6 அக்., 2014

ஊழல் செய்த நபர் முதல்வராக யார் காரணம்?

ஊழல் செய்த நபர் முதல்வராகக் கூடிய அள விற்கு வாய்ப்பு எதனால் கிடைக்கிறது என்று உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை கேள்வி எழுப்பியுள்ளார். நியாய மற்ற நபர் நமது பிரதிநிதி யாக, ஒரு முதல்வராக பதவியேற்கும் நமது தேர்தல் முறையில் பெரிய குறை பாடு உள்ளது என்பதை யும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நிரூபிக்க வேண்டியது யார்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல் லாது என்று கூறி அதிமுக வினர் வாதம் செய்து வரு கின்றனர். மக்கள் சேவை யாற்றக் கூடியவர்கள் திடீ ரென சொத்துக்குவித்தால், முறையான ஊதியத்தைக் கொண்டு சொத்துக்கள் வாங்க முடியுமா என்ற அளவுகோல்கள் உள்ளன. வங்கிக்கடன் மூலம் சொத் துக்கள் வாங்க ஆதாரங் களைக் காட்ட வேண்டும்.
ஆனால், ஜெயலலிதா தமி ழக முதல்வராக இருந்த போது 1 ரூபாய் தான் சம் பளமாகப் பெற்றார். 1992ம் ஆண்டு வரை அவர் திரை யுலகில் சம்பாதித்த பணம் என்பதைத் தவிர வேறு வகையில் அவருக்கு வரு மானம் இல்லை. இப்பணத் தைக் கொண்டு 66 கோடி ரூபாய்க்கு எப்படி சொத் துக்களை வாங்கினீர்கள் என்பது சாதாரண கேள் வியாகும். இவ்வழக்கில் குற்றவாளி இல்லை என் பதை நிரூபிக்க வேண்டி யது குற்றம் சாட்டப்பட் டவரின் பொறுப்பாகும்.

கம்பெனி பதிவுகள்

நீதிபதி விளக்கம் கேட்ட போது, “இவை என் சொத் துக்கள் அல்ல; சசிகலா, நடராசனின் சொத்துக்கள்” என்று ஜெயலலிதா கூறி யுள்ளார். ஒரே நாளில் 18 கம்பெனிகள் பதிவு செய் யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் போயஸ் தோட்டத்தில் வைத்து பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும், பலவற்றில் பெயர் களே இல்லையென்றும் போலி என்றும் சப்-ரிஜிஸ் தார் கூறியுள்ளார். ஆனால், இந்தக்கம்பெனிகளின் சொத்துக்கள் சசிகலா, இளவரசி, சுதாகரன் பெய ரில் இருப்பதாகவும் தன் னைச் சார்ந்ததாக இல்லை யென்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால், ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கிலேயே இதற்குப் பணம் வந்துள்ளதாக சப்-ரிஜிஸ்தார் கூறியுள்ளார். ஆகவே, ஜெயலலிதா குற்ற வாளியென நீதிபதி தீர்ப் பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தான் அதிமுகவினர் உண்ணா விரதம் இருக்கின்றனர்.

எதனால் வாய்ப்பு?

இந்தத் தீர்ப்பில் இருந்து எழும் ஆழமான கருத்தை அவர்கள் ஆலோசிக் கவில்லை. ஊழல் செய்த நபர் முதல்வராகக் கூடிய அளவிற்கு வாய்ப்பு எத னால் கிடைக்கிறது? தேர் தல் மூலம் வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தலைவராக்கப்பட்டு அதன் மூலம் முதல்வராக தேர்வு செய்யும் ஜனநாய கம் நடைமுறையில் உள் ளது. இந்த பிரதிநிதித்து வம் சரியா, தவறா என்ற கேள்வி தற்போது எழு கிறது. நியாயமற்ற நபர் நமது பிரதிநிதியாக, ஒரு முதல்வராக பதவியேற்கும் தேர்தல் முறையில் பெரிய குறைபாடு உள்ளது.அரசியலில் கிரி மினல்கள் அதிகமாகியுள் ளதை எப்படி தடுப்பது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சட் டக்கமிஷன் ஆராய்ந்து இது குறித்து ஒரு அறிக் கைத்தாக்கல் செய்ய உள் ளது. தற்போதுள்ள நாடா ளுமன்ற உறுப்பினர்களில் 162 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 76 நாடாளுமன்ற உறுப்பினர் கள் கடும் குற்றவாளிகள். கடந்த 2004ம் ஆண்டு 24 சதவீதமாக இருந்த நாடா ளுமன்ற உறுப்பினர்களின் குற்ற எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டு 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 47 சதவீத சட்டமன்ற உறுப் பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 16 சட்டமன்ற உறுப்பினர் கள் மீது கொலை வழக்கு கள் உள்ளன. கிரிமினல் வழக்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 23 சதவீதம் பேர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர். இதை எப்படித் தடுப்பது?

பயனடைந்த நிறுவனம்

கடந்த தேர்தலில் நரேந் திர மோடிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இப்பணம் எங்கிருந்து வந் தது? இப்பணத்தை சாதாரண மக்களால் செலவிட முடி யுமா? மாபியா, கருப்பு பணம் பதுக்கல்காரர்கள் தேர்தலில் அதிக பணங் களைச் செலவிடுகிறார் கள். தேர்தலில் உச்சவரம்பு செலவு என்பது வேட் பாளர்களுக்குத் தான் உள்ளது. கட்சிகளுக்கு இல்லை. 1985ம் ஆண்டு சட்டத்திருத்தம் இப்படி பணம் தருவதை நியாயப் படுத்துகிறது. 2013ம் ஆண்டு தேர்தல் ஆணையம் ஒரு சுற்றறிக்கையை வெளி யிட்டது. பெரிய முதலா ளிகள் பணம் தர ஒரு அறக் கட்டளை உருவாக்கியது டன், பணம் தருபவர்க ளுக்கு வருமானவரி விலக் கும் அளிக்க உத்தரவிட் டது.

2003ம் ஆண்டு காங் கிரஸ் கட்சிக்கு ஆதித்யா பிர்லா 36 கோடி ரூபாய் வழங்கினார். அதே போல பாஜகவிற்கு 26 கோடி ரூபாய் வழங்கினார். பாரதி டெலிகாம் நிறுவனம் 2010 - 2011 ஆம் ஆண்டில் காங் கிரசுக்கு 11 கோடி ரூபாய் வழங்கியது. இந்த நிறுவ னம் தான் 2 ஜி அலைக் கற்றை விவகாரத்தில் பயன டைந்த கம்பெனியாகும். அலைக்கற்றை என்பது மக்கள் சொத்து. அப்ப ணத்தை வசூல் செய்யாமல் தள்ளுபடி விலையில் வழங் கியது தான் வழக்காகியுள் ளது. யார் அமைச்சராக வேண்டும் என்று நீரா ராடியாவும், ரத்தன் டாட் டாவும் பேசிய பேச்சுகளின் டேப்புகள் வெளியானது. அமைச்சர் யார் என்பதை முடிவு செய்வது மக்கள் அல்ல. இப்படி தேர்வு செய் யப்படுபவர்கள் எப்படி உண்மையான மக்கள் பிர திநிதியாக இருப்பார்கள்?இவ்வாறு ஆர்.வைகை கேள்வி எழுப்பினார்.


தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...