இந்தியாவின் உண்மையான அழுக்கை சுத்தம் செய்வாரா மோடி?

காந்தியின் பிறந்த நாளான நேற்று இந்தியாவை தூய்மையாக வைக்க அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.நடிகர் கமல் ஹாசன்,டென்டுல்கர் , உள்ளிட்ட இந்திய பிரபல ங்களை தனது தூய்மை திட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக் கிறார்.கமல் பிரதமரின் அழைப்பை ஏற்பதாக பேட்டி கொடுத் திருக்கிறார். நல்ல விஷயம் செய்யவேண்டிய காரியம் தான்.
         ஆனால் இந்தியர்க ளின் மனதில் இருக்கும் அருவருப்பான உண்மை யான அழுக்கை  எப்படி தூய்மைப்படுத்துவது.சாதிரீதியான,மதரீதியானா அழுக்கு அப்பிக்கிடக்கிடதே அதை எப்படி தூய்மை செய்வது.அதைத்தானே முதலில் தூய்மை படுத்தவேண்டும். அந்த அழுக்கை சுத்தம் செய்தால் இந்தியாவின் மற்ற  அழுக்குகள் சுத்தம் செய்வது எளிது.

         சென்ற மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானீர் மாவட்டத்தில், பள்ளிக்கூடத்தில் உயர்சாதி ஆசிரியருக்காக வைக்கப்பட்டிருந்த மண்பானையிலிருந்த தண்ணீரை எடுத்து குடித்ததற்காக, இரு தலித் மாணவர்கள் அடித்து நொறுக்கப்பட்டு, பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கின்றனர். இன்று இதையும் விட இழிவான முறையில், தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்தவர் என்பதால் பீகார் முதல்வர் சென்று வந்த கோவில் சுத்தப்படுத்தப்பட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்திருக்கின்றன.தேசிய குற்றப் பதிவேடுகள் நிலையத்தின் அறிக்கையின்படி, தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 2012ஆம் ஆண்டில் 16.7 சதவிகிதமாக இருந்தது, 2013ஆம் ஆண்டில் 19.6 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.

அதேபோல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 2012இல் 5.7 சதவிகிதமாக இருந்தது, 2013இல் 6.5 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. மனித மலத்தை மனிதனே சுமக்கும் நடைமுறை, மனித மலத்தை கீழ்சாதி சமூகத்தினர் சுத்தப்படுத்தும் நடைமுறை, இன்னமும் தொடர்கின்றன. தெற்காசிய மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு இயக்குநர் மீனாட்சி கங்குலி, இந்நடைமுறையை, “தீண்டாமையின் மிகவும் மோசமான அடையாளங்கள்’’ என்று குறிப்பிடுகிறார்.


            கடந்த வாரத்தில் அமெரிக்கா சென்றிருந்த மோடி,
"இந்தியாவைத் தூய்மைப் படுத்துவோம்’’ என்ற கோஷத்தோடு அமெரிக்காவில் உள்ள இந்திய மக்களிடம், அவரும் , சக அமைச்சர்களும் கைகளில் விளக்கமாறுகளை ஏந்திக்கொண்டு, செய்தியாளர்களின் புகைப்படங்களில்  மகிழ்ச்சிப் பெருக்குடன் நின்று கொண்டிருந்திருந்தார்கள்.
                 அப்போது பேசிய பிரதமர் மோடி, காந்திஜியின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படவிருக்கும் 2019க்குள், இந்தியாவை தூய்மைப்படுத்திட வேண்டும் என்று இந்தியப் பிரஜைகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். காந்திஜிக்கு மோடி அளிக்கக்கூடி ய மிகப்பெரிய மரியாதையாக எது இருக்கும் என்றால், நம் நாட்டில் காணப்படும் அருவருப்பளிக்கும் உண்மையான அழுக்கு - தீண்டாமை மற்றும் சாதி,மதம் இல்லாமல் செய்வது தான்.குப்பைகளை சுத்தம் செய்வதை போல மனக்குப்பைகளை மோடி சுத்தம் செய்வாரா?

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்