ஜிகர்தண்டா... வித்தியாசமான சுவை

எங்க ஊர் ஸ்பெஷல் ஜிகர்தண்டா.காலை காட்சிக்கு எப்போதையும் விட கூடுதலாக கூட்டம்.
நம்ம  ஊர்ல படம் எடுத்திருக்காங்கலாம்லா... எப்படியிருக்குண்டு பாம்போம். டையரக்டரும் (கார்த்திக்குசுப்புராஜ்) நம்ம ஊராம்லா...ஊர் பாசத்தோடு கூடுதல் கூட்டம்.மதுரை படங்களுக்கே உரிய அடிதடி,கட்டப்பஞ்சாயத்து இதுலயும் இருக்கு.ஆனா ல் அதைக்கொஞ்சம் புதிதாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.தமிழர்களின் சினிமா மோகம்.... எழவு வீட்டில் ஒப்பாரி வைக்கும் பெண்கூட ... நீங்க தான அந்தபடத்தல நடிச்சது என்று கேட்டுவிட்டு மீண்டும் ஒப்பாரியை தொடருகிறார். அவ்வளவு ஏன் மதுரையை ஆட்டிப்படைக்கிற தாதாவுக்கே சினிமா மோகம். இதுதான் ஜிகர்தண்டாவின் மையக்கதை.  இயக்குனராக சித்தார்த்,சேலை திருடும் பெண்ணாக லட்சுமிமேனன், மதுரை தாதா  சேதுவாக சிம்ஹா, பெட்டிக்கடை தாத்தாவாக சங்கிலி முருகன், முழுக்க இயல்பான வெளிச்சத்திலேயே படமாக்கப்பட்டுள்ளது.
கதை சுருக்கமாக....
கார்த்திக் குறும்படம் இயக்குனர். இவருக்கு சினிமா படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ரத்தம் தெறிக்க ‘நாயகன்’, ‘தளபதி’ மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கார்த்திக்கிடம் கேட்கிறார். எனவே ஒரு பெரிய ரவுடியின் கதையை படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்கிறார். இதற்காக தமிழ் நாட்டில் உள்ள பிரபல ரவுடிகளை பற்றி அலசுகிறார். அப்போது மதுரையில் பிரபல தாதாவாக சேது ஒருவர் இருப்பதை அறிந்து தன் நண்பனான கருணா வீட்டிற்கு செல்கிறார். அங்கேயே தங்கிக் கொண்டு சேதுவின் வாழ்க்கையை பற்றி தெரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறார்.

அப்போது சேதுவிடம் நெருக்கமாக இருப்பவர்களை வைத்து சேதுவை நெருங்க நினைக்கிறார். அப்போது சேதுவின் உறவுக்கார பெண்ணான கயலிடம் பழக்கம் ஏற்படுகிறது. கார்த்திக் பழகுவதை கயல் காதல் என்று நினைத்து அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.


அதன்பிறகு சேதுவைப் பற்றி தெரிந்துகொள்ள தீவிரமாக முயற்சி செய்கிறார் கார்த்திக். இந்த முயற்சியில் ஒரு அசம்பாவிதம் நிகழ கார்த்திக், சேதுவிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது கார்த்திக், நான் ஒரு சினிமா பட இயக்குனர். உங்களைப் பற்றி தெரிந்துகொண்டு அதை படமாக்க முயற் செய்வதாக சேதுவிடம் கூறுகிறார். இதற்கு சேது சம்மதம் தெரிவித்து தான் கடந்து வந்த பாதையை கதையாக கார்த்திக்கிடம் சொல்கிறார். இந்த கதையில் சேதுவே நடிக்க ஆசைப்படுகிறார். இதற்கு கார்த்திக் மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் கோபமடையும் சேது, கார்த்திக்கை கொல்ல நினைக்கிறார்.
இறுதியில் தன்னை காப்பாற்றிக் கொள்ள சேதுவை வைத்து கார்த்திக் படம் எடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
                   
                      இதையும் படித்து பாருங்களேன்....
         
                      1. ஜிகர்தண்டா - மதுரை ஸபெஷல்....

இடைவேளைக்கு பிறகு படம் கொஞ்சம் இழுவை... பிரமாதமான படம் என்று  சொல்ல முடியாவிட்டாலும் பார்க்கலாம். ஜிகர்தண்டா படம் பார்த்துவிட்டு,மதுரையில் வந்து ஜிகர்தண்டா சாப்பிட்டுபாருங்கள் வித்தியாசமான  சுவையாக இருக்கும்.

செல்வன் 

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

  • சினிமாவில் ''what if ''  என்பது ......
    07.02.2012 - 0 Comments
    எவ்வளவு பிரமாண்டமான படமானாலும் சரி அதன் மையப்புள்ளி  ''what if ''  தான். இதை சரியாக திட்டமிட்டு…
  • மோடி வாய் மூடி இருப்பது ஏன்?
    28.07.2014 - 3 Comments
    முஸ்லிம்களுக்கு எதிரானவை என்று கருதப்படும் சம்பவங்கள் குறித்து நாட்டின் புதிய பிரதமர்நரேந்திர மோடி வாய்…
  • அரசு வேலை வேண்டுமா?
    11.03.2015 - 1 Comments
    நீங்கள் அரசு வேலையில் சேர விரும்புகிறீர்களா? மிக மிக எளிதாக அரசு வேலை வாங்கலாம். கால்காசா (காலாணா)…
  • நாம் ஏன் தமிழில் பேச வேண்டும் ? கமல் பேட்டி
    10.05.2012 - 4 Comments
    தமிழர்களாகி நாம் முழுமையாக தமிழில் பேசுகிறோமா? என்றால் வெட்கத்தோடு இல்லை ஏன்றுதான் பதில் சொல்லியாக வேண்டும்.…
  • 02.01.2015 - 0 Comments
    கோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....…