காவிரி பிரச்சனை : தீர்வு என்ன?

3 வது உலகப்போர் வருமானால் அது தண்ணீருக்காத்தான் நடக்கும் என்கிறார்கள் ,உலக முழுவதுமே தண்ணீர் பிரச்சனை  அதிகரித்துவருகிறது.இந்தியாவில் பக்கத்து பகத்து மாநிலங்கள் தண்ணீர் பிர்ச்சனைகாக  அடித்துக்கொள்கின்றன. இந்த முறை காவிரி பிர்சனையில் கர்நாடக மாநிலம் பொங்களூர் ,அங்கள்ள தமிழர்களும் படாதபாடு பட்டுவிட்டார்கள். சரி காவிரி பிச்சனைக்கு தீர்வு தான் என்ன....

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழுவின் அதிகாரப்பூர்வ வார ஏடான `பீப்பிள்ஸ் டெமாக்ரசி’யில், ‘THINKING TOGETHER’ என்ற தலைப்பில் கேள்வி - பதில் வெளியாகி வருகிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், `பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ ஏட்டின் ஆசிரியருமான பிரகாஷ் காரத் பதிலளிக்கிறார்.
கேள்வி: தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டதை தொடர்ந்து தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகாவில் வன்முறை எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. இப்பிரச்சனையில் மார்க்ஸிஸ்ட் கட்சியின் நிலை என்ன?எம்.துரைராஜ்/ சென்னை.

பதில்: காவிரி நீர் பங்கீடு பிரச்சனை மிகவும் சிக்கலானது. கர்நாடகம், தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகியநான்கு மாநிலங்கள் இப்பிரச்சனையுடன் தொடர்புடையவை ஆகும். இப்பிரச்சனை ஒரு நீண்ட வரலாறு கொண்டது. ஆற்றுபடுகையில் மேல் பகுதியில் உள்ள மாநிலமான கர்நாடகம் காவிரி தனக்கு மட்டுமே உரித்தானது என முழு உரிமை கொண்டாடுவது இப்பிரச்சனையை தீர்க்க உதவாது. அதே போல ஆற்றுப்படுகையின் கீழ் உள்ள மாநிலமான தமிழகம் கடந்த காலத்தில் வரலாற்றுரீதியாக தனக்கு கிடைத்த தண்ணீர் அளவு சிறிதும் குறையாமல் இப்பொழுதும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்துவதும் பிரச்சனையை தீர்க்க உதவாது. இப்பிரச்சனையில் தொடர்புடைய மாநிலங்களின் அணுகுமுறைகள் இந்த நீண்ட காலகட்டத்தில் பல திருப்பங்களையும் மாற்றங்களையும் கொண்டதாக உள்ளது. இப்பிரச்சனையின் ஒரு கட்டத்தில் ‘காவிரி நீர்தீர்ப்பாயம்’ அமைக்கப்பட்டது. இதன் 2007ம் ஆண்டையதீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் 2013ம் ஆண்டு தீர்ப்பு அடிப்படையில் மத்திய அரசின் ஆணையாக வெளியிடப்பட்டது. இந்த ஆணைக்கு காவிரி பிரச்சனையில் தொடர்புடைய அனைத்து மாநிலங்களும் சட்டரீதியாக கட்டுப்பட்டவை ஆகும். எனினும் மழை அளவு குறைவாக பெய்யும் காலத்திலும் அணைகளில் குறைந்த அளவு நீர் இருக்கும்பொழுதும் பிரச்சனை எழுகிறது.இதுவரை உள்ள அனுபவத்தை பார்க்கும் பொழுதுமழை குறைவாக பெய்யும் காலத்திலும் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களின் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்ய இயலாத அளவிற்கு தண்ணீர் குறைவாக இருக்கும்காலத்திலும்தான் கடுமையான முரண்பாடுகள் தோன்றுகின்றன. காவிரி ஆற்றின் மேல் பகுதியில் கேரளாவும் கடைக்கோடி பகுதியில் பாண்டிச்சேரியும் உள்ளன. இந்த இரு மாநிலங்களுக்கும் இப்பிரச்சனையில் உரிமையும் சில கோரிக்கைகளும் உள்ளன. எனினும் அடிப்படை முரண்பாடு தமிழகத்திற்கும் கர்நாடகாவுக்கும்தான் உள்ளது. மழை குறைவாக உள்ள வறட்சி ஆண்டுகளில் நீரை எப்படி பொருத்தமாக பங்கிட்டுக்கொள்வது என்பதுதான் பிரச்சனையின் மையமான அம்சம் ஆகும். இதுகுறித்த தீர்ப்பாயத்தின் ஆணை சில பொதுவான பரந்த வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. எனினும்இறுதிப் பங்கீடு அல்லது பங்கீடுக்கான நெகிழ்வானவழிமுறைகளை இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தீர்த்துக்கொள்வது அவசியமாகிறது.
நீர்பிடிப்புப் பகுதிகளில் வழக்கத்திற்கும் குறைவான மழை பெய்துள்ள தற்போதைய சூழலில் இந்த முரண்பாடுவெடித்துள்ளது. செப்டம்பர் 15 வரை தினசரி 15000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. கர்நாடகாவிற்கு இதில் விருப்பம் இல்லாவிட்டாலும் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி செயல்பட்டது. பின்னர் கர்நாடகா இத்தீர்ப்பை மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் தண்ணீரின் அளவை 12000 கன அடியாக குறைத்தது. எனினும் தண்ணீர் திறந்துவிடும் நாட்களின் எண்ணிக்கையை மேலும் 5 நாட்களுக்கு அதிகரித்தது. இதன் விளைவாக கர்நாடகத்தில் பெங்களூரு மற்றும் ஏனைய பகுதிகளில் தமிழகத்தின் பேருந்துகளும் இதர வாகனங்களும் வன்முறைத் தாக்குதலுக்கு இலக்காயின தமிழர்களும் சில இடங்களில் தாக்கப்பட்டனர். நீதிமன்றத்தின் ஆணை அமல்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த கேள்விக்கும் இடம் இல்லை. எனினும் நிரந்தரத் தீர்வுக்கு இரு மாநில அரசாங்கங்களும் பேசி ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும். அத்தகைய ஒப்பந்தம் இரு மாநிலங்களின் விவசாயிகள் மற்றும் மக்களின் நலன்களை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இதற்கு உதவும் வகையில் மத்திய அரசாங்கத்தின் செயல்கள் அமைய வேண்டும்.துரதிர்ஷ்டவசமாக முதலாளித்துவக் கட்சிகள் இரு மாநில மக்களின் ஒற்றுமையை உருவாக்கி இப்பிரச்சனையை அனைவருக்கு நீதிவழங்கும் அடிப்படையில் தீர்க்க வேண்டும் என செயல்படுவது இல்லை.மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிஒரு தொழிலாளி வர்க்கத்தின் கட்சிஎன்ற முறையில் சம்பந்தப்பட்ட அனைத்துப் பகுதியினரும் சுமுகத் தீர்வுகாண அ) இப்பிரச்சனைதொடர்பான அரசியல் சட்டத்தின்அம்சங்களுக்கு (நீதிமன்றத்தின் தீர்ப்பு உட்பட) கீழ்படிய வேண்டும்; ஆ) பரஸ்பர பேச்சு வார்த்தை மூலம் பொருத்தமான நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கருதுகிறது.குறுகிய அரசியல் லாபம் காண வெறி உணர்வுகள் அல்லது கோபத்தை தூண்டும் நீசத்தனமான அணுகுமுறையை உருவாக்கும் செயலை சில அரசியல் சக்திகளும்வேறு சில (சமூக விரோத) சக்திகளும் செய்கின்றன. இது இரு மாநில உழைப்பாளிகளை பிளவுபடுத்துவது மட்டுமல்ல; நிரந்தர சுமுக தீர்வுக்கும் பயன்படாது. இதுசம்பந்தப்பட்ட மாநிலங்களின் நலன்களுக்கும் தேசத்தின் நலனுக்கும் ஊறுவிளைவிக்கும் தன்மை கொண்டது.

தொகுப்பு
செல்வன்
உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்கருத்துகள்