9 ஜன., 2015

இந்து பெண்கள் குறைந்தபட்சம் 4 குழந்தைகள் பெற வேண்டும்

மகாத்மா காந்தியை படுகொலை செய்த கொடியவனான கோட்சேயை தேச பக்தன் என்று புகழ்ந்துரைத்த பாஜகவை சேர்ந்த எம்.பியும் சாமியாருமான சாக் ஷி மகராஜ், இந்து பெண்கள் குறைந்தபட்சம் 4 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் அப்போதுதான் இந்துமதத்தை பாதுகாக்க முடியும் என்று பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.உ.பி. மாநிலம் மீரட் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இந்து பெண்கள் குறைந்தபட்சம் 4 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தையை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும். ஒரு குழந்தையை இந்து சன்னியாசியாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். ஒரு குறிப்பிட்டமதத்தில் நான்கு மனைவிகளை மணந்து 40 குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள்.
அதனால் அவர்களது மதம் வளர்கிறது. எனவே இந்து பெண்களும் குறைந்தது 4 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விஷமமாக குறிப்பிட்டார். பசுவதை செய்பவர்கள் மற்றும் மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியஅவர்,
ஆனால் ஆர்எஸ்எஸ்செய்து வரும் மறுமதமாற்றம் இதில் சேராது என்றார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டாயம் ராமருக்கு கோயில் கட்டப்படும். இதில் மாற்றம் இல்லை என்று கூறியுள்ளார்.

சாக் ஷி மகராஜ்க்கு சில கேள்விகள்

1. குழந்தைகளின் அதிகரிப்பதால் மட்டும் இந்து மதத்தை காப்பாற்ற முடியுமா?

 2. இந்து மதத்திலேயே தாழத்தப்பட்டவர்,தீண்டத்தாகதவர்கள்  என பிரித்து வைத்திருப்பதை உங்களால் ஓழிக்க முடியுமா?


3.120 கோடி இந்தியர்களில் சில கோடிகளே உள்ள முஸ்ஸிம்கள்,கிருஸ்தவர்கள் இந்து மதத்தை ஓழிக்க முடியுமா?


4. அயோத்தியில் ராமர்கோயில் கட்டினால் இந்துமதம் வளருமா?


5.இந்தியாவை இந்து நடாக மாற்றி  என்ன செய்யப்போகிறீக்கள்?செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Related Posts Plugin for WordPress, Blogger...