கும்பகோண மகாமகம்- புண்ணியம் தேட வந்து பலியான கதை

1518-ஆம் ஆண்டு முதல்12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2004-ஆம் ஆண்டுவரை 41 முறை மகாமகம் கொண்டாடபட்டதாக கல்வெட்டுகளில் சொல்லப்படுகிறதுஇதில் திருச்சிராப்பள்ளி திருவானைக்காவல் கோயிலில் உள்ளவிஜய நகரப்பேரரசின் குறுநில மன்னான தெலுங்கு வாலக காமயர்அக்கால அரசருக்குரிய கல்வெட்டில் கி.பி.1482 மாசி 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகாமகம் நடைபெற்றதாகவும் அமுது படைக்க வெண்கோ கொண்கொடி எனும்கிராமத்தில் ஒருவேலி தானமாக கொடுக்கபட்டதாகவும் சொல்லபட்டு இருக்கிறது

12 ஆண்டில் இரண்டு மகாமகம்

16-ஆம் நூற்றாண்டில் கி.பி. 1517- ஆம் ஆண்டு மாசிமாதம்12- ஆம் தேதிஒருமகாமகமும் 1518-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி புதன்கிழமை ஒரு மகாமகமும் நடைபெற்றுள்ளது.இரு மகாமகத்திலும் விஜய நகரமன்னர் கிருஷ்ணதேவராயர் குளத்தில் குளித்து பொன்னையும் பொருளையும் வாரி வழங்கியதாகவும்,
1624- ஆம் ஆண்டு நடைபெற்ற மகாமகத்தில் ரகுநாதநாயக்கன் தமது எடைக்குச் சமமான பொன்னை தானமாக வழங்கியதாகவும் கல்வெட்டுகளில் சொல்லப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது. ஆனால், அந்த நிலங்களும் பொன்னும் பொருளும் இப்போது இருக்கிறதா இல்லையா என்பது சந்தேகமே. 1873-ஆம் ஆண்டு மகாமகத்தின்போது புலவர்களும் இலக்கியவாதிகளும் கூடி விவாதம் செய்துள்ளனர். டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் கும்பகோணத்தில் பெருங்கூட்டம் கூடும் என கேள்விபட்டிருக்கேன் என்கிறார்.

கும்பகோணத்தில் முதல் மின் விளக்கு

1933-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற மகாமகத்தின்போது ஒருதனியார் நிறுவனம் மின்சாரத்தை உற்பத்தி செய்து நகரத்திற்கு வழங்கியது. 1933-ஆம் ஆண்டு நடைபெற்ற மகாமகம் திருவிழா தலை தீப ஒளித்திருவிழாவாக மின்னியது தமிழ்நாட்டில் முதல் பேசும் திரைப்படம் தொடங்கப்பட்ட ஆண்டு 1931- 1933 ஆண்டுகளில் கருப்பு வெள்ளைப்படம் பார்த்த மக்களுக்கு இரவு நேரங்களில் வண்ணங்களோடு ஒளி வில்லைகள் இலவசமாக மகாமக கண்காட்சியின் போது காட்டப்பட்டது தனிச்சிறப்பாகக் கருதப்பட்டதாம். இந்த மகாமகத்தில் பம்பாயிலிருந்து வந்து சர்க்கஸ் நடத்தியுள்ளனர். சர்க்கஸ் சாகசங்களை மக்கள் அதிசயமாகப் பார்த்துள்ளனர்.
11 வருடத்தில் வந்த மகாமகம்

எப்போதும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் மகாமகம் வரும்.ஆனால் இயற்கையான வானவியல்நிகழ்வுகளால் 1956-ல் 11 ஆண்டுகளிலேயே மகாமகம் வந்துவிட்டதாம்

புண்ணியம் தேடவந்தவர்கள் பலியான சோகம்

1992-ஆம் ஆண்டு நடைபெற்ற மகாமகத்தில் அப்போது நடைபெற்ற அதிமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும் பாதுகாப்பு குறைபாடுகளாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குளிக்கும் நேரத்தில் தமிழக முதல்வர் மட்டும் குளக்கரையில் குளித்த காட்சியைப் பார்க்க வந்த ஒன்றுமறியாத பொதுமக்கள் 43 பேர் கூட்ட நெரிசலில் சிக்கிபலியானார்கள். சிலர் படுகாயங்களுடன் உயிர்தப்பினர்.

2016-ஆம் ஆண்டு மகாமகத்தில் மாற்றம்

காலம் காலமாய் ஆச்சாரியர்கள் கூற்றுப்படி மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் குளிக்கலாம் என்றிருந்த நிலை மாறி 2016-ஆம் ஆண்டு நடைபெறும் மகாமகத்தில் பிப்.13-ஆம் தேதி முதல் 22- ஆம்தேதி வரை குளிக்கலாம் என்ற புதியகண்டுபிடிப்பின் உச்சத்தில் இந்துத்துவா அமைப்பு செயல்படுகிறது. ஆதிக்க சக்தியினரின் புராணத்தையும் மீறி சட்டத் திருத்தம் நடைபெற்றுள்ளது. மாவட்ட நிர்வாகமே புதிய சூலம், திருமன் போன்ற ஆயுதம் பொறித்த இந்துத்துவா அடையாளமான பட்டை நாமம் போன்றவற்றை இடம்பெறச் செய் திருப்பது சாதிமதமற்ற ஜனநாயக நாட்டில் பொதுவான மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.


தகவல் தீக்கதீர்
தொகுப்பு செல்வன்
உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்கருத்துகள்

நா.முத்துநிலவன் இவ்வாறு கூறியுள்ளார்…
புண்ணியம் தேடி வந்த இந்தப் புண்ணியவாளர்கள் ஏன் பாவத்திற்கு ஆளானார்கள்? பரிதாபம் அய்யா