கொலைகாரனும்...ரவுடியும் எப்படி உருவாகிறார்கள்?

கள்ளக்காதல் விவகாரம்,அரசியல் கொலைகள்,பெண் கற்பழிப்பு,சாதியமோதல் கள்,மதவெறி.... தினசரி நாளிதழ்களை புரட்டினால் அதிக பக்கங்களை அடை த்துக்கொண்டுருக்கிற செய்திகள் மேற்கண்டவை தான். இதற்கெல்லாம் சுழ்நிலை ஓரு காரணம் என்றால் ,மற்றொரு காரணம் கொலைகாரன்,அல்லது ரவுடியின் மரபணுவும் எனகண்டுபிடித்திருக்கிறார்கள்.

மனிதனின் குறிப் பிட்ட இரண்டு மரபணுக்களுக்கும் அவனுடைய வன்முறைக் குற்றங்களுக் கும் இடையில் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.பின்லாந்தில் வன்முறைமிக்க குற்றங்களைச் செய்த தாக கண்டறியப்பட்ட தொள்ளாயிரம் பேரின்மரபணுக்களை ஆராய்ந்த போது இந்த விவரம் தெரிய வந்துள்ளது.குறிப்பிட்ட இந்த இரண்டு மரபணுக்கள் ஒருவருக்கு இருக்குமாயின், அவர்கள் தமது வாழ் நாளில் திரும்பத் திரும்பவன்முறையில் ஈடுபட்டிருந் ததற்கான வாய்ப்பு 13 மடங்கு அதிகமாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரி விக்கின்றனர்.
ஆஹடீஹ என்ற மரபணுவும், ஊனுழ13 என்ற மரபணுவின் குறிப்பிட்ட ஒரு வகையுமே வன்முறையோடு தொடர் புடைய மரபணுக்களாக தெரியவருவதாக ஆய்வா ளர்கள் தெரிவிக்கின்றனர்.ஆஹடீஹ மரபணுவா னது நமது மூளையில் டோபமைன், செரடோ னின் போன்ற அவசியமான இரசாயனங்களை கட் டுக்குள் வைத்திருக்க உதவு கிறது.

ஊனுழ13 மரபணு, ஒருவர் போதை மருந்துக்கு அடிமையாக ஆகக்கூடியவர்களிடம் காணப் படுகின்ற ஒரு மரபணு என்று ஏற்கனவே கண்டறி யப்பட்டிருந்தது.தற்போது அதன் ஒரு குறிப்பிட்ட வடிவம் வன்ம குணாம்சத்துடன் தொடர்பு கொண்டிருப்ப தாக கூறப்படுகிறது.பின்லாந்தில் நடந் துள்ள வன்முறைமிக்க குற்றங்களில் குறைந்தது 4 முதல் 10 சதவீதம் வரையி லானவற்றை குறிப்பிட்ட இந்த மரபணுக்களை உடையவர்கள்தான் செய்திருக்கி றார்கள் எனத் தெரியவந் துள்ளதாக `மாலிக்குலர் சைக்கியாட்ரி’ என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட் டுள்ளது.அதேநேரம், இந்த மரபணு ஒருவருக்கு இருப்பதை வைத்து அவர் குற்றம்செய்தவராக இருப்பார் என்றோ, ஒருவருக்கு இந்த மரபணு இல்லை என்பதை வைத்து அவர் குற்றம் செய்திருக்க வாய்ப் பில்லை என்றோ கருத ஆரம்பித்துவிடக்கூடாது என்றும் விஞ்ஞானிகள் எச் சரித்துள்ளனர்.இந்த இரண்டு மரபணுக் கள்தான் என்றில்லை, வன்முறைக்கும் வேறு பல மரபணுக்களுக்கும் இடையி லும் தொடர்பு இருக்கலாம் என விஞ்ஞானிகள் சுட் டிக்காட்டுகின்றனர்.ஒருவர் வன்முறையை நாடுவதற்கு சூழ்நிலையும் பெரிய காரணமாக அமைந்துள்ளது என்ப தும் நாம் ஏற்கனவே நிரூபித்துள்ள அறிவியல் உண்மைதான் என் றும் அவர்கள் வலியுறுத்து கின்றனர்.விஞ்ஞானிகளின் கருத்து இப்படி இருந்தாலும், குற்றம் சாட்டப் பட்டவரின் மரபணு விவரங்களை எடுத்துச் சொல்லி,அவருக்கான தண்ட னையை குறைக்க வழக் கறிஞர்கள் நீதிமன்றங்களில் முயன்ற சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கின்றன.இத்தாலியிலும், அமெ ரிக்காவிலும் இதற்கான உதாரணங்கள் உண்டு.

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்




Comments

Yarlpavanan said…
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
Unknown said…
எதிர்காலத்தில் இந்த கிரிமினல் மரபணுவை கிள்ளி எறியும் நாளும் வந்தே தீரும் ,தோழரே !