சிம்பு, அனிருத்தை கைது செய்க - உருவபொம்மைகளை எரிப்பீர்!

சென்னையே மழை வெளள துயத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நேரத்தில் அசிங்கமான கரியத்தில் சிம்பும், அனிருத்தும் ஈடுபட்டிரு க்கிறார்கள்.எவன் செத்த எனக்கென்ன என்ற மனநிலையில் தங்களின் பப்ளிசிட்டிக்காக கீழ்த்தரமான செயலை செய்திருக்கிறார்கள்.  இவரிகளின் செயலுக்கு பல அமைப்புகள் கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளன.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை...

 கடந்த 3 நாட்களாக திரைப்பட நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இணைந்து எழுதி இசையமைத்த பீப்பாடல் ஒன்று யு டியூப்பில் வெளிவந்துள்ளது. இப்பாடல் வரிகள், பெண்ணின் உறுப்பை மையப்படுத்தி வக்கிரமான வார்த்தைகளால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரது இழிவான இச்செயலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது.பொதுவாக இப்படிப்பட்ட பீப் பாடல்களை சிறு குழந்தைகள் கூட அர்த்தம் புரியாமல் பாடுகின்ற நிலை ஏற்படும். இச்சமூகத்தில் உள்ள சரிபாதி பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் காலகட்டத்தில் இவர்களது படுமோசமான ஆபாசப் பாடல், பெண்கள் மீதான வக்கிரமான பார்வையை மேலும் மேலும் தூண்டும்.

இப்பாடல் குறித்து பல்வேறு பெண்கள்அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், பொது மக்களும் சமூகவலைத்தளங் களில் தங்களது கடுமையான ஆட்சேபணையை பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த ஆட் சேபணைகளுக்கு பதில் அளித்துள்ள நடிகர்சிம்பு “இப்பாடலை கேட்கப் பிடிக்காதவர்கள் தங்களது காதுகளை மூடிக்கொள்ளுங் கள்” என்றும், இன்னும் ஆணவமான வார்த்தைகளாலும் தனது அகங்காரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய நாட்டில் பிறந்துள்ள ஒவ்வொருவருக்கும் பேசவும், எழுதவும், பாடவும், கருத்துக்களை வெளிப்படுத்தவும் சுதந்திரம் உண்டு; ஆனால் இவ்வ ளவு கீழ்த்தரமான முறையில் பெண்கள் குறித்து எழுதியிருப்பதை இச்சமூகம் ஒருபோதும் ஏற்காது. தமிழகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல்துறை உடனடியாக தலையீடு செய்துஇப்பாடலைத் தடை செய்வதுடன், இப்படிப்பட்ட வக்கிரமான பாடலை எழுதிய சிம்பு மற்றும் அனிருத் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது.
உருவபொம்மைகளை எரிப்பீர்!
மேலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டக்குழுக்கள், பெண்களை இழிவு படுத்தும் இப்பாடலை எதிர்க்கும் ஜனநாயக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், பெண்கள் அமைப்புகளை இணைத்து சிம்பு, அனிருத் ஆகியோரின் உருவ பொம்மை களை எரிக்கும் போராட்டத்தை நடத்திட வேண்டுமெனகேட்டுக்கொள்கிறோம்.

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

வளர்த்த விதம் சரியில்லை...
v,arulmozhi said…
தமிழகம் முழுவதும் எல்லா ஊர்களிலும் இந்த நாதேரிகள் மீது வழக்கு பதியவேண்டும்.
ஊர் ஊராக கோர்ட்டுக்கு அலையும்போது எப்படி இந்த சில்லரைகளுக்கு குஷிவரும் என்று பார்க்கவேண்டும்.
மனஉளைச்சல்ன்னா என்னான்னு அப்ப தெரியும்.
Yarlpavanan said…
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
http://www.ypvnpubs.com/
  • ரபேல் ஊழல்: எளிமையாகப் புரிந்துகொள்வது எப்படி?
    25.09.2018 - 0 Comments
    ரபேல் விமானம்: என்ன தேவை? இந்தியா கடைசியாக வாங்கியது  சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996-ல்…
  • 'ஏழாம் அறிவு’  திரைக்கதையின் உண்மை வரலாறு என்ன?
    26.09.2011 - 8 Comments
    மணிரத்னம், ஷங்கர் படங்களை போல தற்போத ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கும் கதை தெரிந்து கொள்வ தில் ஆர்வம்…
  •  ஒரு புத்தகம் நம்மை என்ன செய்யும்?
    23.01.2021 - 0 Comments
      நீங்கள் புத்தக  பிரியராக இருக்கலாம், அல்லது புத்கம் என்றாலே ஒட்டம் எடுக்கும் நண்பராக இருக்கலாம் .…
  • உலகத்தின் கடைசி நாள்.....
    03.10.2011 - 2 Comments
    15 -20 ஆண்டுகளுக்கு முன்னாள் ஸ்கைலேப் என்ற அமெரிக்க விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி…
  • காமராஜரும் மோடியும் ஒரே சிந்தனை உடையவர்களாம்-  வெங்கய்யா நாயுடு
    16.07.2015 - 1 Comments
    காமராஜரின் 113 வதுபிறந்த தின விழா விருதுநகரில் கொண்டாடப்பட் டது. ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பினர்,…