செவ்வாய் கிரகம் சென்று வந்தேன்...

 

நேற்று மதியம் 2.40 மணியிலிருந்து 5 மணி வரை செவ்வாய் கிரகத்தில் தான் இருந்தேன்.
த மார்ஷியன் படம் செவ்வாய் கிரத்திற்கு சென்று வந்த அனுபவத்தை கொடுத்திருக்கிறது.3டி படம் ... படம் பார்ப்பவர்களை செவ்வாய்கிரகத்திற்கே அழைச்சென்றுவிடுகிறது படக்காட்சிகள்.
           எதோ ஒரு பலைவனத்தில் படம்மாக்கபட்ட த மார்ஷின் படம் பார்வையாளர்களை செவ்வாய் கிரகத்தில் கதை நடப்பதாக சரியாக நம்ப வைக்கிறது. படத்தில் செவ்வாய் கிரக காட்சிகள் அருமை படமாக்கப்பட்டுள்ளன.
            நாசா வெளியிட்டுள்ள செவ்வாய் கிரத்தன் அசல் புகைப்படங்களை பார்த்திருக்கிறேன், அதை அப்படியே படத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். கதை மிகச்சிறியது தான் , கதை என்ன என்பதற்கு முன்னால் படத்தின் சில காட்சிகள் பற்றி...


1. -200 டிகிரிக்கு மேல் குளிர்ந்த பாலை வனமான செவ்வாய் கிரத்தை அழகாக படமாக்கியிருக்கிறார்கள்.

2.செவ்வாய் கிரத்தில் தனித்து விடப்படும் கதை நாயகன் அங்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறான்  காட்டும் காட்சிகள்

3. செவ்வாய் கிரகத்தில் உருளை கிழங்கு சாகுபடி செய்யும் காட்சிகள்.



4. பூமி அளவுக்கு பெரிய கிரகமான செவ்வாயில் ஒற்றை மனிதனாக கதைநாயகனின் போராட்டம்.

5.செவ்வாய் கிரத்திலிருந்து பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் காட்சிகள்.

6.பூமியில் இருப்பவர்கள் 140 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில்
செவ்வாயில் இருக்கும் கதை நாயகனை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள்.

7.செவ்வாயிலிருந்து கதை நாயகனை காப்பாற்றும் கடைசி நேர கிளைமாக்ஸ் காட்சிகள்.



 இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு சயின்ஸ் திரில்லர் படம் பார்த்த அனுபவம். கடைசியில் கதைநாயகன் காப்பாற்ற எடுக்கும் முயற்சியில் தியோட்டரில் வீசில்களும் கைதைட்டல்களும் காதை பிளந்தது.சுமார் 108 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 3 நாட்களில்   100.2 மில்லியன் டாலர்களை உலகவில் வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது.


இன்றையவானத்தில் 
வந்துள்ள செவ்வாய் பற்றி பதிவுகள்...


1.செவ்வாயை சுத்திகாட்டுறேன் வாங்க...






7.நாளை பூமியை நெருங்குகிறது செவ்வாய் கிரகம்



 சுருக்கமாக கதை...




செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சி செய்ய ஒரு குழுவினர் செல்கின்றனர். அங்கு வீசும் கடுமையான பனிப்புயலில் ஹீரோ மாட் டாமன் மாட்டிக் கொள்கிறார். அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து அவரை அங்கேயே விட்டு வந்து விடுகின்றனர். தனியாக மாட்டிக் கொள்ளும் ஹீரோ தான் உயிரோடு இருப்பதை பூமிக்கு தொடர்பு கொண்டு சொல்ல முயற்சிக்கிறார்.நாசா விஞ்ஞானிகள் அவரைக் காப்பாற்ற முயற்சிக்க, அவருடன் பணிப் புரிந்த சக ஆராய்ச்சியாளர்கள் அந்த காப்பாற்றும் முயற்சியை முறியடிக்க முயற்சி செய்கிறார்கள். இந்த சூழ் நிலையில் சர்வதேச நாடுகள் மாட் டாமன் பூமிக்கு திரும்ப வர முயற்சி மேற்கொள்கின்றன. அவர்களின் முயற்சி வெற்றிபெற்றதா? ஹீரோ பூமிக்குத் திரும்பினாரா என்பதுதான் கிளைமாக்ஸ்.

செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments