பயனுள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. அழைப்புகளை பேசுவதற்குப் பயன்படுத்தும் நேரத்தை விட அதிகமாக அதில் உள்ள விளையாட்டுகள் மற்றும் சமூக வலைத்தள குறுஞ்செயலிகளை உபயோகிப்பதிலேயே அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர். கூகுள் பிளே ஸ்டோர் எனப்படும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கான குறுஞ்செயலிகளை வழங்கும் இணையதளத்தில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இவை கிடைக்கின்றன.பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் இருந்தாலும் உபயோகமான பல குறுஞ்செயலிகளும் அதில் உள்ளன. அத்தகைய சில குறுஞ்செயலிகளைப் பற்றி

லோரி கவுன்ட்டர் (Calorie Counter)

இந்தச் செயலியைப் பயன்படுத்தி எந்த உணவினால் உடலுக்கு எவ்வளவு சக்தி கிடைக்கிறது என்பது போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இந்த கலோரி கவுன்ட்டரில் கிட்டத்தட்ட 17 லட்சம் உணவு வகைகளில் உள்ள சத்துக்கள் பற்றிய தகவல்களை பெற முடியும்.

பார்வையற்றோருக்கான ஜோர்ஜி (Georgie)

இம்மென்பொருளின் மூலம் சைகைகள்,விரல்கள் மூலம் கட்டளைகள் வழங்கலாம். மற்ற சாதாரண மென்பொருளில் கட்டளைகள் இட்டப் பின்பு எந்த ஒலியும் கேட்காது. ஆனால், உங்கள் விரலால் கட்டளை வழங்கிய பின் ஜோர்ஜியில் பீப் என்ற ஒலி கேட்கும்வரை காத்திருக்க வேண்டும். இதுதான் சாதாரண ஸ்மார்ட் போனுக்கும், ஜோர்ஜி மென்பொருள் போனுக்கும் உள்ள வித்தியாசம்.ஒரு கட்டளையை கொடுத்த பிறகு கட்டளை எதுவென சத்தமாக ஸ்மார்ட்போனில் படிக்கப்படும். இவ்வாறு படித்துக் காட்டுவதன் மூலம் எந்தக் கட்டளையை அவர்கள் அழுத்தியிருக்கிறார்கள் என அறியமுடியும். ஜோர்ஜி இந்தச் செயல்களை சிறப்புறச் செய்கிறது.நீங்கள் இருக்கும் இடத்தை குரல் மூலமாக உங்களுக்கு தெரிவிக்கும் வசதி மற்றும் அருகிலிருக்கும் பேருந்து நிலையத்தைக் கூட அறிவிக்கும். பேருந்து வரும் நேரத்தையும் இது குரல் மூலமாக தெரிவிக்கும் வசதியும் இதில் உள்ளது.

பேட்டரி டாக்டர் (Battery Doctor

இந்த அப்ளிகேசனை உங்கள் மொபைலில் நிறுவினால் நல்ல பாட்டரி சேமிப்பு கிடைக்கும். பாட்டரியை மூன்று அடுக்கு முறையில் சார்ஜ் செய்வது இதன் சிறப்பு. மேலும் இந்த அப்ளிகேஷன் மின்சாரத்தை மேலாண்மை செய்கிறது, அதாவது பாட்டரி முழுவதுமாக சேமித்த பின் மொபைலில் உள்ள செயலிகளுக்கு தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை தருகிறது, அதனால் நமக்கு இரண்டு மடங்கு பாட்டரி நீட்டிப்பு கிடைக்கிறது. மொபைலில் நாம் பல செயலிகளைப் பயன்படுத்துவோம், அவைகளில் ஆப்டிமிசேஷன் முறையில் மின்சாரத்தை மிச்சமாக்குகிறது.ஆண்ட்ராய்ட் 2.3 முதல் 4.4 வரையிலான அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கக்கூடியது.

