தலைக்கு ஹேர் டை அடிப்பவர்களுக்கு எச்சரிக்கை

கண்ணுக்கு
மை அழகு...
கவிதைக்கு
பொய் அழகு...
....
முதுமைக்கு
நரை அழகு...
ஆனால் முதுமையையும்,நரையையும் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை
5 நிமிசத்துல டிபன் செய்ய முடியாது... ஆனா டை அடிச்சுடலாம்.. என்றபடி ஒரு விளம்பரம்,மகளே அம்மாவுக்கு டை அடித்து அழகு பார்க்கும் விளம்பரம்... இப்படி வயதான நடிகர்கள்,நடிகைகள் நடிக்கும்  ஹேர் டை விளம்பரம் தொலைக்காட்சிகளில் அதிகம் பார்க்கலாம். உயர் பதவிகளில் இருக்கும் ஆண்கள்,பெண்கள்  தலைக்கு டை அடிப்பதை  தங்களது ஆளுமையின் வெளிப்பாடக பார்க்கிறார்கள். குடும்ப பெண்கள் பேரன்,பேத்தி பார்த்த பிறகு கூட டை (தலைக்கு வண்ணமடித்தல்) அடிப்பதை நிறுத்துவதில்லை. இவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக அதிர்ச்சி தகவல் ...டை அடித்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் ...

தலைமுடிக்கு நிரந்தரமாக வண்ணமடித்தால்,வண்ண மையில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் புற்று நோயை உருவாக்கக்கூடும் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. தலைமுடியை வண்ணமாக்கும் அல்லது சுருள் சுருளாக மாற்றும் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களில் தடை செய்யப்பட்ட நறுமணமூட்டும் அமைன்களான டொல்யூடைன்ஸ் கலந்துள்ளது. அவை புற்றுநோயை உருவாக்கக்கூடும். இந்த ஆய்வை ஸ்வீடனில் உள்ள லுண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்தியுள்ளனர். இவைபயன்படுத்துவோருக்கு மட்டுமல்லாது, முடி திருத்தும் நிபுணர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்தசாயங்களில் இரண்டு கார்சினோஜென்ஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. கார்சினோஜென் என்பது கதிர்வீச்சு மூலம் புற்றுநோயை உருவாக்கும்

இந்த ஆய்வு 295 மகளிர் முடிதிருத்துபவர்கள், அடிக்கடி முடிக்குசாயம் பூசக்கூடிய 32 பேர், கடந்தஓராண்டு அல்லது அதற்கும்மேலாக சாயம் பயன்படுத்தாதவர்கள் ஆகியோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. கணிசமான முடிதிருத்துவோரிடம் சிறுநீர்ப்பை புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. டை அடிப்பவர்கள் ஜாக்கிரதை.

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments