ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக உதயமான புதிய ஆப்

ஜல்லிக்கட்டு போராட் டத்தில் லட்சகணக்கான இளைஞர்களை ஒன்று திரட்ட ‘பயர்சாட்’ என்ற ஒரு ஆப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனை இணைய வசதி இல்லாமலும் பயன் படுத்தலாம்.ஜல்லிக்கட்டு போராட்டத்தின் களநிலவரங்கள் நொடிக்கு நொடி இளை ஞர்களால் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் அப்டேட் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு விஷயம் இணைந்துள்ளது.அதுதான் இந்த பயர்சாட். வாட்ஸ்அப் போலவே மெசேஜிங் அப்ளிகேஷன்தான் இந்த பயர்சாட். ஆனால், செயல்படும் விதம், பயன்பாடுகள் அனைத்தும் வேறு மாதிரி யாக இருக்கிறது.


அதுவும் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங் கள் தமிழகத்தில் தீவிரம் அடையத் துவங்கியதுமே, இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்ய சொல்லி, எல்லா வாட்ஸ்அப் குரூப்களுக்கும் மெசேஜ்கள் அனுப்பப்பட்டு ள்ளன. போலீசார் ஜாமர் வைத்தாலோ, இணைய வசதியை துண்டித்தாலோ கூட இதன் மூலம் சாட் செய்யலாம்.இந்த பயர்சாட்டில் இணையவசதி தேவை யில்லை. உங்கள் மொபைல்போனின் ப்ளூடூத் அல்லது வைபை ஆகிய இரண்டில் ஒன்று இயங்கினாலே போதும்.இந்த ஆப்பை இன்ஸ் டால் செய்து, உங்களுடைய மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்து கொண்டால் உங்கள் மொபைலின் ப்ளூடூத் ஆன் ஆகிவிடும்.

உங்கள் மொபைலில் இன்டர்நெட் வசதி இல்லையென்றால் 200 மீட்டர் வரை தகவல் அனுப்ப முடி யும் என்கிறது பயர்சாட். இணைய வசதி இருந்தால், உலகம் முழுவதும் இருக் கும் அனைவருக்கும் அனு ப்பலாம்.மேலும். சென்னையிலிருந்து ஒருவர் கோவை யில் இருப்பவருக்கு இணையவசதி இல்லாத இடத்தில் இருந்து, செய்தி அனுப்ப வேண்டும் என்றாலும் தாராளமாக அனுப்பலாம்.உதாரணமாக 100 பேர் கொண்ட ஒரு குழுவில், ஒருவர் சென்னையில் இருந்து கோவைக்கு செய்திஅனுப்பினால், அந்த செய்தி யானது அந்த குழுவில் இருக்கும் அனைவரின் மொபைலுக்குமே ப்ளூடூத் மூலம் சென்றுவிடும்.


ஒருவேளை அந்த குழு வில் இருக்கும் யாரேனும் ஒருவரின் மொபைலில் இணைய வசதி இருந்தால், அதன் மூலம் கோவையில் இருக்கும் நபருக்கு வந்து சேரும்.ஆனால் மெசேஜ் அனைத்துமே என்ட் டூ என்ட் என்க்ரிப்ட் செய்யப் பட்டிருப்பதால், யாரும் படிக்க முடியாது. இதன் பலமே, இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இணைய இணைப்பு இருக்கும் போது பிரச்சனை யில்லை.தற்போது நடக்கும் ஜல்லிக்கட்டு போராட்ட த்தில் தமிழக இளைஞர்கள் ஏராளமானோர், போராட்ட விவரங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த ஆப், உங்களுடைய இருப்பிடத்தையும் காட்டுவ தால், யார் எந்த ஊரில் இருந்து பேசுகிறார்கள் என்பதையும், மற்றவர்கள் கண்டறிய உதவுகிறது.
உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்