கொம்பன் படத்திற்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு... சரிதானா?

விஸ்வரூபம் படத்தில் துவங்கி ... தொடந்து படங்களுக்கு தடை கோருவது வாடிக்கையாகி வருகிறது. நன்றாக கவனித்து பார்த்தால் எல்லாபடங்களுக்கும் பிரச்சனை வருவதில்லை. பெரிய நடிகர்கள்.வசதியான நடிகர்கள், பெரிய பட வெளியீட்டு நிறுவனமாக பார்த்து  எதிப்பை தெரிவிக்கிறார்கள்.
          கடைசியாக ராஜபக்சேவுக்கு தொடர்பு இருப்பதாக விஜய் நடித்த படத்திற்கு எதிப்பு தெரிவித்தார்கள்.  இப்போது கொம்பன்....

           கார்த்தி, லட்சுமி மேனன் நடித்துள்ள 'கொம்பன்' திரைப்படத்தில் சாதிய ரீதியாக சில சர்ச்சைகள் உள்ளதால் இப்படத்தை மறுதணிக்கை செய்யவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி  பேசியிருக்கிறார்.

கார்த்தி, லட்சுமி மேனன் ,ராஜ்கிரண், கோவை சரளா, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில்  நடித்துள்ள படம் கொம்பன். குட்டிப்புலி' இயக்குநர் முத்தையாவின் இரண்டாவது படம் .
சமீபத்தில் 'கொம்பன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ட்ரெய்லருக்கு இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மார்ச் 27-ம் தேதி 'கொம்பன்' திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'கொம்பன்' படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.

கொம்பன் சூட்டிங் ஸ்பாட்  படங்கள் பார்க்க...
இங்கே சொடுக்கவும்


'' 'கொம்பன்' திரைப்படத்தில் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு வன்முறையான வசனங்கள் இருப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். அந்தப் படம் ஒரு சிலரை உயர்த்தியும், பல்வேறு சிறுபான்மையினரை தாழ்த்தியும் கொடுஞ்சொற்களால் வசனங்கள் இருக்கின்றன.

           மேற்கண்ட அவரது தகவல் படி படத்தை இன்னும் அவர் பார்க்கவில்லை.என்பது தெளிவாக தெரிகிறது. படம் வெளிவருவதற்கு முன்னால்  ஆதாரம் இல்லாமல் ... அவரசப்பட்டு இப்படி பேசுவது கிருஷ்ணசாமிக்கு சரியாக படுகிறதா?

இந்த படத்துக்கு திரைப்பட தணிக்கை குழு அனுமதி அளித்து இருந்தால் அது தவறானது.  என்கிறார் ...   கிருஷ்ணசாமி .தணிக்கை குழு அனுமதித்த பிறகு ஓரு படத்திற்கு எதிப்பு தெரிவிப்பது நியாயமா?           படங்கள்  வெளிவரும் போது மட்டுமே தணிக்கை குழு குறித்து விமர்சிப்பவர்கள்       அந்த குழுவை  சரிய செய்ய முயற்சிப்பதே இல்லை? அது ஏன்? படங்கள் தடை கோருவதன் மூலம் விளம்பரம் தேடி கொள்ளவா? அல்லது வேறு ஏதேனும் கை மாறுகிறதா?

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments