தேனில் விழுந்த தேமுதிக: பிரேமலதா

கண்ணாமுச்சி காட்டிய தமிழக கட்சிகள் ஒருவழியாக இல்லை இல்லை வேறுவழியில்லை தேர்தல் நெருங்கி விட்டதே...கூட்டணி முடிவு செய்து விட்டன,பிரச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கி விட்டது.
                         நேற்றுவரை விஜயகாந்த எங்கள் கூட்டணிக்கு தான் வரவேண்டும் என நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டிருந்த கட்சிகள் அவரை கிண்டலடிக்க துவங்கிவிட்டன.
                பழம் பாலில் விழுமா என காத்திருந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சீசீசீ  இந்த பழம்  புளிக்கும் என்கிறார். நாக்குகை தொங்கப்போட்டு காத்திருந்த பாஜக மக்கள் நல கூட்டணி மக்கள் விரோத கூட்டணி என்கிறது.ஆனால் விஜயகாந்த் மனைவி பிரேமலதா  பழம் நழுவி தேனில் விழுந்திருப்பாதாக  மதுரையில் பேசியிருக்கிறார்....


மதுரையில் ஞாயிறு கிழமைன்று நடைபெற்ற தேமுகதிவின் தேர்தல்அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில்  பேசிய பிரேமலதா ...
ஊழல், முறைகேடுகளில் தொடர்ந்து ஈடுபடும் அதிமுக, திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா? அல்லது லஞ்சம்-ஊழற்ற ஒரு ஆட்சி அமையவேண்டுமா என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்.லஞ்சம்-ஊழலற்ற அரசை அமைக்க வேண்டுமென நல்லவர்கள் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.பழம் நழுவி பாலில் விழும் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார். அதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழம் நழுவி நஞ்சு கலந்த பாலில் விழுந்துவிடக்கூடாது எனக்கூறினார். இன்றைக்கு தேமுதிக என்ற ஞானப்பழம் தூய்மையான தேனில் விழுந்துள்ளது. மக்கள் மனதிலும் விழுந்துள்ளது.இந்த அணி மகத்தான வெற்றி பெறும். மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியின் மீது தமிழக மக்கள்வெறுப்பின் உச்சத்தில் இருக்கின்றனர். பேயிடம் இருந்து பிடுங்கி பிசாசிடம் ஆட்சியை கொடுக்க மக்கள் தயாரில்லை.மக்கள்நலக்கூட்டணியும் தேமுதிகவும் இணைந்து அமைந்துள்ள அணி தமிழகத்தில் ஒரு பெரும் மாற்றத்தைத் தரும்.கடந்த பத்தாண்டுகளில் திமுகவும் அதிமுகவும் முல்லைப்பெரியாறு, காவிரி நதி நீர்பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை என எதையும் தீர்க்கவில்லை.தெருவிற்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்தது தான் அதிமுகவின் சாதனை. பாண்டவர்கள் தோற்றதாக வரலாறு கிடையாது.மக்கள் நலக்கூட்டணியில் உள்ளவைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூறமுடியுமா? ஏதாவது முறைகேடு செய்தார்கள் எனக்கூற முடியுமா? 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் வந்ததா?தமிழன்னை சிலை மதுரையில் நிறுவப்படும் என ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்தார். தமிழன்னை சிலை வந்துவிட்டதா?துணைக்கோள் நகரம் கொண்டுவரப்படும் என்றார் கொண்டுவந்தாரா?காளவாசல், கோரிப்பாளையம் சந்திப்பில் பாலம் அமைப்போம் என்றார் அமைத்துக்கொடுத்தாரா? மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்றார். அதற்காக என்ன செய்தார்?மதுரை மாநகராட்சி 100 வார்டுகளைக் கொண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் குப்பைக்கூளங்கள்,.சாக்கடை கழிவுகள். மீனாட்சியம்மன் கோவில் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் என பல்வேறு பிரச்சனைகள் இன்றைக்கும் தொடர்கிறது. தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை.எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் மதுரை மாநகராட்சி செயல்படுகிறது.நெற்றிக் கண் திறப்பினும் குற்றம்குற்றமே என நக்கீரர் கூறிய மதுரையில் இருந்து கூறுகிறேன். தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வராக வருவதற்கு அனைத்துத் தகுதியும் உள்ளது. தேமுதிக –- மக்கள் நல கூட்டணி, மக்களுடன் கூட்டணி வைத்துள்ளது. மக்களாகிய நீங்கள்தான் எங்களது எஜமானர்கள். நடைபெற உள்ள தேர்தலில் நல்ல தீர்ப்பை தாருங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
                   பழம்  தேனில் விழுந்துச்சா... சாக்கடையில விழுந்தச்சான்னு மக்கள் தான் சொல்லனும் ...

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Seeni said…
பகிர்வுக்கு நன்றி..
  • ரஜினியிடம் சில கேள்விகள்
    12.12.2011 - 8 Comments
    ஒரு காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்த ரசிகனின் வேத னை யும், ஆதங்கத்தின் வெளிப்பாடு,…
  • தண்ணீரில் மூழ்கிப்போன தமிழகத்தின் வரலாறு
    29.05.2012 - 2 Comments
    தமிழக வரலாற்று பதிவுகளில் முக்கிய இடம் வகிக்கும் திப்புசுல்தான் காலத்து தண்டல்கோட்டை 7 ஆண்டுகளுக்கு பின்னர்…
  • இப்படியும் பெயர் வைப்பார்களா?
    05.11.2021 - 0 Comments
     வினோத பெயர் கொண்ட சிறுவன் தனது பெயரால்  சிறுவன் ஒருவன் உலக அளவில் வைரல்  ஆகி உள்ளான்.…
  •  9-வது இடத்தில் இளையராஜா
    18.03.2014 - 1 Comments
    உலகின் சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டி யலில் 9-வது இடத்தை இளையராஜா பிடித்து ள்ளார்.உலகளவில் பிரசித்திப்…
  • டேம்- 999  படத்தின் பொய்பிரச்சாரத்திற்கு பதிலடியாக குறும்படம் வெளியீடு.
    01.12.2011 - 3 Comments
    இந்தியா முழுவதும் இன்று விவாதிக்கப்படும் செய்தியாக மாறியுள்ளது மூல்லைபெரியாறு பிரச்சனை. கேரளாவில் அணையை…