திப்பு சுல்தான் படத்தில் ரஜினி நடிக்க கூடாது..ராமகோபாலன் மிரட்டல்

ரஜினிக்கும் நமக்கும் ஆயிரம் பிரச்சனையிருக்கலாம் ஆனால் இந்த படத்தில் நடிக்கலாம் ,நடிக்ககூடாது என சொல்ல ராமகோபாலன் யார்?
பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்து வீரம்செறிந்த போர்களை நடத்தி, மகத் தான தியாகம் செய்த திப்பு சுல்தான் பற்றிய திரைப்படத்தில்   ரஜினிகாந்த் நடிக்கக்கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ள மதவெறியர் களுக்கு எப்படி வந்தது இந்த தைரியம்?
இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் 10.9.2015 அன்று பத்திரிகைகளுக்கு அளித்துள்ள அறிக்கையில், ‘‘திப்பு சுல்தான் ஒரு இந்து மத விரோதி; தமிழர்விரோதி. அவரைப் பற்றி எடுக்கும் கன்னட திரைப்படத்தில் ரஜினி காந்த் நடிக்கக் கூடாது, தமிழ் திரைப்படைத்துறையினர் யாரும் அப்படத் திற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது, ஒரு வேளை அப்படம் வேறு மாநிலத்தில் தயாரிக்கப்பட்டால் அதை தமிழகத் தில் திரையிடக்கூடாது’’ என்று தெரிவித் துள்ளார்.
பாஜகவின் தலைவர்களில் ஒருவரான இல. கணேசனும் இராம கோபாலனின் கருத்திற்கு ஆதரவு தெரி வித்துள்ளார்.
படைப்புச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்தை முடக்க முயலும் இராமகோபாலனின் அறிக்கை மற்றும் இல. கணேசன் கருத்துக்கள் மிகுந்த கண்டனத்திற்குரியவை.முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக, வரலாற்றை புரட்டிப்போடுகிற, திரித்துச் சொல்லுகிற ஒரு வேலையை இராமகோபாலன் செய்திருக்கிறார்.

தியாகத்தின் அடையாளம் திப்பு

திப்புசுல்தான் என்றாலே ஆங்கி லேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்த் தியாகம் செய்தவர் என்பதும், மதநல்லிணக்கத்தைப் பேணியவர், இந்துக் கோயில்களைப் பாதுகாத்தவர் என்பதும்தான் அடையாளமாக இருக்கிறது. அதைச் சீர்குலைப்பதற்காகவே இராமகோபாலன் முயற்சித்துள்ளார். ஆங்கிலேயர்களை எதிர்த்தபோராட்டத்தில் திப்புசுல்தானின் பங்கு வரலாற்று ஆசிரியர்களாலும், ஆய்வாளர்களாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி 1799ம் ஆண்டு மே 4-ந் தேதி போர்க்களத்திலேயே மடிந்தவர் திப்பு சுல்தான்

இந்துக் கோயில்களுக்குப் பொருளுதவி செய்தவர்

திப்புசுல்தான் -சிருங்கேரி சங்கராச்சரியார்களுக்கு இடையேயான 30 கடிதப் போக்குவரத்துக்கள் 1916ல் தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டன. மதநல்லிணக்கத்தைப் போற்றி பாதுகாத்த மன்னனாக திப்புசுல்தான்திகழ்ந்தார் என்பதற்கான சான்றுகளாக அவை திகழ்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதர்ஆலயம் உட்பட 150க்கும் மேற்பட்ட இந்து கோயில்களுக்கு திப்புசுல்தான் நிரந்தரமாக தனது கஜானாவிலிருந்து பொருளுதவி செய்து கொண்டிருந்தார் என்பதும் ஆய்வாளர்களால் ஆவணங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய ஒருவரை மதவெறியராக, தமிழர் விரோதியாக சித்தரிக்கும் இராமகோபாலனின் அறிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தியாகமோ, துரோகமோ அதற்கு மதச்சாயம் பூசுவதைதேசபக்தர்களும், மக்கள் நலன்நாடும் அமைப்புகளும், மதச்சார்பற்ற அரசியல் இயக்கங்களும் ஏற்கமாட்டார்கள்.

தேர் எரிக்கப்பட்ட போது எங்கே போனீர்கள்?

விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரத்தில் மாரியம்மன் கோவில் தேர் முற்றிலுமாக எரிக்கப்பட்டபோது இராமகோபாலனுக்கு கோபம் வரவில்லை.தலித்துகள் 7 பேரின் குடிசைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டபோது அதற்காக குரல் கொடுக்க இராமகோபாலனுக்கு நேரமில்லை. ஏனென்றால் அவரது அகராதியில் தலித்துகளும் அவர்கள் வழிபடும் தெய்வங்களும் ‘இந்துக்கள்’ பட்டியலில் சேராது. பற்றி எரியும் மக்கள் பிரச்சனைகளின் மீது வாய்மூடி மௌனம் காக்கும் இத்தகைய நபர்களும், அமைப்புகளும் அந்தப் பிரச்சனைகளிலிருந்து மக்களின்கவனத்தை திசை திருப்புவதற்காக பொய்களையும், புனை சுருட்டுக்களையும் அள்ளி வீசுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.

தகவல் :தீக்கதீர்
தொகுப்பு: செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam இவ்வாறு கூறியுள்ளார்…
சிறந்த பதிவு
தொடருங்கள்

http://www.ypvnpubs.com/
மலரின் நினைவுகள் இவ்வாறு கூறியுள்ளார்…
ரஜினியைப் பத்தி ஏதாவது சொன்னா தம் பேரு நியூஸ்ல வருமன்ற அரிப்பு...,