21 செப்., 2014

மதுரை பாறைத்திருவிழாவுக்கு வர்றீங்களா?...

வருடம் 365 நாட்களில் 280 நாட்கள் மீனாட்சி அம்மன் கோயில்லில் ஆன்மீக நிகழ்வுகள் நடக்கும். இலக்கிய சந்திப்புகள்,பட்டிமன்ற ங்கள்,சொற்பொழிவுகள் தொடர் நிகழ்வுகளாக நடக்கும் இடம் மதுரை.ஏற்கனவே அக்டோபர் 26 வலைப்பதிவர் திருவிழாவுக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே தமிழர்களின் பண்பாட்டை,கலாச் சாரத்தை,மொழியை முன் வைத்து பசுமைநடை அமைப்பு 40வது பயணத்தை பாறைத்திருவிழாவாக கொண்டாடுகிறது.
             2500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட மதுரை தமிழர்களின் பண்பாட்டுத்தலைநகரமாக விளங்கி வருகிறது.மதுரையின் தொன்மையை நிறுவும் சான்றுகளாக குகை ஓவியங்கள், தமிழ்பிராமிக்கல்வெட்டுக்கள்,சங்க இலக்கியங்கள்,நாட்டுப்புற பாடல்கள்,வடமொழி மற்றும் பிறநாட்டு  அறிஞர்களின் குறிப்புகள் திகழ்கின்றன.

      எண்பெருங்குன்றங்கள்(மலைகள்) சூழ வைகை ஆற்றங்கரையில் கடம்பமரங்கள் நிறைந்த நம் மதுரை உலகின் தொல்நகரங்களுள்  ஒன்று. தமிழுக்கு செம்மொழித் தகுதி பெறக் காரணமான தமிழ்க் கல்வெட்டுகளும் சங்க இலக்கியங்களும் மதுரையின் மலைகளிலும்,வீதிகளிலும் உறைந்திருக்கின்றன.
    இவற்றை பாதுகாக்கவும், இளையதலைமுறைக்கு கொண்டு செல்லவும் நூற்றுக்காணக்கான ஆர்வலர்களோடு ஒவ்வொரு மாதமும் பயணிக்கிறது பசுமை நடை.மொழி,மதம்,சாதியை கடந்து அன்றாட கூலி முதல்,விவசாயி,அலுவலர், ஆய்வுமாணவர் வரை  விரிந்தது பசுமை நடையில் பங்கேற்போர் வட்டம்.

  


   கடந்த ஆண்டு ( 25 வது பயணம்)பசுமைநடை நிகழ்த்திய விருட்சத்திருவிழா பெரும் வரலாற்று கொண்டாட்டமாக தமிழகம் எங்கும் பேசப்பட்டது.ஊடகங்களின் உற்சாக ஆதரவில் "மதுர வரலாறு' புத்தகம் குறுகிய காலத்திலேயே இரு பதிப்புகள் வெளிவந்தது.இதனைத் தொடர்ந்து பசுமைநடை இயக்கத்திற்கு விஜய் தொலைக்காட்சியின் "நீயாநானா விருதுகள் 2013" வழங்கப்பட்டது.

                      எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் இணையதளம்

இப்போது பசுமைநடை தனது 40வது நடையை பாறைத்திருவிழா என கொண்டாட ஆயத்தமாகி வருகிறது. இந்த விழாவில் "மதுர வரலாறு" நூலின் ஆங்கில பதிப்பு வெளியாக உள்ளது. அதில் உங்களது பங்களிப்பாக, விளம்பரங்கள், நன்கொடையும் தந்து இந்த முயற்சியின் பகுதியாக நீங்களும் இணைய வரவேற்கிறோம்.
நாள்... இடம்

செப்டம்பர்.28.2014
கீழக்குயில்குடி சமணர் மலை அடிவாரம்
பெரிய ஆலமரத்தடியில்

பாறைத்திருவிழாவில் நம்முடன் உரையாட...

முனைவர் இல சுப்பிரமணியன்

மாவட்ட கலெக்டர் ,மதுரை

சி.கதிரவன்

ஆணையாளர் மதுரைமாநகராட்சி

பேரா தொ.பரமசிவன்

பண்பாட்டு ஆய்வாளர்

தியோடர்பாஸ்கரன் 
சூழலியல் அறிஞர்

சு.கி.ஜெயகரன் 

நிலவியல் அறிஞர்

பேரா.சுந்தர்காளி
லஜபதிராய் வழக்கறிஞர்

பாமயன் சூழலியல்  அறிஞர்

எஸ்.ராமகிருஷ்ணன் 
எழுத்தாளர்

மருத்துவர்.கு.சிவராமன்
கமலாலயன் எழுத்தாளர்

மனோன்மணி 
தொல்லியல் அறிஞர்

வா.செல்லத்துரை எழுத்தாளர்
பேரா.வே.பிரபாகர்

பேரா.வீ.செல்வக்குமார்

தொல்லியல் ஆய்வாளர்

சௌ மோகனசுந்தரம் விவசாயி
அசோக்கண்ணன் இயற்கை ஆய்வலர்

இவர்களோடு கீழக்குயில்குடி கிராமத்து மக்களும் நாமும்நிகழ்ச்சி நிரல்...

காலை 6.30 மணிக்கு பதிவு
காலை 7.00 மணிக்கு 
செட்டிப்புடவு,பேச்சியப்பள்ளம் படுகையைப் பார்க்க
காலை 8.00 மணிக்கு
காலை சிற்றுண்டி
காலை 9.30மணிக்கு
தொடக்க நிகழ்வு
மற்றும் 
குழந்தைகளுக்கான முகாம் தொடக்கம்
காலை 10 மணிக்கு
நூல் வெளியீடு
காலை 11.30 மணிக்கு
தேநீர் இடைவேளை
மதியம் 1.30 மணிக்கு
மதிய உணவு

தொடபுக்கு...

3/351 நிலாமுற்றம் கார்த்திகாநகர்
தனக்கன்குளம்,திருநகர்
மதுரை 625006
மின்னஞ்சல்:greenwalkmdu@gmail.com

கைபேசி:9789730105,9003437578
நம் வரலாற்றை,கலாச்சாரத்தை,பண்பாட்டை தெரிந்து கொள்ள வருக... மதுரை உங்களை வரவேற்கிறது.

செல்வன்.      

          
உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...