அரசு வேலை வேண்டுமா?

நீங்கள் அரசு வேலையில் சேர விரும்புகிறீர்களா? மிக மிக எளிதாக அரசு வேலை வாங்கலாம். கால்காசா (காலாணா) இருந்தாலும்  கவுர்மெண்ட் காசா இருக்கணும் என்பது  பழமொழி... அதற்கேற்ப டி.என்.பி.சி பரீட்சை எழுதி வேலை வாங்குவதை விட குறுக்குவழியில் வேலைவாங்கலாம்.குமாஸ்தா வேலைக்கு ரூ.18 லட்சம்.பள்ளி ஆசிரியர் என்றால் ரூ. 20 லட்சத்திற்கு மேல்,கல்லூரி ஆசிரியர் என்றால் ரூ.40லட்சம் . வேலையில் இட மாற்றத்திற்கு ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வாங்கப்படுகிறது உங்களுக்கு எந்த வேலைக்குவிரும்பமோ சம்பந்தபட்டவரை அணுகி வாங்கலாம்...

வேலை நியமனம், பதவி உயர்வு, இடமாற்றங்கள் போன்றவற்றில் தமிழகம் லஞ்சம் ஊழலில் தமிழகமே முதலிடம்  லட்சங்களும் கோடிகளும் தீர்மானிக்க்கிறது.
திருநெல்வேலியில் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியின் நெருக்கடி காரணமாக முத்துகுமாரசுவாமி என்ற வேளாண் துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.தொடர்ந்து தமிழகத்தில் பல துறைகளில் பெருக்கெடுத்துள்ள லஞ்சம் - ஊழல் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.தமிழகத்தையே உலுக்கிய வேளாண் அதிகாரி தற்கொலைச் சம்பவத்தினைத் தொடர்ந்து அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி பதவிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால்இதுபோன்ற பல கிருஷ்ணமூர்த்திகளால் மன உளைச்சலுக்குள்ளான நேர்மையான அரசு ஊழியர்கள்மனம் குமுறிக் கொண்டிருக்கின் றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்துஅரசு நிர்வாகம், பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இது வரை புரையோடிப்போயிருந்த லஞ்ச ஊழல்கள் வெளிச்சத்திற்குவரத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக `டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் ...ஒவ்வொரு அரசுத் துறையும் இது போன்ற அதிர்ச்சிகரமான விசயங்களைக்கொண்டுள்ளது. சில காலங்களுக்கு முன்னதாக செல்வாக்குமிக்க பெரும்புள்ளி ஒருவர் அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள் மற்றும் செயலர்கள் ஆகியோரைக் கொண்டு கூட்டம்ஒன்றை நடத்தினார்.

இந்த கூட்டத்தின் நோக்கமே, உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம் பணம் பார்ப்பதாகும். இந்த கூட்டத்தில் உதவிப் பேராசிரியர் வேலைக்கு ரூ.7 லட்சம் கேட்டதாக கூறப்பட்டது. அதேபோல காவல் துறையில் இட மாற்றங்களுக்கு நகரைப் பொறுத்தும் இடத்தைப் பொறுத்தும் ரூ.4 லட்சம் முதல் 10 லட்சம்வரை பெறப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாளிதழில் மிகக்குறைவாகவே லஞ்சத் தொகை குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரம் கூறுகின்றது.

பெயர் வெளியிட விரும்பாதசில அதிகாரிகள் கூறியுள்ளதாவது:சாதாரணமாக ஒரு அரசுத் துறை வேலை எனில் அது குமாஸ்தாவாக இருக்கும் பட்சத்தில் ரூ.18 லட்சத்திற்கு குறைவதில்லை, பள்ளி ஆசிரியர் என்றால் ரூ. 20 லட்சத்திற்கு மேல்,கல்லூரி ஆசிரியர் என்றால் ரூ.40லட்சம் என்றும் பரவலான நடைமுறை உள்ளது. இட மாற்றத்திற்கு ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வாங்கப்படுகிறது.
                    நீங்கள்  எவ்வளவு கொடுப்பீங்க...? உங்களுக்கு என்ன வேலை வேண்டும்? அல்லது  இடமாற்றம் வேண்டுமா?
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

2 மாஸ்டர் டிகிரி முடித்து டாக்டரேட் முடித்த எனது உறவினருக்கும் இதே கொடுமை சமீபத்தில்... நாடு வெளங்கிடும்...!
  • தலையில்லா முண்டம் தண்ணி கேட்குதாம்...
    24.05.2013 - 0 Comments
    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விமான நிலையச் சாலையில் தலையில்லா முண்டம் உலவுவதாக கிளம்பிய வதந்தியைத்…
  • திப்பு சுல்தான்  படத்தில் ரஜினி நடிக்க கூடாது..ராமகோபாலன் மிரட்டல்
    13.09.2015 - 2 Comments
    ரஜினிக்கும் நமக்கும் ஆயிரம் பிரச்சனையிருக்கலாம் ஆனால் இந்த படத்தில் நடிக்கலாம் ,நடிக்ககூடாது என…
  • ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு நகல் இலவச டவுன்லோட் செய்ய...
    04.10.2014 - 1 Comments
    செப்.28ல் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.…
  • மழைப்பயணமாக மாறிய மலைப்பயணம்
    06.12.2011 - 5 Comments
    வரிச்சியூர் மலைப்பயணத்தில்(கிரீன்வாக்) கலந்து கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மழைபெய்து கொண்டுக்கிற…
  • உலகிலேயே முதல் காகிதமற்ற அரசு  எது தெரியுமா????
    13.12.2021 - 0 Comments
       உலக அளவில் காகித பயன்பாடு முற்றிலும்  குறைந்து வருகிறது.10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட…