ் அப் மெசேஜ்கள் கியூ (queue) வரிசையில் நிறுத்தப்படும். இணைய இணைப்பு கிடைக்கும் போது அந்த மெசேஜ் அனுப்பப் பட்டு விடும்.இதன் மூலம் தற்போது இணையஇணைப்பு கிடைக்கும் வரை காத்திருந்து தகவலை மீண் டும் அனுப்பவேண்டியிருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது. தற்போது இந்த வசதி ஐபோனில் மட்டுமே கொண்டுவரப் பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கும் அறிமுகப்படுத்தப் படவுள்ளது.


ஸ்டேட்டசில் வீடியோ

இதேபோல் மற்றொரு புதிய வசதியும் அறிமுகமாகியுள்ளது, அது என்னவென்றால், இதுவரை வாட்ஸ் அப்பின் ஸ்டேட்டஸ்ஸாக டெக்ஸ்ட் மட்டுமே இருந்ததை மாற்றிபடங்கள் , கிஃப் எனப்படும்நகரும் படங்கள் மற்றும் வீடியோக்களை வைக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்டேட்டஸ் களை 24 மணி நேரத்தில் தானாகமறையும்படியும் செய்ய முடியும். அத்துடன் ஸ்டேட்டஸை நாம்விரும்பும் குறிப்பிட்ட நபர்கள்மட்டுமே பார்க்கும் வகையில் பிரைவசி செட்டிங் அமைத்துக்கொள்ளவும் முடியும். இந்த வசதி தற்போதுஐரோப்பாவில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. விரைவில் நமக்கும் இவ் வசதி கிடைக்க உள்ளது.

இருப்பிடப் பகிர்வு

புதியவர்களுக்கு வழி காட் டவோ, நாம் இருக்கும் இடத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வாட்ஸ்அப்பில் இருப்பிடத்தைக் காட்டும் இருப்பிடப் பகிர்வு (Location Sharing) வசதியும் வரவுள்ளது.

லோ-பேட்டரி எச்சரிக்கை

இத்துடன் மேலும், நண்பர் கள் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை மாற்றும் போதும், வாட்ஸ் அப் கால் பேசிக்கொண்டிருக்கும் போதும் low பேட்டரி என்ற நிலையை போன் அடைந்தால், பேட்டரி தீரப்போகுது அரட்டையை சீக்கிரம் முடிங்க என்று நண்பர்களுக்கு Notificationகளில் தெரியப்படுத்தும் விதமான அம்சமும் சேர்க்கப்படவுள்ளது.

தகவலைத் திரும்பப் பெறும் வசதி

இன்றைய நிலையில் வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்பட்ட செய்திஉண்மையா பொய்யா என்று தெரியாமல் திக்கெட்டும் தீயெனப் பரவுவதால் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன, இதனைத் தடுக்கும் வகையில் புதிய வசதியாக , செய்திகளைப் பகிர்ந்து கொண்ட பின் திரும்பப் பெறும்வசதி மற்றும் திருத்தம் செய்யும்வசதிகள் ஆகியவை அறிமுகப் படுத்தப்படவுள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.ஆனால் இதற்குக் காலவரையறை இருக்கிறது. செய்திகளை அழித்தால் அது அனுப்பியவர் போனில் இருந்துதான் மறையும். மற்றவர்கள் போனில் இருந்து நீக்க முடியாது. ஆனால் புதிய வசதியில் இது சாத்தியம்.

இரண்டு அடுக்கு பாதுகாப்பு

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகியிருக்கும் பாதுகாப்பு தொடர்பான மற்றொரு முக்கியமான வசதி இருபடி சரிபார்ப்பு (Tow Step Verification) ஆகும். இதில் வாட்ஸ்அப் கணக்கினை உருவாக்க தேவையான மொபைல் நம்பருடன் , 6 இலக்க கடவுச் சொல் ஒன் றும் அவசியம் ஆகும்.மொபைல் எண் மற்றும் கடவுச்சொல் இரண்டும் சரிபார்க்கப் பட்ட பின்னர் அதே நாளில் இருந்து 7 நாட்களுக்கு கடவுச் சொல்லைஉள்ளிடாமல் வாட்ஸ் அப்பினை பயன்படுத்த முடியும். 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் மொபைல்எண்ணை உள்ளிட்டு சரிபார்ப்பு ((Reverify) ) செய்ய வேண்டும். தவறுதலாக 7 நாட்களுக்குப் பிறகு மீள் சரிபார்ப்பு செய்தால் இடைப் பட்ட காலத்தில் பெறப்பட வேண்டிய குறுஞ்செய்திகள் உட்பட மற்ற கோப்புகள், மெசேஜ்கள் அனைத்தும் முழுவதும் அழிந்து விடும். மீண்டும் அவற்றைப் பெற முடியாது.இவ்வாறு 30 நாட்கள் வரை மீள் சரிபார்ப்பு செய்யாதிருந்தால் வாட்ஸ் அப் கணக்கே அழிந்துவிடும். அதன் பின்னர் புதிதாக வாட்ஸ் அப் கணக்கை தொடங்க வேண்டிய நிலை ஏற்படும்.
தகவல்- தீக்கதீர்
தொகுப்பு- செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

தகவலுக்கு நன்றி ஜி...

நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பதிவுகள் தொடரட்டும்...