பிரதமர் மோடியின் ‘வான்வழி’ தாக்குதல்

மோடி கருப்பு பணத்திற்கு எதிரான துல்லிய தாக்குதல் என்ற பெயரில் தன் சொந்த பணத்தை எடுக்க பாமரமக்களை பாடாய்படுத்தி வருகிறார். பெரும் கருப்பு பண முதலைகள் சல்லாபித்திருக்க ஏழைகள் மட்டுமே துயரமடைகிறார்கள். இப்போது துல்லிய தாக்குதல் அடுத்ததாக வான்வழிதாக்குதல் தொடுத்திருக்கிறார்...
ரூபாய் நோட்டுகளை முற்றாக ஒழிக்க திட்டமிட்டிருப்பதாகவும், ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருப்பதாகவும் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.ரூ. 500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து நாட்டு மக்களைஇன்னலுக்குள்ளாக்கிய பிரதமர் நரேந்திரமோடி இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க மறுத்து வருகிறார். ஆனால் வெளியில் தனது சாதனை இதுவென்று மார்தட்டி வருகிறார்.

இந்நிலையில், மனதோடு பேசுவேன் என்ற வானொலி நிகழ்ச்சியில் ஞாயிறன்று அவர் உரையாற்றினார்.ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என்று நவம்பர் 8 ஆம்தேதி அறிவித்ததாகவும், 50 நாட்கள் இதனால் கஷ்டம் இருக்கும் என்று தான் ஏற்கெனவே தெரிவித்ததாகவும் கூறிய அவர், இடர்களை சந்திக்கும் மக்களுக்கு தனது வாழ்த்துக் கள் உரித்தாகட்டும் என்றார்.ஜன்தன் என்ற அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டத்தை துவக்கியபோது வங்கி பணியாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டார்கள்.

அதேபோல இப்போதும் கஷ்டப்படுகிறார்கள்.


அவர்களுடைய பணி பாராட்டத்தக்கது என்றார்.சில கறுப்புப் பண பேர்வழிகள் ஏழைகளை பயன்படுத்தி தங்களது பணத்தை மாற்றுவதாகவும், ஏழைகளின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்; அவர்களை சிக்கலில் மாட்டிவிடாதீர்கள் என்று மோடிகேட்டுக் கொண்டார்.பினாமி சொத்துக்கள் ஒழிப்பு தொடர்பாக கடுமையான சட்டம் இயற்றப்பட் டுள்ளது. இது அமலுக்கு வரவுள்ளது. இதனாலும் நிறைய கஷ்டம் வரும் என்றார்.ரூபாய் நோட்டு பிரச்சனை காரணமாக குஜராத்தில் ஒரு திருமண வீட்டில் தேனீர் மற்றும் தண்ணீர் மட்டுமே கொடுத்து உபசரித்ததை அவர் பாராட்டினார்.

அசாமில் சில பெண்கள் ரூ.2000 நோட்டை கூட்டாக பயன்படுத்தி மளிகைப் பொருள் வாங்கியுள்ளனர். இதே போல மக்கள் பயிற்சி எடுக்க வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.விவசாயிகளும் இதனால் இடருக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு என்வணக்கம் என்று கூறிய மோடி, இயற்கைஇடரானாலும், இத்தகைய இன்னலானாலும் அதை சகித்துக் கொண்டு வாழ்பவர்கள் விவசாயிகள் என்று அவர் பாராட்டினார்.

சிறிய வணிகம் செய்பவர்கள் டிஜிட்டல் உலகத்திற்குள் நுழைய வேண்டும். மொபைல் போன் மூலமாக வங்கிகளின் விண்ணப்பங்களை இறக்கி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் வணிகம் செய்ய வேண்டும். மிகப் பெரிய மால்களில்நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை போல சிறு பெட்டிக்கடைகளும் கூடஇந்த தொழில்நுட்பத்திற்கு மாற வேண்டும்என்று அவர் கூறினார்.

ரொக்கப் பணத்தை கையாளாமல் வியாபாரம் செய்து பழக வேண்டும் என்றுபுத்திமதி கூறினார். இதனால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இனிமேல் ஆன்லைன் மூலம் பயணச் சீட்டு உள்பட அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
                     மோடி அவர்களே இதுக்கு மேல தாங்காது நாட்டு மக்கள் செத்தே விடுவார்கள். தங்கள் தாக்குதலை நிருத்துங்கள்....

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Syed I H said…
ஒரு லிட்டர் பால் 50 ரூபாய். அதெப்படியா 500 ரூபாய்க்குள் பிரதமரின் மாநிலத்தில் கல்யாணம் நடந்தது?
syedabthayar721 said…
\\\\மோடி அவர்களே இதுக்கு மேல தாங்காது நாட்டு மக்கள் செத்தே விடுவார்கள். தங்கள் தாக்குதலை நிருத்துங்கள்....////

பதிவு அருமை அருமை !!!
குஜராத்தில் 3000 பேர் குழந்தைகள் பெண்கள் உள்பட துடிக்க துடிக்க கொலை செய்யப்படும்போதே கண்டுகொள்ளாத மனுஷன் ஏழைகள் செத்தா என்ன இருந்தா என்ன முதலைகள் பயன் அடைந்தா போதும் சார். செவிடன் காதில் ஊதிய சங்குதான் .

M.செய்யது
Dubai
மோடி அவர்களே இதுக்கு மேல தாங்காது நாட்டு ஏழை மக்கள் செத்தே விடுவார்கள். தங்கள் தாக்குதலை நிருத்துங்கள்....
  • செயலற்ற பிரதமர்’ - கட்டுரை அல்ல... கட்டளை!
    14.07.2012 - 1 Comments
    ‘அண்டர் அச்சீவர்’ - இந்த வார்த்தை, இந்தியாவில் இப்போது பிரபலம். மவுனச்சாமியார் போன்ற அதே, வழக்கமான பிரதமர்…
  • பொன்னியின் செல்வனில் தோன்றும் வால்நட்சத்திரத்தின் பெயர் என்ன?
    03.10.2022 - 0 Comments
    பொன்னியின் செல்வன் படத்தில் துவக்கத்திலிருந்தே ஒரு வால் நட்சத்திரம் தோன்றும். அப்படி தோன்றினால் அது அரசு…
  • அனேகன்...காலம் கடந்து நிற்கும் காதலின் கதை
    16.02.2015 - 3 Comments
    1960 களில் பர்மாவில் துவங்கும் காதல் காட்சிகளும், பாடல்காட்சிகளும், பர்மாவில் ஏற்படும் ராணுவ புரட்சி…
  •    வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன எந்திரம்...!
    08.12.2021 - 0 Comments
     தற்கொலை செய்து கொல்வது  சட்டபூர்மாக தவறு.வாழ்க்கையில் தோற்றுப்போனவர்கள்,குடும்ப பிரச்சனைகளை…
  • இரண்டாம் உலகம் ஸ்டில்கள் + கதை
    06.08.2013 - 1 Comments
    இரண்டாம் உலகம்  வித்தி யாசமான பெயர். எதிர்பார் புகளை உருவா க்குற பெயர். ஹாலிவுட் இயக்குனர் களை போல…