ஸ்ரீரங்கம் தேர்தல் வெற்றி ரகசியம்...

இடைதேர்தல் என்றாலே அது ஆளும்கட்சிக்கு தான் சாதகமாக இருக்கும் என்பது எழுதப்படத வீதி. இதில் ஸ்ரீரங்கம் மட்டும் வீதிவிலக்காக இருக்க முடியாது. ஆள்பலம்,பணபலம், அதிகார பலம் உள்ளிட்ட அனைத்தும் பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்யப்படும். தேர்தலின்   போது 10 நாட்களுக்கும் மேலாக அமைச்சர்களிலிருந்து,வட்டச்செயலாளர் வண்டு முருகன்கள் வரை ஸ்ரீரங்கத்தை சுற்றி வளைத்தார்கள்.
               தேர்தல் முடிவுகள்  வெளிவரத்தொடங்கிய காலை நேரத்தில்  தொலைகாட்சியில் யாருக்கு எவ்வளவு ஓட்டுக்கள் என பார்த்துக் கொண்டிருந்தேன். மனைவி சொன்னார்.... அவங்கதான் ஜெயிப்பாங்க ... இது தெரியாத ? என்றார்.

           எல்லாம் திருமங்கலம் பார்மூலா  மூலமா கிடைத்த வெற்றி என்றார் அப்பா... ( திருமங்கலம் பார்மூலா... கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடைத்தேர்தல் நடந்த போது ஒரு ஓட்டுக்கு ரூ4000 முதல் 5000 கொடுக்கபட்ட ஊர் )
                 நாளிதழ் ஒன்றில் பணியாற்றும் நண்பர் சொன்னார் தேர்தல் பிரச்சாரம் நடக்கும் போது ஸ்ரீரங்கம் போயிருந்தேன் ....
         " நாங்கள் உங்களுக்கு தான் ஓட்டு போடுவோம் என்று சொல்லி கட்சிக்காரர்களை தேடி வந்து பணம் வாங்கி செல்வதை பார்த்தேன் என்றார்".அவர் சொன்ன கணக்குபடி

              மாபெரும் வெற்றிக்கு ... ரூ.2000
           டெபாசிட் வாங்க      ........ரூ.500

தேர்தல்  பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த ஒருவாரத்தில் மட்டும் ஸ்ரீரங்கம் பகுதி டாஸ்மாக் விற்பனை ரூ35 ஆயிரம் கோடி .
      இதை பார்க்கும் போது எழுத்தாளர் ஓருவர் (சமஸ் என்று நினைக்கிறேன்) சொன்னது ஞாபகம் வருகிறது
"மக்களை அரசியல்வாதிகள் கெடுத்துவிட்டார்கள்... இப்போது அரசியல்வாதிகளை மக்கள் கெடுத்து கொண்டிருக்கிறார்கள்" ....
வாழ்க ஜனநாகம்... வளர்க தமிழகம்

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

நினைத்த அவர் சொன்னது சரி... மிகச்சரி...
  • சிதறிய தோட்டாக்களும்...      செத்து விழுந்த ஜனநாயகமும்!
    15.09.2011 - 1 Comments
    துப்பாக்கியில் இருந்து சீறிப் பாய்ந்த தோட்டாக்கள் பாய்ந்து சிறிதும், பெரிதுமாய் ஏழு பேர் செத்து விழுந்த…
  • அமீர்கானின் கனவு நிறைவேறுமா ?
    20.06.2012 - 4 Comments
    இந்தி நடிகர் அமீர்கான் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஸ்டார் தொலைக் காட் சியில் சமூகப் பிரச்சனைகளில் சிலவற்றை…
  • மதுவின் பயணமும்... அதன் பின்னான அரசியலும்
    22.09.2015 - 0 Comments
    ஓரு மூட்ட அரிசியை  ஒருகையாள தூக்கி போட்ட மனுசன் ... இப்ப நடக்க மாட்டாமா இருக்காறே?…
  • பட்டப்படிப்பில் பெயிலான கேப்டன் தோனி
    19.02.2013 - 1 Comments
    நம்ம இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி படிப்பில் கோட்டை விட்டுட்டார். இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி.…
  • சிம்பு, அனிருத்தை கைது செய்க - உருவபொம்மைகளை எரிப்பீர்!
    13.12.2015 - 3 Comments
    சென்னையே மழை வெளள துயத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நேரத்தில் அசிங்கமான கரியத்தில் சிம்பும்,…