செவ்வாயை அடையும் முதல் ஆசிய நாடு இந்தியா


செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை மங்கள்யான் செயற்கைகோள் இந்தியாவுக்கு பெற்றுத்தரும் வாய்ப்புள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) அறிவியல் செயலாளர் வி.கோட்டீஸ்வர ராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பெங்களூரில் நேற்று கூறும்போது, "மங்கள்யான் செயற்கைகோளை செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் பணி வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இப்பணி வெற்றி பெறுமானால், செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையும், முதல் முயற்சியில் செவ்வாயை அடைந்த நாடு என்ற பெருமையும் நமக்கு கிடைக்கும்” என்றார்.
           
                    மங்கள்யான பேஸ்புக்கில் தொடர... இங்கே கிளிக்
     
அவர் மேலும் கூறும்போது, “செவ்வாய்க்கு செயற்கை கோள் அனுப்பும் பணி பலமுறை தோல்வி அடைந்துள்ளதை நாம் அறிவோம். விண்ணில் ஏவும்போது அல்லது செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும்போது என பல்வேறு கட்டங்களில் இப்பணி தோல்வி அடைந்துள்ளது. நாம் அனுப்பிய மங்கள்யான் செயற்கைகோள் 98 சதவீத பயணத்தை பூர்த்தி செய்துள்ளது. அதை செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது” என்றார்.
இப்பணியில் அமெரிக்காவின் நாசாவுடன் இஸ்ரோ இணைந்து பணியாற்றுமா என்ற கேள்விக்கு, “இதுவரை அப்படியொரு திட்ட மில்லை. வரும் நாட்களில் இருதரப் பினருக்கும் இத்தகைய எண்ணம் ஏற்பட்டால் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது" என்றார்.
மங்கள்யாள் செயற்கைகோளை செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவதற்காக பூர்வாங்கப் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது

நன்றி
திஇந்து தமிழ்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
cangratulations
அன்பின் நண்பர்க்கு வணக்கம். நேர்த்தியாகவும் அறிவியல் ஆர்வத்தினைப் பகிர்ந்துகொள்ளும் அரிய தளமாகவும் விளங்கும் தங்கள் தளத்தினைத் தொடர்வோனாக இன்றுதான் பதிவு செய்தேன்.
திண்டுக்கல் தனபாலனின் வலைப்பதிவர் பட்டியல் பார்த்து வந்தேன்.
மதுரை வலைப்பதிவர் திருவிழா நம் தமிழ்வலைப்பதிவர் அனைவரையும் இணைக்கட்டும். வணக்கம்.
  • எனது பிளஸ்2 ஆசிரியரை தேடிக்கொண்டிருக்கிறேன் - இயக்குனர் சசிக்குமார் பேட்டி
    13.03.2012 - 0 Comments
    ஒவ்வொரு பேட்டியிலும் எனது ப்ளஸ்2 ஆசிரியரை பற்றி தெரிவி க்கிறேன்.ஆனால் அவரை பார்க்க முடியவில்லை என கண்கலங்கிய…
  • காமராஜரும் மோடியும் ஒரே சிந்தனை உடையவர்களாம்-  வெங்கய்யா நாயுடு
    16.07.2015 - 1 Comments
    காமராஜரின் 113 வதுபிறந்த தின விழா விருதுநகரில் கொண்டாடப்பட் டது. ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பினர்,…
  •  பொக்கிஷத்தை பாதுகாத்து வரும் வால்முளைத்த மர்ம மனிதர்கள்
    05.09.2016 - 3 Comments
    700ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பாழடைந்து கிடக்கும் பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவிலின் உள்ளே கீழ் நோக்கி…
  • இசைத் தொகுப்பாகும் கமல்ஹாசனின் பாடல்கள்
    19.07.2012 - 1 Comments
    கமல்ஹாசன் இதுவரை திரைப்படங்களில் தனது சொந்தக் குரலில் பாடியுள்ள பாடல்கள் அனைத்தையும் தொகுத்து தனி இசைக்…
  • ஆதிசிவனை திறக்க வராதீர் பிரதமரே! ஆன்மீகத்தின் பெயரால் சட்டவிரோதம்:
    23.02.2017 - 1 Comments
    மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை ஈஷா மையத்தின் சார்பாக 112 அடி ஆதிசிவன் சிலை திற்கக்பப்ட உள்ளது.…