சுதந்திர தினமும்... சில சாக்லெட் மீட்டாய்களும்

அரசு ஊழியர்கள்,தனியார்நிறுவன ஊழியர்களுக்கு   வழக்கமான விடுமுறை நாள். அரசு ஊழியர்களுக்கு சுதந்திரதினம் வெள்ளிக்கிழமையாக வந்தால் நல்லது.தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்.எங்காவது டூர் போயிட்டு வரலாம். ஆசிரியர்களுக்கு விடுமுறை தான் ஆனால் பள்ளியில் கொடியேற்ற¤யாக வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு கொடியேற்றி சில சாக்லெட் மீட்டாய்கள் கொடுப்பார்கள்.தொலைகாட்சிகளை பொருத்தவரை சிறப்பு நிகழ்ச்சிகள்.. நடிகர்,நடிகைகள் பேட்டி, மாலையில் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக ஒரு திரைப்படம். இது தான் சதந்திரதினத்தை நாம் கொண்டாடுகிற விதம்.

போர்த்துகீசிய  மாலுமி வாஸ்கோடகாமா(கி.பி.1498)கோலிக்கோட்டில் வந்திறங்கியதும்,கிழக்கிந்திய கம்பெனி (கி.பி.1615) சூரத்தில் வியாபாரத்தை துவங்கிய காலகட்டத்தையும் கணக்கு பார்த்தால் கிட்டத்தட்ட 400 லிருந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைபட்டுகிடந்ததும்,அதன் பின்பான வலி மிகுந்த சுதந்திர போராட்டத்தையும்,நாம் சுதந்திரதினத்தன்று நினைத்து பார்கிறோமா????..
சுதந்திரப்போராட்டம் என்றதும் கட்டபொம்மன், மருதுசகோதரர்கள்,காந்தி,நேரு,பகத்சிங்,பாரதியார்,வ.வு.சி,கொடிகாத்தகுமரன் போன்ற தலைவர்கள் நினைவுக்கு வருவார்கள்.இவர்களை போலவே சுதந்திரதிற்காக போராடிய வெளிச்சத்திற்கு வராத தலைவர்கள்,சில சம்பங்கள் அதன் பின்பான சோகங்கள்....

தினசரி 500 பேர் மரணம்...

கிபி.1615 ல் பிரிட்டிஸ் மாகாராணி எலிசபெத் அனுமதியோடு சூரத்தில் மன்னர் ஐஹாங்கீர் அனுமதியோடு கி
ழக்கிந்திய கம்பெனி துவங்கி 100 சதம் லாபம் வைத்து வியாபாரம் செய்தது.தங்களுக்கு தேவையான வணிகப்பயிர்களை மட்டும் உற்பத்தி செய்து மிகமிக குறைந்த விலைக்கே வாங்கினர்.மேலும் தாறுமாரான வரிவிதித்தான் காரணமாக விவசாயம் ஒட்டுமொத்தமாக சீரழிந்து போனது.
1770 களில் பீகார், ஒரிசா,வங்காளம் பகுதிகளில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பீகாரில் மே மாதத்தில் மட்டும் 2 லட்சம் பேர் இறந்து போனார்கள். ஜூன் மாதத்தில் எட்டில் ஓருபகுதியினர் இறந்து போனார்கள்,ஜூலை மாதத்தில் தினசரி 500 பேர் இறந்து போனார்கள்,ஒட்டு மொத்தமாக 10 மில்லியன் மக்கள் இறந்து போனார்கள்.

குதிரை வாலில் கட்டி இழுத்துச்செல்லப்பட்ட கொடுமை

வங்காளம்,பீகார் எல்லைப்பகுதியில் சந்தால் ஆதிவாசிகளின் பூர்வீக பூமி.அவர்களை அங்கிருந்து விரட்டிவீட்டு ,இயற்கை வளங்களை கொள்ளையடித்தார்கள்.கோபமடைந்த சந்தால் மக்கள் எதிர்த்து நின்றார்கள்.பாபா தில்காமஜி போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.1784 ல் பெரிய அளவில் பிரிட்டிஷ்படை காட்டை சுற்றிவளைத்தது.ஆயிர்க்கணக்கான சந்தால் ஆதிவாசிகள் கொல்லப்பட்டனர்.காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட தில்கா குதிரை வாலில் கட்டப்பட்டு 30 கிமீ இழுத்துச்செல்லப்பட்டார். தசைகளெல்லாம் கிழித்தெரியப்பட்ட நிலையிலும் தூக்கிலிடப்பட்டார்.

