காளைகளே இல்லாமல் போகும்’-அலங்காநல்லூரில் பெண்கள் ஒப்பாரி

ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் முடிந்து போய்விட்டது. ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் பட்டாசு இல்லாத தீபாவளி போல இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.  பாஜகவுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பாஜக வினர் பிராமண பண்டிகைகளை தவிர மற்றவற்றை ஓடுக்க பார்பார்கள் என்பதே உண்மை.பிராமண பண்டிகைகளை எதாயாவது  நிறுத்து சொல்லுங்களேன் பார்க்கலாம்.


மேனகாகாந்தி ஜல்லிகட்டை பற்றி என்ன தெரியும்...

1000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் வீரவிளையாட்டாக இருந்துவரும் ஜல்லிகட்டை பற்றி கலவெட்டுகள், இலக்கிய ஆதாரங்கள் இருக்கும் போது அதை மேற்கத்திய கலாச்சாரம் என்பது மேனகாகாந்தியின் அரைவேக்காட்டு தனத்தை காட்டுகிறது.மேலும் பாஜகவின் பிராமண புத்தியும் இருக்கிறது.இந்த விவகாரத்தில் பாஜகவின் உண்மை முகம் பளிச்சென அம்பலப் பட்டுள்ளது.

காளைகள் காட்சிப்பொருளாக மாறினாலும் 
ஆச்சரியப்படுவதற்கு இல்லை....

அலங்காநல்லூரில் நீதிமன்றத் தடையால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதைத்தவிர்க்க முயற்சிக்காத மத்திய பாஜகஅரசுக்கும், மாநில அதிமுக அரசுக்கும் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமையன்றும் அலங்காநல்லூரில் கருப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் அலங்காநல்லூர் களையிழந்து காணப்பட்டது. இங்குமட்டும் 300 ஜல்லிக்கட்டுக் காளைகள், 400 மாடுபிடிவீரர்கள் உள்ளனர். ஜல்லிக்கட்டு அன்று அலங்காநல்லூர் கேட்கடையில் தொடங்கி பேருந்துநிலையம் வரை இருபக்கமும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தாண்டு கடைகள் ஏதுமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. அலங்காநல்லூர் கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் இன்று சமையல் செய்யவில்லை, நாங்கள் கவலையோடு இருக்கிறோம் என பெண்கள் கூறினர்.

பலரது வீட்டு வாசல்களில் காளைகளின் படம் வரையப்பட்டு, `இன்று கருப்புதினம்‘ என எழுதியிருந்தனர்.போலீஸ் குவிப்புஅலங்காநல்லூருக்கு வரும் மதுரைச் சாலை, சர்க்கரை ஆலைசாலை, வாடிப்பட்டி சாலை, பாலமேடு சாலை பகுதிகளில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. 350-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.மேலும் மாடுகளை திறந்து விடும் வாடிவாசலை அடைத்து, காவல்துறையினர் சீல் வைத்து அங்கும்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.ஜல்லிக்கட்டு நடைபெறாததற்கு மத்திய-மாநில அரசுகளின்மெத்தனமே காரணம் என இக்கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் செய்தியாளர்களிடம் கூறினார்.ஒப்பாரி போராட்டம்ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிபெற்றுத்தராத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து அலங்காநல்லூரில் சனிக்கிழமை காலை ஒப்பாரி வைத்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த மூதாட்டிகள் சிலர் திடீரென எழுந்தது சாமியாடினர். இதையடுத்து இளைஞர் ஒருவரும் சாமியாட ஆரம்பித்தார். ஒப்பாரி வைத்த இடத்திலிருந்து சாமியடிக்கொண்டே புறப்பட்ட மூதாட்டிகள் காவல்துறையின் தடுப்பைத் தாண்டி காளியம்மன் கோவில் முன் நின்று சாமியாடினர். சாமியாடிகளை பார்த்ததும் காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். சிறிதுநேரம் சாமியாடிய அவர்கள், ‘ஏன் ஜல்லிக்கட்டு நடத்தவில்லை என கேள்வியெழுப்பி இப்போதே ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும்‘ என்றனர். அங்கிருந்த சிலர் திருநீறை எடுத்து அவர்களது நெற்றியில் பூசி தைமாதம் முடிவதற்குள் எப்படியும் ‘ஜல்லிக்கட்டு நடத்திவிடுவோம். இப்போதைக்கு அமையாதியாகு’ எனக்கூறினார். இதையடுத்து சாமியாடியவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

ஜல்லிக்கட்டுக்கு தைமாதத்திற்குள் அனுமதி கிடைத்துவிடும். எப்படியும் நடத்திவிடுவோம் என்று நம்பிக்கையோடு கூறினார், பேரூராட்சி துணைத்தலைவர் ரேணுகாஈஸ்வரி. மேலும் அவர் கூறுகையில்,“பசுமாடு காளை கன்று ஈன்றால், அதை விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தோம். ஆனால் இன்றைக்கு அரசு, விவசாயத்தில் இயந்திரத்தை புகுத்திவிட்டதால், உழவுக்கு காளைகளை பயன்படுத்துவது அரிதாகிவருகிறது.

பிறக்கும் காளைகளில் சில ஜல்லிக்கட்டுக்கு ஏற்றவையாக இருக்கும். அவற்றை நாங்கள் தயார்படுத்தி வந்தோம். தடை என்பது நீடித்தால், தாயிடம் காளை பால்குடியை மறந்தவுடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவை அடிமாடுகளாகத்தான் செல்லும். செயற்கை கருவூட்டல் முறையை திணித்து, காளை இனத்தையே அழிக்க அரசு முயற்சி செய்கிறது. வரும்காலத்தில் காளைகள் காட்சிப்பொருளாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றார்

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்