11 ஆக., 2015

15 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் புதிய சாதனை

"என்னால் சும்மா இருக்கமுடியாது"  என்ற படியே தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார் கமல். இன்றைய இளம் நாயகர்களே வருடத்திற்கு ஒன்று என நடித்துவரும் நிலையில் கமல் ஒரே  வருடத்தில் 3 படங்கங்கள் நடித்து திரையுலகில் சாதனைக்கு மேல் சாதனை படைத்துள்ளார். படத்துக்குப்படம் புதிய பரிமாணத்தில் வந்து அசத்துகிறார்.

ஆரம்ப காலத்தில் கமல் நடித்த படங்கள் ஒரே வருடத்தில் 5 முதல் 7 வரை ரிலீஸ் ஆகி இருக்கின்றன. பின்னர் அவர் தனது வேடத்தில் தீவிர கவனம் செலுத்தியதால் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள்தான் வெளியாகின.தனது தோற்றத்தை மாற்ற ஆகும் கால இடைவெளியால் நிண்ட இடைவெளி விழுந்தது.
1995–ம் ஆண்டு கமல் நடித்த ‘குருதிப்புனல்’, ‘சதிலீலாவதி’, சுப சங்கல்பம் (தெலுங்கு) ஆகிய 3 படங்கள் வெளியாகின. அடுத்து 5 ஆண்டுகள் கழித்து 2000–ஆவது ஆண்டில் ‘தென்னாலி’, ஹேராம் தமிழ், இந்தி ஆகிய 3 படங்கள் வெளியாகின.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு கமல் திரைப்படங்கள் வெளியாகும் வேகம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே ‘உத்தமவில்லன்’, பாபநாசம் ஆகிய படங்கள் வெளிவந்து விட்டன.
இப்போது, ‘தூங்காவனம்’ படப்பிடிப்பும் முடிந்து விட்டது. தொழில் நுட்ப வேலைகளும் தொடங்கி விட்டன. இந்த படமும் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் ரிலீஸ் ஆகிவிடும் என்று இந்த படக்குழுவினர் உறுதியாக தெரிவிக்கின்றனர்.கமலின் இந்த வேகத்துக்கு பின்னால் புதிய மெக திட்டம் இருப்பதாக சொல்கிறார்கள்..
மருதநாயகம் படத்தையோ ... அல்லது சயிப் அலிகானை வைத்து எடுக்கப்படும்  இந்தி படம் முடிய இரண்டு வருடங்களாகுமாம் அதற்காகத்தான் என்கிறார்கள்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கமலின் 3 படங்கள் வெளியாதை அவரது ரசிகர்கள் சாதனையாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Related Posts Plugin for WordPress, Blogger...