5 அக்., 2016

ஹீரோக்கள் பெண் வேடம் போட்ட படங்கள் ஓடாது -ரெமோ’???

வரும் அக்.7 ஆயுத பூஜை வெளியீடாக வெளிவர உள்ள விஜய்சேதுபதியின் றெக்கை,சி.காத்திகேயனின் ரெமோ,பிரபுதேவா நடித்த தேவி ஆகியோ மூன்று படங்கள் வெளிவரஉள்ளன. தீபாவளிக்கு முன்னதாக ஒரு  மினி தீபாவளி ரீலிஸ். ரெமோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
 எல்லோருக்கும் பிடித்த நடிகராக மாறிவரும் சிவகார்த்திகேயன்   ரஜினிமுருகன்’ படத்தைத் தொடர்ந்து  நடித்து  முடித்து வெளிவரும் படம் – ரெமோ.
சிவகார்த்திகேயனின் நண்பரான ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.
 பாண்டிராஜின் உதவியாளரான புதுமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரஜினி முருகன் படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷ்தான் இப்படத்திலும் கதாநாயகி.

இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து ள்ளார்.படத்துக்கு தலைப்பு வைக்காமலே இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி பின்னர்  சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று படத்தின் பெயர் ‘ரெமோ’ என்று அறிவிக்கப்பட்டது.
ரெமோ என்ற தலைப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்புவரை, இப்படத்தின் பெயர் நர்ஸ் அக்கா என்றே சொல்லப்பட்டு வந்தது.
தலைப்புக்கு ஏற்ப இப்படத்தில் பெண் வேடத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இதற்காக வெளிநாட்டு மேக்கப்மேனை வரவழைத்துள்ளனர்.
கடந்தகாலங்களில் தமிழ்சினிமாவில் பெண் வேடம் போடாத நடிகர்களே இல்லை.
எத்தனை ஹீரோக்கள் பெண் வேடம் போட்டால் என்ன?
அவ்வை சண்முகி படத்தில் கமல் ஏற்ற மாமி கேரக்டர் மட்டுமே தத்ரூபமாக இருந்தது.

இது ஒரு பக்கம் இருக்க, ஹீரோக்கள் பெண் வேடம் போட்ட படங்கள் ஓடாது என்ற மூடநம்பிக்கையும் திரையுலகில் நிலவுகிறது.
இதை மெய்ப்பிக்க சில படங்களை பட்டியலும் போடுகின்றனர் திரையுலகப் பண்டிதர்கள்.
பல வருடங்களுக்கு முன் பிரசாந்த் நடித்த ஆணழகன் படமும் அந்தப் பட்டியலில் உள்ளது.
முன்னணி ஹீரோவாக பிசியாக இருந்த பிரசாந்த், ஆணழகன் படத்தில் பெண் வேடத்தில் நடித்த பிறகே மார்க்கெட் இழந்தார்.
சிவகார்த்திகேயன்  பெண் வேடம் போட்ட ரெமோ படம் எப்படி இருக்கப்போகிறது என்று தெரியவில்லை.அவருக்கு வெற்றியை தேடுதருமா?????

செல்வன்உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...