இந்தியாவை அவமதிக்கும் மோடியின் பேச்சு - ட்விட்டரில் கொந்தளிப்பு

வெளிநாடு வாழ் இந்தியரே வருக வருக ன்னு யாருக்கு போர்ட் வச்சிருக்கீங்க..
நம்ம் பிரதமர் மோடிக்கு தான்... வார இதழ் ஒன்றில் நான் படித்த காமடி இது ...காமடி என்பதை விட  உண்மை .
தனது ஒராண்டு ஆட்சியில் 7 முறையாக வெளிநாடுகளில் சுற்றி கொண்டிருக்கிறார். வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வரவே இந்த பயணம் என்கிறார். கடந்த ஓராண்டில் திட்டங்கள் பலவற்றை அறிவித்தார்களே  ஒழிய நடைமுறையில் அவை செயல்படுத்தபடவில்லை. கடைசியாக சுற்றுபயணம் போன சீனாவில் அவர் பேசிய பேச்சு  இந்திய மற்றும் வெளிநாட்டு இந்தியர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தி இந்து தமிழில் வந்துள்ள தகவல்...


வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை இந்தியர்கள் என்று கூறவே வெட்கப்பட்டதாகவும், தனது ஆட்சிக்கு பிறகு அந்த நிலை மாறிவிட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பேசியது சமூக வலைதளங்களில் இந்தியர்களை மிகுந்த அதிருப்தி அடையச் செய்துள்ளது.

வெளிநாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி சீனாவுக்கும் தென் கொரியாவுக்கு சென்றார். அங்கு அவர் பேசும்போது, "முன்பெல்லாம் இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களைத்தான் நான் பார்த்தேன். கடந்த ஓராண்டாக, இந்தியர்களாக தங்களை பெருமிதத்துடன் பார்க்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களை நான் செல்லும் வெளிநாடுகளில் பார்க்கிறேன்" என்று தனது ஆட்சியைக் குறிப்பிட்டு பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு, இந்தியர்களை அவமதிக்கும் விதத்தில் உள்ளது என சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான பதிவுகள் கொட்டப்படு வருகின்றன.

ட்விட்டர்வாசிகளின் சாடல்களால் உலக அளவில் மோடியின் கருத்தைத் தாக்கும் விதமாக #ModiInsultsIndia என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் வந்தது. சர்வதேச அளவில் பல பகுதிகளில் வாழும் இந்தியர்களும் இந்த ஹேஷ்டேகில் தங்களது தேசப்பற்றை பிரதமருக்கு எதிராக கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

அவற்றிலிருந்து சில கருத்துக்கள்

janakiraman ‏@periyakulam - காக்கையால் குயில் போல பாட முடியாது. தவறான சிந்தனை கொண்டவரால் இனிமையான வார்த்தைகளை பேச முடியாது.

कोमल :) ‏@Komal_Indian - பிரதமர் பதவிக்கு நான் மதிப்பளிக்கிறேன். ஆனால் சுய துதிபாடல் பாடும் ஒருவரால் நாட்டுக்கு எந்த பெருமையும் இல்லை. மன்னியுங்கள் மோடி.

Jothimani ‏@jothims - ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்து இந்தியாவை காப்பாற்றினார்கள். இந்தியா என்பது பல கோடி மக்கள் மற்றும் மிகச் சிறந்த தலைவர்களின் உழைப்பு மற்றும் கனவினால் உருவானது. நீங்கள் எங்களை அவமதிக்காதீர்கள்.

नवेन्दु ‏@NavenduSingh_ - இந்தியனாக இருப்பதில் நான் பெருமையடைகிறேன். வருத்தம் என்னவென்றால் நாட்டின் 31% மக்கள் உங்களை பிரதமராக தேர்வு செய்ததுதான்.

Arun Nambiar ‏@aruns_nambiar - முன்னாள் அமெரிக்க அதிபர் ஜியார்ஜ் புஷ், இத்தாலி நாட்டின் பெர்லுஸ்கோனி ஆகியோர் தங்களது நாட்டு மக்களை அவமதித்தது போலதான் இதுவும். நாங்கள் இதையும் கடந்து வருவோம்.

FreedomFighterz ‏@PuliArason - டியர் @narendramodi உங்களுக்கு உலகம் முழுவதும் சுற்ற வேண்டுமென்றால் சுற்றுங்கள். உங்களைப் பற்றி மட்டும் பேசுங்கள். நிறைய பேசுங்கள். ஆனால் எங்களை அவமதிக்காதீர்கள்.

WithRG ‏@withRG - ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்தாலும் வியர்வை துளியாலும் ஆனது தான் இந்தியா. வெளிநாட்டுக்கு சென்ற பிரதமர் இப்படி பேசி இருப்பது வருத்தமளிக்கிறது.

