பாறை ஓவியங்களில் வேற்று கிரகமனிதர்கள்...

வேற்றுகிரக மனிதர்களை குறித்த ஆர்வம் எப்போதும் பூமியில் வாழும் மனிதர்களாகிய  நமக்கு உண்டு. பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாகத்தான்  இருக்கிறோமா? என்ற கவலை ? இந்த ஆர்வத்தின் வெளிப்பாடாகவே அவதார்  போன்ற சினிமாக்களும் ,நிறைய நாவல்களும் வெளிவந்திருக்கின்றன.இணையதளங்களில்  வேற்றுகிரகமனிதர்களை பற்றிய காணொலிகள் காணக்கிடைக்கின்றன.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பறக்கும் தட்டுக்கள் வந்து போவதாக அடிக்கடி உறுதிப்படுத்தபடாத செய்திகள் வருவதுண்டு. அமெரிக்கா திட்டமிட்டே தன்னைபற்றி உருவாக்கும் பில்டப்பாக இருக்கலாம்????.... ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் பறக்கும் தட்டு செய்திகள் வந்ததில்லை ... ஆனாலும்  10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு குறிப்பாக வடகிழக்குமாநிலமான சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பாறை ஓவியங்களில் வேற்றுகிரகமனிதிர்களின் ஓவியங்கள் கிடைத்திருக்கின்றன.

                       மேலும் சில வேற்றுகிரகமனிதர்கள் பற்றி பதிவுகள்

 1.காரில் பயணித்த வேற்றுகிரகவாசி வீடியோ+ 10 கெட்டப்புகளில் எலியான்



 2. வேற்று கிரக மனிதர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் (படங்களுடன்)


 3. பறக்கும் தட்டுகளில் வந்த வேற்றுக்கிரக மனிதர்களின் ஆபுர்வ புகைப்படங்கள்



சத்தீஸ்கர் மாநிலத்தின் காங்கர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் மிகுந்தபஸ்டார் பகுதியில் உள்ள சராமாபாறைகளில் காணப்படும் ஓவியங்களில் அன்னிய கிரகத்தவரும், அறியமுடியாத பறக்கும் தட்டுகளும் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. இவற்றை ஆராய்வதற்கு நாசா மற்றும் இஸ்ரோ அமைப்புகளின் உதவியை நாட சத்தீஸ்கர் மாநில தொல்லியல் மற்றும் பண்பாட்டு துறை தீர்மானித்துள்ளது. இந்த பாறைகளில் காணப்படும் ஓவியங்களில் உள்ள அன்னிய கிரகத்தவரும், பறக்கும் தட்டுகளும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் காணப்படுவது போல் உள்ளன என்று தொல்லியல் ஆய்வாளர் ஜே.ஆர்.பகத் கூறுகிறார். சந்தேலி, கோட்டிடோலா ஆகிய கிராமங்களில் இந்தப்பாறைகள் உள்ளன.

                  சத்தீஸ்கர் பாறை ஓவியங்களில் காணப்படும் அன்னிய கிரகத்தவர்

இக்கிராமங்கள் ரெய்ப்பூரில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ளன. அன்னிய கிரக மனிதர்கள், தட்டுகள் போன்றவை இப்போதும் மக்களிடம், ஆய்வாளர்களிடமும் ஆர்வத்தைத் தூண்டுவது போல் அன்றும் இவை ஆர்வத்தை கிளப்பியுள்ளன. வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனிதர்கள் தாங்கள் கண்ட அல்லது தங்களுடைய கற்பனையில் உதித்தவற்றை ஓவியமாக வரைந்துள்ளனர் என்பதை இந்த ஓவியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்து கிராமத்தாரிடம் பல நம்பிக்கைகள் நிலவுகின்றன. பலர் இந்த ஓவியங்களை வணங்குகின்றனர். மற்றும் சிலர் தங்கள் முன்னோர்கள் இந்த சிறிய வடிவம் கொண்ட மனிதர்கள் வானில் இருந்து இறங்குவதைக் கண்டுள்ளனர் என்று கூறுகின்றனர். இவர்கள் வந்ததாக கூறப்படும் வாகனங்கள் திரைப்படங்களில் உள்ளது போல் தென்படுவது ஒரு தற்செயல் ஒற்றுமையே என்று பகத் கூறுகிறார்.

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

  • காதலில் ஜெயிப்பது எப்படி?
    21.02.2012 - 1 Comments
    நீங்கள் தற்போது எந்த வயதிலும் இருக்கலாம், 80,60,40,20 இப்படி அனைத்து வயதினரும் பார்க்க வேண்டிய படம்.குடும்ப…
  • வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அ.தி.மு.க.
    27.11.2011 - 1 Comments
    அ.இ.அ.தி.மு.க. தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்து 6 மாதங் கள் கடந்துவிட்டன. கடந்த மே மாதம் தேர்தல்…
  •  நீங்கள் மன அழுத்தம் உள்ளவரா?இல்லையா?
    09.04.2017 - 1 Comments
    உலகில் 30 கோடி பேருக்கு மன அழுத்த இருக்கிறது.அதில் நீங்களும் ஒருவரா? எப்படி கண்டுபிடிப்பது. ஒவ்வொரு…
  • தலைமுறைகள் படத்தின்கிளைமாக்ஸ் நிஜமானது - சசிகுமார்
    09.05.2014 - 0 Comments
    ஒரு கிரியேட்டருக்கு எப்போதுமே வயசு ஆகாது’ என்றுஇயக்குநர் சசிகுமார் தெரிவித்தார்.நடிகர் சசிகுமார்…
  • ஏர்வாடி தர்கா அருகே கோல் அளவு சொல்லும் 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
    30.07.2020 - 0 Comments
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகில் ஏரான்துறை என்ற இடத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கி.பி.16ஆம்…