ஜி-மெயிலில் தேவையற்ற ஐ.டி.க்களை பிளாக் செய்ய புது வசதி

தேவையில்லாமல், மலை போல வந்து குவியும் மெயில்களில் இருந்து விடுதலை பெறும் வகையில், ஜி-மெயில் ‘பிளாக்’ மற்றும் ‘அன்சப்ஸ்கிரைப்’ ஆகிய பொத்தான்களை அறிமு கப்படுத்தி உள் ளது.கணி ப்பொறிகளில் அறிமுகப்படு த்தப்பட்டுள்ள இவ்வசதி, ஒரு வாரத்தில் செல்பேசியின் ஆண்ட்ராய்டு தளத்திற்கும் விரிவுபடுத்தப்படும்.இதுகுறித்து கூகுள் நிறுவன உற்பத்தி மேலாளர் ஸ்ரீ ஹர்ஷா சோமாஞ்சி .....:
சில சமயங்களில் உங்களுக்கு விரும்பத்தகாத மெயில்கள் வரலாம். இது அடிக்கடி ஏற்பட்டிருக்காது என்று நம்புகிறோம். ஆனால் அத்தகைய சம்பவங்கள் இனிமேல் நடந்தால், ‘இந்த பயனரிடம் இருந்து எனக்கு செய்திகள் வரவேண்டாம்‘ என்று உங்களால் தைரியமாகச் சொல்லமுடியும்.

அதாவது உங்களால் அத்தகைய நபர்களை பிளாக் செய்யமுடியும். இந்த வசதி இன்றிலிருந்து கணினிகளிலும், ஒரு வாரத்துக்குள் ஆண்ட்ராய்ட் தளத்திலும் அறிமுகமாகும்.பிளாக் செய்யப்பட்ட மெயில்கள் யாவும், ‘ஸ்பேம்‘ எனப்படும் தேவையில்லாத ஃபோல்டரில் இருக்கும். பயனாளிகள் மனம் மாறி, அந்த மெயிலைப் பார்க்கவேண்டும் என்றால் திரும்பவும் அன்பிளாக் செய்துகொள்ளலாம்.இந்த வசதியோடு, ‘அன்சப்ஸ்கிரைப்’ வசதியும் ஆண்ட்ராய்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் உங்களுக்குத் தேவையில்லாத செய்திகளை நேரடியாக ஜி-மெயிலில் இருந்தே அன்சப்ஸ்கிரைப் செய்துவிடலாம். முன்னாள் நீங்கள் சப்ஸ்கிரைப் செய்திருந்த செய்திகளையும் இனிமேல் நீங்கள் படிக்கத் தேவையிருக்காது” என்றார்.கடந்த ஜூன் மாதம், கூகுள் நிறுவனம், அனுப்பப்பட்ட மெயிலை, 30 விநாடிகளுக்குள்ளாகத் திரும்பப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்



Comments

  • செவ்வாய் கிரகம் சென்று வந்தேன்...
    06.10.2015 - 0 Comments
      நேற்று மதியம் 2.40 மணியிலிருந்து 5 மணி வரை செவ்வாய் கிரகத்தில் தான் இருந்தேன். த மார்ஷியன் படம்…
  • தமிழில் பேசும் படத்திற்கு வயது 80
    02.11.2011 - 0 Comments
    தமிழகத்திற்கு இன்றைய நேற்றைய முதல்வர்களை கொடுத்தது சினிமாதான். ஏன், நாளைய முதல்வர்களை தமிழ்சினிமா உருவாக்கி…
  • காளையார் கோயில் அருகே 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து பொறித்த பானையோடு கண்டுபிடிப்பு.
    01.11.2022 - 0 Comments
     சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில்  பாண்டியன் கோட்டையில் 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து…
  • தேனில் விழுந்த தேமுதிக: பிரேமலதா
    30.03.2016 - 1 Comments
    கண்ணாமுச்சி காட்டிய தமிழக கட்சிகள் ஒருவழியாக இல்லை இல்லை வேறுவழியில்லை தேர்தல் நெருங்கி…
  • மீண்டும் தேர்தல் திருவிழா
    03.10.2011 - 0 Comments
    சட்டமன்ற தேர்தலில் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்ட மை அழிவதற்கு முன்னால் தமிழகத்தில் மீண்டும் தேர்தல் திருவிழா…