Saloni ‏@Saloni_shines - இந்தியாவால் வெட்கப்படுகிறார் பிரதமர். அதனால் தான் வெளிநாடுகளிலேயே பிரதமர் உள்ளார். கூகுள் தரும் தகவலை பாருங்கள்.





Dr.Nitibhushansingh ‏@Nitinchandel1 - #ModiInsultsIndia செல்ஃபி எடுக்கவும் செல்ஃபிஷாக பேசவும் மட்டுமே நீங்கள் உள்ளீர்கள். அதனால் தான் நீங்கள் இந்தியாவை அவமதிக்கிறீர்கள். இந்தியா என்பது என்றுமே எப்போதுமே பெருமைக்குரியது தான்.

Neil ‏@humanbeing2014 - இந்த ட்ரெண்டுக்கு பதிலாக நாம் அனைவரும் #ModiDontComeBack இதனை ட்ரெண்ட் செய்ய வேண்டும்.

Pee Politics :) ‏@VAvinash - #ModiInsultsIndia. யாராவது மோடியிடம் கூற வேண்டும். தேர்தல் முடிந்துவிட்டது. அவர் பிரதமராகி ஒரு வருடமாகிறது. வெத்து வெற்றி பேச்சு போதும். கொஞ்சம் ஏதேனும் வேலை இருந்தால் பாருஙக்ள்.

JoginderRawat ‏@joginderrawat - வெளிநாட்டு சென்று நம்மை அவமதித்த முதல் பிரதமர் மோடி தான். இந்தியர்கள் இந்தியர்களாக இருப்பதில் என்றுமே பெருமிதம் கொள்வார்கள்.

Syed Ahmar @SM_Ahmar - இந்தியாவில் பிறந்ததற்காக வருத்தப்படும் மோடி மற்றும் அவரது பக்தர்கள் நாட்டைவிட்டே வெளியேறலாம். நாங்கள் உங்களை எங்கள் நாட்டில் வைத்துக்கொள்வதை அவமதிப்பாக கருதுகிறோம்.

Mohammed Meeran @meerane - எந்த கட்சி நாட்டை ஆட்சி செய்தாலும் நாங்கள் இந்தியாவை நேசிப்போம் மோடி அவர்களே.

Manoj Kumar Sahu @ManojSahuG - பிரிட்டிஷ் இந்தியாவுக்கு பின்னர் இந்தியாவை குண்டர்களும் முட்டாள்களுமே ஆட்சி செய்வார்கள் என்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறினார். அவர் இந்த மோடி சர்க்காரை தான் குறிப்பிட்டார் போலும்.

Vinod Mehta @DrunkVinodMehta - 125 கோடி இந்தியர்களின் மனநிலையும் ஒன்றுதான். மோடி ஆட்சி எப்போதும் முடியும், இந்தியாவின் பிரதமராக இருக்க பெருமை கொள்ளும் ஒருவரை எப்போது தேர்ந்தெடுக்கலாம் என்று அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறோம்.

அகிலன் கார்த்திகேயன் @akilankg - மோடியை எதிர்ப்பவர் எதிர் தேசியவாதிகள், இந்தியாவை கீழ்மைப்படுத்தி பேசும் மோடியை ஆதரித்தால் தேசியவாதிகள். ### சரிதான்!!! #ModiInsultsIndia


தொகுப்பு

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

மிகுந்த அவமானம்...
  • இலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில்  ஒரு கோயில்
    12.03.2018 - 5 Comments
    எம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை…
  • தமிழர்கள் படிக்க வேண்டிய நூல் இலவசமாக...
    06.03.2017 - 1 Comments
    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா ... தமிழனுக்கு கொன்று ஒரு குணம் உண்டு என்று சிலேடைகள் முலம்…
  • பிரபாகரன் மகனை அருகில் நிற்க வைத்துச் சுட்டனர்:  சேனல்-4  அதிர்ச்சி  தகவல்
    17.03.2012 - 1 Comments
    “இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனை அருகில் நிற்க வைத்துச் சுட்டுக்…
  • சார் காலண்டர் வாங்கிட்டிங்களா?
    27.01.2014 - 2 Comments
    ஒரு டீ போடுப்பா... டீ ஆர்டர் கொடுத்துவிட்டு பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தேன்.. சார் காலண்டர் வாங்கிட்…
  • நேருவின் ‘ஆதிவாசி மனைவி’
    13.06.2012 - 1 Comments
    பஞ்சட் அணையைத் திறந்து வைப்பதற்காக 1959 டிசம்பர் 6ந்தேதி வருகை புரிந்த அன்றைய பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேருவை…