ரஜினி வருவாரா, வர மாட்டாரா?

கேள்வி: அன்புள்ள டான். ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றி?
பதில்: ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும். அப்போது நான் பிறந்து இரண்டு வாரம் ஆகியிருந்தது. என்னைத் தொட்டிலில் போட்டு ஆட்டிக்கொண்டே என் அப்பா பக்கத்து வீட்டு மாமாவிடம் ரஜினி அரசியலுக்கு வருவாரா எனத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
அதற்கு முன் என் அப்பாவைத் தொட்டிலில் ஆட்டியபோது என் தாத்தாவும் இதே பிரச்சினையைப் பேசிக்கொண்டிருந்ததாக தாத்தா பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் சளைத்தவன் அல்ல.
எனக்கு விவரம் தெரிந்து ‘ப்ளட்ஸ்டோன்’ திரைப்படத்திலிருந்தே ரஜினியின் சமூக அக்கறையையும், தொலைநோக்குச் சிந்தனையையும் கவனித்துவருகிறேன்.
குறிப்பாக, ரஜினி கதை எழுதிய பாபா திரைப்படம் இந்திய சமூகப் படங்களில் ஒரு மைல்கல் என்றால் மிகையாகாது. மனீஷா கொய்ராலாவைக் ‘கதம் கதம்’ என சொல்லிப் புறக்கணித்தது, பாபா கொடுத்த ஏழு வரங்களையும், பட்டம் பிடிப்பது, ரம்யா கிருஷ்ணனை மணி கேட்க வைப்பது போன்ற சிக்கனமான முறைகளில் பயன்படுத்தியது என அதில் சமூகப் பிரச்சினை களை நுணுக்கமாகக் காண்பித்திருப்பார். அதிலும், அந்த இறுதிக் காட்சியில் இமயமலையா, தமிழ்நாடா என அவர் முடிவு செய்யும் காட்சி, பல பிஞ்சு மனங்களில் புரட்சியைத் தூவிய ஒன்று. நான் சே குவேராவுக்குப் பிறகு, யாரையும் சே குவேரா என அழைத்ததில்லை.
பக்கத்து வீட்டு சரவணனுக்குப் பிறகு, நான் யாரையும் சரவணன் என அழைத்த தில்லை. ஆனால், முதல்முறையாக ரஜினிக்குப் பிறகு, ரஜினியை மட்டும்தான் ரஜினி என்றழைக்கிறேன். ரஜினி மட்டும்தான் ரஜினி என்றழைக்கப் பொருத்தமானவர். ஏனெனில், ரஜினியின் பெயர்தான் ரஜினி. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என கி.மு. 3-ம் ஆண்டிலிருந்தே ரஜினி சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் எதுவுமே செய்யவில்லையே என நீங்கள் கேட்கலாம். தமிழக மக்கள் இப்போது பெரும் பணக்காரர்களாக, எந்தப் பிரச்சினையுமே இல்லாதவர்களாக, ஆனந்தமாக இருக்கிறார்கள் என்பதால், அவர்களுக்கு ஏதாவது கேடு நடக்கட்டும் எனக் காத்திருக்கிறார்.
கேடு ஏதாவது நடந்தால்தானே நல்லது செய்ய முடியும் என்ற தொலைநோக்குப் பார்வை உடையவர்தான் ரஜினி. அவரால் மட்டும்தான் இந்தச் சமூகத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டுவர முடியும். அதனால், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வந்தே தீர வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

நன்றி .இந்து தமிழ்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Yarlpavanan said…

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
செம கிண்டலா இருக்கே...!
  • பிளாக்கர் டிப்ஸ்கள்
    23.10.2011 - 0 Comments
    கடல் போன்ற இணைய பரப்பில் வலைபூக்கள் பரவிக்கிடக்கின்றன. ஆங்கில வலைபூக்களுக்கு அடுத்தபடியாக இருப்பது தமிழ்…
  • கூடங்குளம் அனு(ணு)மதிப்போம்
    13.10.2011 - 4 Comments
    அணு ஓர் பார்வை.... அணுவை குறிக்கும் "ஆட்டம்" என்ற ஆங்கிலச்சொல் பிரிக்கமுடியாது என்ற கிரேக்க மொழி…
  • விஸ்வரூபம் சூட்டிங்ஸ்பாட் படங்கள் - கமல் பேட்டி
    05.01.2012 - 1 Comments
    விஸ்வரூபம் படம் தமிழ், இந்தியில் நேரடி படமாக ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இப்படத்தில் நடிக்க நானும்…
  • 5300 ஆண்டுகளுக்கு முந்தைய பனிமனிதன் பேசிய மொழி தமிழ்
    13.10.2016 - 2 Comments
    5300 ஆண்டுகளுக்கு முந்தைய பனிமனிதன் பேசிய மொழி தமிழ் என்று விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆடியோவால் பரபரப்பு…
  • மலரே! குறிஞ்சி மலரே! ...... 12  ஆண்டுகளுக்கு  பிறகு கொடைக்கானலில்  ...
    27.12.2013 - 2 Comments
    கைகளும் , உதடுகளும் நடுங்குகிற கடும் குளிர்... ஆனால் இந்த் குளிரில் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை…