19 செப்., 2016

ராம்குமார் - கொலை முதல் 'தற்கொலை' வரை...


ராம்குமார்  மரணம் தற்கொலையா?கொலையா? என்ற விவாதம்  பரபரப்பாக பேசப்படுகிறது.  அரசியல் தலைவர்கள் உட்பட  எல்லோருமே போலீஸ் ராம்குமாரை கொன்றுவிட்டதாகதான் நம்புகிறார்கள். இதற்கு காரணம் தமிழக காவல் நிலையங்களில் லாகப் மரணங்கள் அடிக்கடி நிகழகூடிய சம்பவமாகும். விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவர்கள் கூட சந்தேக மரணம் அடைந்திருக்கிறார்கள். காவல் நிலையம் சென்று திரும்பிய பலர் அவமானத்தாலும்,பயத்தாலும் தற்கொலை செய்து கொண்ட செய்திகளும் உண்டு.
      இவ்வளவு ஏன் தமிழத்தை பொருத்தவரை காவல்நிலையம் செல்வதையே அவமானமாக கருத்துகிற சுழ்நிலை தான் அதிகம்.  அங்கும் அப்படித்தான் நடத்துகிறார்கள். பணம் கொடுத்தால் ,அல்லது சமூகத்தில் பெரிய மனிதர்கள்,பணம் உள்ளவர்களை மரியாதையாக நடத்தும் காவல்துறை,சாமானியர்களை அவமானப்படுத்தி ,மிரட்டி அனுப்புகிறது என்பது உண்மை தான்.

           சுவாதியை கொலை  வழக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பரபரப்பான சம்பவமாகும்.  இந்த கொலையை மாதரியாக எடுத்துக்கொண்ட பல ஒருதலை காதல் (தறுதலைகள்) மன்னர்கள் தன்னை காதலிக்க மறுத்த பல பெண்களின் உயிரை எடுப்பது தொடர்கிறது. எதையெல்லாம் ஊதரணமாக எடுத்துக்கொள்வது  என்ற விவஸ்தே கிடைதா தமிழர்களுக்கு.
                ராம் குமாரின் மரணத்தில் சாதி வேறு புகுந்திருக்கிறது. ராம்குமாரை போலீஸ்தான் கொன்றிருப்பார்கள் என்று சொல்ல முடியாது.கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்  பல மன உளைச்சலுக்கு உட்படவனாக இருக்கும் நிலையில் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. தற்கொலை என்பதே திடீர் முடிவுதானே ,திட்டமிட்டு செய்வதல்ல. ராம்குமாரின் மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக தமிழக அரசியல் தலைவர்கள் பேசியிருப்பதையும் மறுக்கமுடியாது.எது எப்படியோ ராம்குமார் - சுவாதி கொலை சம்பவங்கள் தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு மறக்கமுடியாத சம்பவமாக நீடிக்கும்....

கொலை முதல் 'தற்கொலை' வரை...

ஜூன் 24: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை.
ஜூலை 1: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் ராம்குமார் கைது.
ஜூலை 2: கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமாருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
ஜூலை 3: சென்னை கொண்டுவரப்பட்ட ராம்குமார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி.
ஜூலை 5: சிகிச்சை முடிந்து புழல் சிறையில் ராம்குமார் அடைப்பு.
ஜூலை 9: சிறையில் ராம்குமாரை வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் முதல்முறையாக சந்தித்து பேசினார்.
ஜூலை 12: புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு.
ஜூலை 13: முதல் 15 வரை - போலீஸ் காவலில் ராம்குமாரிடம் விசாரணை.
ஜூலை 15: ராம்குமார் கழுத்தில் போடப்பட்டிருந்த 18 தையல்கள் புழல் சிறை மருத்துவமனையில் பிரிப்பு.
ஜூலை 18: புழல் சிறையில் காணொலி காட்சி மூலம் ராம்குமாரிடம் நீதிபதி விசாரணை.
ஜூலை 29: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு ரத்தப் பரிசோதனை.
ஆகஸ்ட் 8: ராம்குமாரை மீண்டும் ஒருநாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரணை.
செப்டம்பர் 16: புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்துப் பேசினார் வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ்.
செப்டம்பர் 18: மாலை 4.45 மணிக்கு புழல் சிறையில் மின் கம்பியைப் பிடித்து ராம்குமார் தற்கொலை செய்ததாக அறிவிப்பு.

மேற்கண்ட் தேதிவாரியான தகவல் 
தி இந்து தமிழ்  - நன்றி
தொகுப்பு
செல்வன்உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...