நாங்கள் மட்டும் ஏன் இவ்வுலகில் வாழக்கூடாது?

நாங்கள் மட்டும் ஏன் இவ்வுலகில் வாழக்கூடாது ? என இஸ்ரேலின் தாக்குதலில் படுகாயமுற்று காசா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஒருவன் கேள்வி எழுப்பியிருக்கிறான். இக்கேள்வி உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.பாலஸ் தீனத் தின் சுயாட்சி பகுதியான காசா மீது இஸ்ரேல் மொத்தமாக ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு கடந்த 24 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 11450க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனை நிறுத்த கோருவது போல் பேசும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தேவையான ஆயுதங்களையும், மக்களை அழிக்கும் குண்டுகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.


இதில் பெரும்பகுதியினர் அப்பாவி பொதுமக்கள். குறிப்பாக அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேலின் இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் காசா மருத்துவமனையில் முகமது அலைலா என்ற 10 வயது சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். தனது உடலில் ஏற்பட்டிற்கும் குண்டு காயங்களால் வலியால் துடிக்கும் அந்த சிறுவன் தனது தாயிடம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறான்.

                         இதையும் படித்து பாருங்களேன்......

           1.  ஒபாமா உங்களுக்கு இதயம் இருக்கிறதா?

                 

அதாவது நான் வலியில் துடிக்கிறேன். ஏன் எங்களால் மட்டும் இங்கு ( காசா) சுதந்திரமாக வாழ முடியவில்லை. எங்களுக்கு சுதந்திரமாக விளையாட உரிமை இல்லையா? மற்ற குழந்தைகளை போல் ஏன் எங்களால் வாழ முடியவில்லை. உலக தலைவர்களிடம் நான் கேட்கிறேன். எங்களுக்கு சுதந்திரமான வாழ்கையை ஏற்படுத்தி கொடுங்கள் என கேட்டுள்ளான். இந்நிகழ்வு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்