ஆயிரக்கணக்கான பறவைகள் தற்கொலை


தொழில்
அதிபர் குடும்ப த்துடன் தற்கொ லை. குழந்தை களுக்கு விஷ்ம் கொடுத்து கொ ன்றுவிட்டு தாயும் தற்கொ லை. காதல் தோல்வியால் காதல ன்த ற்கொலை. கடன் தொல்லையால் தற்கொலை இப்படியான செய்திகள் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில்  செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.
                        ஒரு மனிதனின் தற்கொலைக்கு கடன்,காதல் என ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள ஜாதிங்கா கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர்; மாதங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் விளக்கு கம்பங்களின் மீது மோதி தற்கொலை செய்து கொள்கின்றன.புரியாத புதிராக உள்ள இந்த சம்பவத்திற்கு இன்று வரை விடைகாண முடியாமல் விஞ்ஞானிகள் தவித்து வருகின்றனர்;.

இந்நதியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் ஜாதிங்கா.பள்ளத்தாக்கு பகுதியான இங்கு சுமாh; 3500க்கு மேற்பட்டோர்; வசித்து வருகின்றனர்;.அழகிய புல்வெளிகள் நிறைந்த பள்ளத்தாக்கு பகுதியான ஜாதிங்கா அசாமின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.இந்த பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள காட்டு பகுதிகளில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து வருகின்றன.இதற்காக ஆகஸ்ட்,செப்டம்பா; மற்றும் அக்டோபா; மாதங்களில் தங்கிடும் வெளிநாட்டு பறவைகள் தங்களது இனப்பெருக்க காலம் முடிந்ததும் தங்களது நாடுகளுக்கு திரும்பிச் சென்று விடுகின்றன.ஆனால் உள்நாட்டு பறவைகளின் நிலைமையோ தலைகீழாக மாறி தற்கொலையில் முடிந்துவிடுவது கடந்த 100ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருவது அதிர்ச்சியாக உள்ளது.உள்ளுh; பறவைகளின் இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து அங்கு கூறப்படும் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை இப்போது பார்ப்போம்:

மலைகள் மற்றும் பள்ளதாக்குகள் நிறைந்த பகுதியாக உள்ள அசாம் மாநிலம் ஜாதிங்கா கிராமத்தை சுற்றியுள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் மீன்கொத்திகள்,பிளாக் பிட்டர்ன்ஸ் ,புலிபிட்டா;ன்ஸ்,பான்ட் ஹார்னஸ் மற்றும் இதர சிறிய வகையிலான குருவிகள் தங்கி இனப்பெருக்கம் செய்து வசித்து வருகின்றன.இங்கு வந்து தங்கிடும் வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் முடிந்து வெளியேறியவுடன்.இங்குள்ள உள்ளுர்; பறவைகள் சற்றே நிலை தடுமாறி தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கின்றன. குறிப்பாக செப்டம்பர்; மற்றும் அக்டோபர்; மாதங்களில் வரும் அமாவாசை நாளன்று பெரும் குழப்பத்திற்கு ஆளாகிடும் ஆயிரக்கணக்கான பறவைகள் இரவு 7மணி முதல் 10மணி வரை வெகு உயரத்தில் குரலெழுப்பியபடி பறக்கின்றன.பின்னா; கிராமத்தில் வெளிச்சத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்கு கம்பங்களில் வேகமாக வந்து மோதி படுகாயமடைந்து தற்கொலை செய்து கொள்கின்றன.பறவைகளின் இந்த தற்கொலை சம்பவங்கள் கடந்த 100ஆண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடா;ந்து நடைபெற்று வருவதாக ஜாதிங்காவில் வசித்திடும் மக்கள் தெரிவிக்கின்றனர்;.
இது குறித்து இந்தியா மற்றும் உலகின் தலைசிறந்த பறவைஇன ஆராய்ச்சியாளர்கள் ஜாதிங்கா பகுதிக்கு வருகைதந்து பலஆண்டுகளாக அதே பகுதியில் முகாமிட்டு ஆய்வுகள் மேற்கொண்டும் பறவைகளின் தற்கொலைக்கான காரணங்களை கண்டறிய இயலவில்லை.இருப்பினும் விளக்கு கம்பங்களின் ஒளிஈர்ப்பு,மூடுபனி,பறவைகளின் தடம்மாறுதல்,நிலத்தடி நீரின் காந்த குணங்கள் போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம் என்று தங்களது கருத்துக்களை தொரிவித்துள்ளனர்..
இது ஒருபுறமிருக்க ஜாதிங்கா பகுதியில் செப்டம்பர்; அக்டோபர்; மற்றும் மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் வானத்தில் பறந்திடும் அசுத்த ஆவிகளால் கலவரமடையும் பறவை இனங்கள் தப்பித்து செல்வதற்காக வெளிச்சம் நிறைந்த மின்விளக்கு கம்பங்களை நோக்கி ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கில் விரைந்து வந்து மோதுவதில் படுகாயமடைந்து உயிhpழப்பதே பறவைகள் தற்கொலை என்று கூறப்படுவதாக உள்ளுh;வாசிகள் சிலர் சொல்கின்றனா;.மேலும் பறவைகள் தற்கொலை காலத்தில் விளக்கு கம்பங்களில் மோதி அடிபட்டு கிடக்கும் பறவைகளை உணவுக்காக ஜாதிங்கா பகுதி மக்கள் எடுத்து பயன்படுத்திக் கொள்கின்றனர்;.
இருப்பினும் ஜாதிங்கா பகுதியில் பறவைகள் அதிகளவு தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களை இன்றுவரை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகளும் பறகைள் இன ஆண்வாளா;களும் தவித்து வருகின்றனர்;.இதனால் தான் அசாம் மாநிலத்தில் உள்ள ஜாதிங்கா பறவைகளின் தற்கொலை பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டு வருகிறது. உலகில் பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாயத்துக் கொள்ளும் நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள ஜாதிங்காவில் மின்விளக்கு கம்பத்தில் மோதி பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு புரியாத புதிராக உள்ளது...

தொகுப்பு
செல்வராஜ்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments