ரஜினி என்னும் வியாபாரி...

கடந்த வாரத்தில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா (முன்னாள் முதல்வர்
என்று சொல் லக்கூடா தாம்)ஜாமீன் விடுதலை பரபரப்புக்கு பிறகு ரஜினி ,ஜெயலலி தாவுக்கு வாழ்த்து தெரிவித் ததும்,அவருக்கு ஜெயல லிதா நன்றி தெரிவித்ததும் அடுத்த பரபரப்பு செய்தி.
தமிழக பாஜகவுக்குள் ரஜினியால் வெட்டுக்குத்து நடந்து கொண்டிருக்கிறது. பாஜக மாநில தலைவர் தமிழிசை ரஜினி பாஜகவுக்கு வரவேண்டும் என்று அழைப்புவிடுக்க.இல.கணேசன் ரஜினி அரசியலுக்கு வரகூடாது என்கிறார்.காங்கிரஸ் தலைவர்களுக்கு பாஜகவுக்கு போய்விடுவாரோ என்ற பீதி.காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகன் ரஜினி எல்லோருக்கும் பொதுவானவர் என்று சொல்லி வைத்திருக்கிறார்.


லிங்கா படத்துக்கு பிரச்சனை வந்துகூடாதே....

இதற்கிடையே தான் ரஜினி,ஜெயலலிதாவுக்கு எப்போதும் இல்லாமல் தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதும்.அவருக்கு ஜெயலலிதா நன்றி தெரிவிப்பதுமான காட்சிகள் அரங்கேறுகின்றன.
     சில நாளிதழல்களில் ரஜினி ஏன் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்... அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிட்டிருக்கின்றன. (நோக்கர்கள் என்ன சொல்வது எல்லோருக்கு தெரியுமே? ) அதாவது லிங்கா படம்  பிரச்சனை இல்லாமல் வர வேண்டுமே என்ற கவலை ரஜினிக்கு. கமலின் விஸ்வரூபம்,விஜய்க்கு தலைவா,கத்தி என்பது போல லிங்கா படத்திற்கு வந்துவிடகூடாதே என்கிற கவலை ரஜினிக்கு. இது போல நடந்து கொள்வது ரஜினிக்கு புதிதல்ல.. தனது மார்கெட் நிலவரம் குறைகிற போதெல்லாம் இப்படி அரசியல் ஸ்டண்ட் அடிப்பது வழக்கம்.


         "தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது" என்று பஞ்ச் அடிப்பார்.இந்த படத்துல ரஜினி அரசியலுக்கு வருவரா ,மாட்டாரா என்று சொல்லியிருக்கிறார் என்பார்கள். அடுத்து எப்ப வருவேன்,எப்படி வருவேன் என்று மற்றொரு பஞ்சை அடுத்த படத்தில் பேசுவார் ரஜினி. நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்பார். இப்படி பேசியே தனது ரசிகர்களை மூட்டாளாக ஆக்குவது ரஜினிக்கு கை வந்த கலை. இப்போது லிங்காவுக்காக தீபாவளி வாழ்த்தும்,பாஜக அரசியல் அழைப்பையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்ர அவ்வளவுதான்.

மேலும் ரஜினி குறித்த 3 பதிவுக்கள்...

1. ரஜினியிடம் சில கேள்விகள்

2. மாணிக்பாட்ஷா ரஜினிக்கு சில கேள்விகள்....

3.  மோடியின் 'வலி'மை ரஜினிக்கு எப்படி தெரியும்?

 ரஜினி தேர்ந்த சினிமா வியாபாரி.அப்படியே ரஜினி அரசியிலுக்கு வந்தாலும் பருப்பு வேகாது.இப்போதெல்லாம் இளைஞர்கள் படிக்கிற போதே அமொரிக்க கனவுகளோடு படிக்கிறார்கள். அவர்களின் கனவு நாயகர்களாக பில்கேட்ஸ் போன்றவர்கள் இருக்கிறார்கள். ரஜினி மட்டுமல்ல எந்த நடிகர் வந்தாலும் முதல்வர் கனவு பலிக்காது.ஏற்கனவே ஒருத்தர் வந்து கஷ்டப்படுறது தெரியலையா...

செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments