இவ்வளவு எளிமையானவரா முதல்வர்?நடிகர் சூர்யா ஆச்சர்யம்.


இவ்வளவு எளிமையானவரா முதல்வர்?நடிகர் சூர்யா ஆச்சர்யம்.
வார்ட் கவுன்சிலர் பண்ற அலப்பரையே தாக்கமுடியாது . நம்ம் ஊர் அமைச்சர்கள் சொல்லவே வேண்டாம். நடிகர் சூர்யா ஒரு மாநில முதலமைச்சரை பார்த்து இவ்வளவு எளிமையாக ஒரு  முதல்வர் இருக்க முடியுமா ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.

கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நடிகர் சூர்யா, கேரள முதல்வரின் எளிமையால் ஆச்சரியமடைந்ததாக பிரபல தமிழ்திரை நட்சத்திரம் சூர்யா கூறியுள்ளார். சூர்யா, தனது புதிய திரைப்படமான “சிங்கம்-3” ன் விளம்பர நிகழ்ச்சிக்காக திருவனந்தபுரம் வந்த போது, கேரள முதல்வர் தோழர். பினராயி விஜயனைச் சந்தித்த அனுபவத்தைத் தான் இவ்வாறு விவரித்துள்ளார்.
கொச்சியிலிருந்து திருவனந்தபுரம் வரும் போது, விமானப் பயணத்தில் சூர்யாவும் பினராயி விஜயனும் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. சாதாரண வகுப்பில் பயணம் செய்த முதல்வர், அனைத்துப் பயணிகளும் இறங்குவது வரை, அவர்களுக்கு வழிவிட்டு பொறுத்திருந்து, அதன் பிறகே இறங்கினார். அவர் அமர்ந்திருந்த இடம் முதலில் இறங்குவதற்கு ஏற்றதாக இருந்தும் கூட இறுதியாகவே இறங்கினார். தனது பைகளை அவரே கைகளில் எடுத்துச் சென்றது போன்ற அவரது நடவடிக்கைகள் நாட்டிலுள்ள முக்கிய நபர்களும், கார்ப்பரேட்டுகளும் பின்பற்ற வேண்டிய முன்னுதாரணம் ஆகும். பள்ளிகளில் தலைமையாசிரியரிடம் தோன்றுவது போன்ற மரியாதை தரத்தகுந்த தோற்றமும், அதேநேரம் சாதாரண மனிதர்களின் எளிமையான நடவடிக்கைகளும் அவரிடம் இருந்தது என்று கூறியவாறே ‘இவ்வளவு எளிமையானவரா முதல்வர்?’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினார் சூர்யா. பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முதல் ஆளுநர் வரை ஒரே சபையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் எளிய பாரம்பரியம் கேரளத்திற்கு உள்ளது என்றும், மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும் சூர்யா

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

  • மார்கழியும் மாக்கோலமும்.....
    17.12.2013 - 2 Comments
    மாதங்களில் அவள் மார்கழி ... காதலியை மார்கழி மாதமாக உருவகபடுத்திபாடும் அளவுக்கு மார்கழிமாதம் அழகு.…
  • ரஜினியின் இலங்கை பயணம் ரத்து- திருமாவுக்கு இலங்கையில் எதிப்பு
    28.03.2017 - 0 Comments
    இடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப்…
  • கமல் -ரஜினி...அஜித் - விஜய் இணைந்து கலக்க போகிறார்கள்...
    28.04.2014 - 0 Comments
    ரொம்ப காலமாகவே கமல்-ரஜினியை மீண்டும் இணைக்க வேண்டும் என்று சிலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால், அதற்கான…
  • செல்பேசி குசும்புகள்
    21.08.2012 - 1 Comments
    வருத்தபடாத வாலிபர் சங்கம் உட்பட 5 சங்கங்களின் நகைச்சுவை குசும்புகள் எனது நண்பர் ஒருவர் தொடர்ந்து தத்துவம்,…
  • உங்கள் வாழ்நாளை குறைக்கும் சாலையோரக்கடைகள் .....
    27.05.2013 - 3 Comments
    சாலையோரக்கடைகளில் விற் பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் சூடான பஜ்ஜி வகைகள், பகட்டான பேக்கரி களில்…