டம்ப்ஸ்டர் ரீசைக்கிள்பின் (Dumpster – Recycle Bin)

இந்த செயலியை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நிறுவியதும், கணினியில் உள்ளது போலவே ரீசைக்கிள் பின் செயல்படும். இச்செயலியைப் பயன்படுத்தி தவறுதலாகவோ அல்லது தெரிந்தோ அழிக்கப்பட்ட கோப்புகளை, படங்களை, ஆடியோ, வீடியோ பைல்களை மீட்டெடுக்கலாம்.அழிக்கப்பட்ட பைல்களை படங்களோடு பார்வையிடலாம். இந்த ரீசைக்கிள் பின் பார்க்க தனியாக லாக்கிங்க் வசதி இருக்கிறது.இச்செயலியை உபயோகிக்க இணைய இணைப்பு தேவையில்லை.

சென்டினல் ( sentinel app)

நீங்கள் ஆபத்தில் இருக்கும்போது எஸ்எம்எஸ், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள் மூலம் உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் இருக்கும் இடம் குறித்த தகவலுடன் அனுப்பிவைக்கும். உங்கள் ஸ்மார்ட் போனை உடைத்துவிட்டால்கூட உங்கள் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேர்டு லென்ஸ் (Word Lens)

மொழி தெரியாத ஊருக்குச் செல்லும்போது அங்கிருக்கும் பெயர் பலகை, தகவல் பலகை ஆகியவற்றில் உள்ளவற்றை படிக்க முடியாமல் திணறுவோம். அந்த சமயத்தில் இந்த செயலியை இயக்கி கேமராவில் அந்தப் பெயரை படமெடுத்தால் அந்த மொழியில் இருப்பதை நமக்குத் தெரிந்த எந்த ஒரு மொழிக்கும் மாற்றிப் படித்துக் கொள்ள இந்த செயலி உதவுகிறது.

தமிழ் யோசி (tamil yosi)

தமிழ் விடுகதைகள், புதிர்கள், பழமொழிகள், சிந்தனைகள் மற்றும் பாடல்களைத் தரும் செயலி.

யில் முன்பதிவு அறிய (PNR status and train info)

ரயில் டிக்கட் முன்பதிவு விபரம், இருக்கை விபரம், கால அட்டவணை, வழித்தட வரைபடம், ரயில் தற்போது பயணிக்கும் ஸ்டேசன் விபரம் ஆகிய விபரங்களை இந்த செயலியைப் பயன்படுத்தி பெறலாம்.

விஜி ஆன்ட்டி வைரஸ் ( AVG AntiVirus Security - FREE)

புகழ்பெற்ற ஏவிஜி ஆன்ட்டிவைரஸ் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் செயலி. தீங்கு செய்யும் வைரஸ், ஸ்பைவேர் உள்ளிட்டவற்றை நீக்கவும், உள்ளே நுழையாமல் தடுக்கவும் உதவுகிறது. உங்களுடைய பிரைவசியை பாதுகாக்கும் வகையில் கூகுள் மேப், பிரௌசிங் ஹிஸ்டரி விபரங்களை லாக் செய்து பாதுகாக்கிறது. ஸ்மார்ட்போன் மெதுவாக இயங்குவதற்கு காரணமானவற்றை தடுத்து வேகமாக இயங்க துணைபுரிகிறது.மேற்கண்ட குறுஞ்செயலிகளையோ அல்லது வேறு ஏதேனும் குறுஞ்செயலிகளை நிறுவுவதற்கு கூகுள் பிளே ஸ்டோர் மூலமே முயற்சிக்கவும். வேறு இணையதளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் மற்றும் ஸ்பைவேர் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தகவல் 
தீக்கதீர்
தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்

அன்பை தேடி,,அன்பு இவ்வாறு கூறியுள்ளார்…
ALL USEFULL SOFTWARE THANKS
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
சிலது அறியாதவை... நன்றி... பகிர்வை bookmark செய்து கொண்டேன்....