14 செப்., 2014

கமலின் பாபநாசம் புகைப்படங்கள்....

கமல் ரசிகர்களுக்கு தொடர்ந்து சந்தோசத்தை கொடுக்கும் விதமாக மூன்று படங்கள் காத்திருக்கின்றன. விஸ்வரூபம் 2, உத்தமவில்லன்,தற்போது அதிரடியாக பாபநாசம் படம் வேகமாக தயாராகிவருகிறது.
         விஸ்வரூபம் 2 அதன் முதல்பாகத்தை போலவே  ஜேம்ஸ்பாண்டி டைப் கதை... ஓரேமாதரியாக அடுத்ததடுத்து வேண்டுமே என்பதால் உத்தமவில்லன். 16ம் நூற்றாண்டு நடன கலைஞனாகவும் தற்போதைய காலத்து இயக்குனராகவும் இரண்டு வேடம். கேரள நடனக்கலைஞரின் வேடம் அணிந்த போது கமல் காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனங்கள் வந்தன. இதில் காப்பியடிக்க என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை.
விஸ்வரூபம் பிரச்சனை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்த அடங்கிப்போனது தனிப்பிர்ச்சனை.  உத்தம்வில்லன் நடித்து முடித்து ரீலிஸ்காக வேலைகள் நடந்து வருகின்றன. அடுத்து மோகன்லால் நடித்து சூப்பர் ஹீட் படமான த்ருஷ்யம் கமல் நடிக்க போகிறார் என்றதும் அதிலும் பிரச்சனை...த்ருஷ்யம் படத்தை தமிழில் எடுக்க கூடாது என்ற கோர்ட் வரை பிரச்சனை செய்கிறார்கள்.
      சினிமாவில் நடக்கும் பாலிடிக்ஸ் பற்றி சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள் சொல்கிறேன். நான் இதுவரை பாலிடிக்ஸ் செய்தது இல்லை.ஆனால் நிறைய அனுபவம் இருக்கிறது...
      என்று சொல்லியிருக்கிறார் கமல்....
கோடியில் பணம் புரளுகிற இடம் பாலிடிக்ஸ் இருக்கும் போல.சரி இனி திருஷ்யம் படம் குறித்து...

           கேரளாவில் மெகா ஹிட்டான இப்படம், மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த படம் த்ருஷ்யம்.பின்னர் தெலுங்கு, கன்னடத்திலும் ரீமேக்காகி வெளியானது. இதில் தெலுங்கில் அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து அப்படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் தயாராகிறது. மோகன்லால் நடித்த வேடத்தில் கமல் நடிக்கிறார். அதேசமயம், மலையாள படங்களின் கதை தமிழ்நாட்டில் பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகாது என்பதால், தமிழுக்காக கதையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளனர். திருநெல்வேலியில் நடக்கும் கதையாக மாற்றியிருக்கும் கமல், முதன்முறையாக திருநெல்வேலி தமிழ் பேசியும் நடிக்கிறார். தற்போது உத்தமவில்லன் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் நெல்லை தமிழ் பேசும் பயிற்சியிலும் இறங்கி விட்டார்.
 முக்கியமாக, இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்? என்கிற கேள்விகள் ரொம்ப நாட்களாகவே எழுந்து கொண்டிருக்கிறது. ஸ்ரீதேவி, மீனா, சிம்ரன், கௌதமி என பலரது பெயர் அடிபட்டு வந்த நிலையில, இப்போது கௌதமியே கமலின் மனைவியாக நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.மேலும், மலையாள த்ருஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் என்பவரே தமிழிலும் பாபநாசம் படத்தை இயக்குகிறார்.
மேலும் மலையாள த்ருஷ்யத்தில் போலீசாக நடித்த ஆஷா சரத்தே தமிழிலும் நடிக்க, வில்லனாக கலாபவன் மணி நடிக்கிறாராம். இவர்கள் தவிர மலையாள பதிப்பில் நடித்த மேலும் சில நடிகர்-நடிகைளும் இதில் நடிக்கிறார்கள்.
 ரசிகர்களுக்கு அடுத்ததடுத்து விதவிதமான நடிப்பு மூலமாக அசத்த இருக்கிறார் கமல்

செல்வன்-


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Related Posts Plugin for WordPress, Blogger...