7 மே, 2015

நேர்த்திக்கடன் செலுத்த மாறுவேடங்களில் வந்த பக்தர்கள்....

மதுரையில் இப்போது தான் சித்திரை திருவிழா முடிந் துள்ளது.கள்ளழகர்  வைகை ஆற்றில் இறங்கும் போது கள்ளழகர் வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.அதே போல திண்டுக்கல் மாவட்டத்தில் கடவுளுக்கு விளக்கமாறு காணிக்கை செலுத்துகிறார்கள். மதுரை மாவட்டத்தின் எல்லையில் உள்ள  டி.கல்லுப்பட்டி புதுமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறுவிதமான மாறுவேடங்களில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்

 மதுரை -திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டி, மெயின்ரோட்டில் 300ஆண்டுகால பழமைவாய்ந்த புதுமாரியம்மன் கோவில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் சித்திரைதிருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.இவ்விழாவின் முக்கியநிகழ்வாக பக்தர்கள் பல்வேறுவேடங்களில் ஆடிப்பாடி மகிழ்ந்து நேர்த்திக்கடன் செலுத்திடும் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது டி.கல்லுப்பட்டியின் சுற்றுப்புற 48கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேவலோக கடவுளர்கள்,பழங்கால அரசர்கள், ராட்சதர்கள்,பேய்,பிசாசுகள்,அரக்கிகள்,பிச்சைக்காரர்கள்,விபத்தில் கிடக்கும் பிணங்கள்,வெளிநாட்டு இன்னிசை குழுவினர் மற்றும் பெண்கள் போன்று வேடமிட்டு அலங்காரவண்டிகளில் ஊர்வலமாக வந்து கோவிலையடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

 விளக்குமாறு வழங்கும் 

1.இறைவனுக்கு காணிக்கையாக விளக்குமாறு வழங்கும் வினோத திருவிழாஇதையடுத்து மாட்டுவண்டியில் சீர்வரிசை சாமான்கள் ஏற்றப்பட்டு புதுப்பொண்ணு மாப்பிள்ளை வண்டி ஊர்வலம் அலங்கார வண்டிகளில் கடவுளர்கள் பின்தொடர கோவிலை வந்தடைந்தது.அதன்பின்னர் கோவிலில் வேண்டுதல் நிறைவேறிய 500க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி சாமிதரிசனம் செய்தனர்.பிறகு ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடுநடத்தினர்.தசரா திருவிழா போல் நடைபெற்ற இந்த புதுமையான புதுமாரியம்மன் கோவில்விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மாறுவேடங்களை ரசித்ததுடன் வழிபாடும் நடத்திச் சென்றனர்.
 விளக்கமாறு காணிக்கை , மாறுவேடம்  இப்படி கடவுளை கூம்பிட பல வழிகள் ...
தகவல் 
செல்வராஜ்
தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...