பயணிகள் உயிரோடு விளையாடும் அதிமுகவினர்...

அதிகாலை 4 மணிக்கே  (நிம்மதியா தூங்க  முடியல) அனைத்து மாவட்ட கலெக்டர் கள்,வருவாய்த் துறை அதிகாரிகள் எல்லோரும் அரசு போக்குவரத்து பணிமனைகளில் ஆஜர். போட்டாவுக்கு போஸ் கொடுத்தார்கள். பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என்றார்கள். இவர்களுடன் அதிமுக  அமைச்சர்கள், எம். எல். ஏ.க்கள்,மாவட்ட,வட்ட பொருப்பாளர்கள்  பஸ்டாண்டுகள்,பணிமனைகளில் களம் இறங்கினார்கள். 100 சதம் பேரூந்துகள் ஓடும் என்றார்கள். அவர்களும் பஸ்களை பிடித்தபடி,சாய்ந்துபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள்.அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள்,நடத்துனர்களை கொண்டுகாலை முதல் மதியம் வரை 25 சதம் பஸ்கள் ஓடின. அவர்களும் எவ்வளவு நேரம் தான் வேலை பார்பார்கள். மதியத்திற்கு பிறகு பஸ்கள் குறையதொடங்கி விட்டது.


கோவில்பட்டியில் பயணிகள் உயிரோடு...


இதில் கோவில்பட்டியில் அண்ணா தொழிற்சங்கத்தினர் மட்டும் ஒரு சில பேருந்துகளை இயக்கினர். இந்நிலையில் கோவில்பட்டி எம்.எல்.ஏகடம்பூர்ராஜூ தலைமையில் அ.தி.மு.கவினர் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில்குவிந்தனர். அப்போது அங்கு வந்த கோவில்பட்டி துணைச் சேர்மன் ராமர் தானும் ஒரு பஸ்சை இயக்குகிறேன் எனகூறியதால் உடனடியாக தூத்துக்குடி செல்லும் tn 74 g 1514 என்றஎண் கொண்ட பேருந்தினைதுணைச்சேர்மன் இயக்க அனுமதித்தார். சுய விளம்பரத்திற்காக அனைவரும் நின்று பத்திரிகைகளுக்கு போசும் கொடுத்தனர். துணைச் சேர்மன் ராமரை ஓட்டுநராகவும்,ஒன்றிய மாணவரணிச் செயலாளர் செண்பகராமனை நடத்துநராகவும்,உடனடியாக பணியமர்த்திய எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூவின்கடமை உணர்வைக் கண்டுமக்கள் அச்சம் அடைந்தனர். அச்சத்திற்கு காரணம் கடந்த 2001ம் ஆண்டு இதேபோன்ற சூழ்நிலையில் அனுபவம் இல்லாத ஓட்டுநர்களை கொண்டு பேருந்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயக்கச் செய்ததால்பல பேர்களின் உயிர் பறிபோயிற்று. கடந்த 2001ம் ஆண்டுதீபாவளிக்கு முந்தையதினம் கோவில்பட்டி அருகேஉள்ள நாலாட்டின் புத்தூரில் பச்சிளம் குழந்தைகள் உட்பட21 பேர்களின் உயிர் காவு வாங்கப்பட்டதை மறந்து அதிமுகவினரின் சுய விளம்பரத்திற்காக மக்களின் உயிருடன் விளையாடும் எம்.ஏ.எல்.ஏ கடம்பூர் ராஜூமற்றும் துணைச்சேர்மன் ராமர்ஆகியோரின் இச்செயலைக் கண்டு பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி கலந்த பயத்தில் காணப்பட்டனர். அதுமட்டுமின்றி வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்நேர்முகத் தேர்விற்கு அழைப்புவிடுக்கப்பட்டமுறையான பயிற்சி வழங்காமல் பணியமர்த்த முயன்ற அ.தி.மு.க.வின்விசுவாசிகளான ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை பணியமர்த்த கூடாது என மதுரை உயர்நீதிமன்ற பெஞ்சில் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களால் தடைசெய்யப்பட்டஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை வலுக்கட்டாயமாக பேருந்துகளை இயக்க வைத்தனர். இதற்கு ஒருசிலர் மறுப்பு தெரிவித்தபோதுஇன்று பணியாற்றினால் மட்டுமே தங்களுக்கு வேலைஉறுதிசெய்யப்படும் எனகூறியதைதொடர்ந்து வேறுவழியின்றிபயிற்சியற்ற ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்க சம்மதித்தனர். அரசுபேருந்துகள் மட்டுமின்றி எம்.எல்.ஏவின் ஆதரவுபெற்றதனியார் பேருந்துகள்,மினிபேருந்துகள் அவற்றின் மாற்றுப் பேருந்துகள் முறையான அனுமதியின்றியும், வழித்தடமின்றியும் அனைத்து பகுதிகளுக்கும் அதிக கட்டணத்தில் இயக்கப்பட்டன. இவர்கள் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை வலுக்கட்டாயமாக இயக்கினாலும் மக்கள் கூட்டம்மிகக்குறைவாகவே பேருந்து நிலையம் காணப்பட்டது. இங்குநடந்த அனைத்து அராஜகங்களும் கேலிக்கூத்துகளும்,கோவில்பட்டி போக்குவரத்துகிளை மேலாளர் சுப்பிரமணியனின் முன்னிலையில்தான் நடந்தது.
இப்படி பல இடங்களில்  பயணிகளின் உயிரோடு விளையாடுகறார்கள் அதிமுகவினர். பிரச்சனையை தீர்க்க முயலாமல் அனைத்து தமிழகமுழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். இது அதிமுக அரசுக்கு நல்லதல்ல....

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
சென்ற முறை அதிமுக ஆட்சிக்கு ஆப்பு வைத்தது போக்குவரத்து ஊழியர் போராட்டம்தான் .தொழிலாளர்களுக்கு துரோகம் செய்யும் இந்த ஆட்சியும் அழியப் போவது நிச்சயம் !
இன்னும் எத்தனை காலம்தான் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள் ?