ஜாலியன் வாலாபாக் கொடூரம்...

நான்கு பக்கமும் சுவரும்,ஒருகுறுகிய வழியும் கொண்ட மைதானம்.1919 ஏப்ரல்  13 ஞாயிற்றுக்கிழமை அமைதியாக நடந்து கொண்டிருந்த கூட்டத்தில் திடீரென ஜெனரல் டயர் ஆங்கிலேய சீப்பாய்களுடம் நுழைந்தான்.சரமாரியாக 15 நிமிடங்களுக்குமேலாக சூட்டுத்தள்ளினான்.பலர் அங்குமிங்கும் ஓடி அங்கிருந்த கிணற்றில் குதித்தது இறந்தனர்.சில வினாடிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
"அந்த இரவு முழுவதும் என் கண்வரின் ரத்தம் தோய்ந்த சடலத்தின் அருகேயிருந்தேன்.அவரை வீட்டிற்கு தூக்கிச்செல்ல என்னோடு யாரும் இல்லை.நாய்களையும்,நரிகளையும் விரட்ட என்னிடம் கம்பு ஒன்று இருந்தது.அந்த இரவு முழுவதும் மரணஓலம் கேடுக்கொண்டே இருந்தது."
 ஜாலியன்வாலாபாக்கில் இறந்த கண்வன் உடலருகே இருந்த மனைவி ரத்தன்தேவி.
இந்த கொடூரத்தை செய்த டயர்...
"நான் சுட்டேன்,கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன்.மக்கள் மனதில் எந்த அளவிற்கு பயம் ஏற்படுத்த வேண்டுமென நினைத்தேனோ அந்த அளவுக்கு சுடவில்லை என்றே நினைக்கிறேன்...."
பழிக்கு பழிவாங்கிய உத்தம் சிங்...
ஜாலியன்வாலாபாக் கொடூரம் நடந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு 1940 மார்ச் 13 ம் தேதி ஜெனரல்டயரை சூட்டுக்கொன்றார் உத்தம்சிங். அதற்காக தூக்குமேடை எறிய போது...
"அவனுக்கு அது தாகும்.அவன்தான் உண்மை குற்றவாள¤.என்நாட்டு மக்களின் சுதந்திர உணர்ச்சியை நசுக்கப்பார்த்தான்.என் தாய்நாட்டுக்காக உயிரைகொடுப்பது என்பதை தவிர வேறு பெருமை என்ன உள்ளது.21 வருடங்கள் இதற்காக காத்திருந்தேன்."

மரத்தை பார்த்து பயந்த வெள்ளையர்கள்...

பகத்சிங்கின் நண்பரும் சுதந்திர போராட்ட வீரருமான சந்திரசேகர ஆசாத்தை போலீஸார் தேடிக்கொண்டுருந்தது.அவரை உயிருடனோ,பிணமாகவோ பிடித்து கொடுத்தால் ரூ 30,000 சன்மானம் ( அப்போது இது பெரிய தொகை) அறிவித்தது.1931 பிப்ரவரி அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில் போலீஸ் ஆசாத்தை சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றது. குண்டுகளிலிருந்து தப்பிக்க ஆசாத் ஒளிந்திருந்த மரத்தை பார்க்க தினசரி லட்சம் பேருக்கு மேல் திரண்டார்கள்.பிரிட்டீஷ் அரசுக்கு அந்த மரமே பயத்தை ஏற்படுத்தியது.அந்த மரத்தையும் வேரோடு பீடுங்கி எரிந்தார்கள்.
   இப்படி பல லட்சம் பேரின் தியாகத்தால் கிடைத்ததுதான் சுதந்திரம்.மாநிலங்கிடையிலான நதிநீர் பிரச்சனை,அரசியல் வாதிகளின் ஊழல்கள்,தினமும் இரவு உணவு கிடைக்காமல் தூங்கபோவாரின் எண்ணிக்கை 30 லட்சம்,தற்கொலை செய்து கொல்லும் விவசாயிகள்,என 67 ஆண்டுகளா சுதந்திரத்தை சரியாகத்தான் பயன்படுத்தியிருக்கிறோமா?

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments