சூட்கேசையே ஸ்கூட்டராக மாற்றும் புதிய தொழில்நுட்பம்..

விமான நிலையங்க ளுக்கோ, ரயில்நிலையங் களுக்கோ சூட்கேசை இழுத்துச் செல்லும் நடைமுறை கடந்த காலமாக மாறும் நிலை வெகுதொலைவில் இல்லை. சூட்கேசை நாம் இழுத்துச் சென்ற நிலையை மாற்றி, சூட்கேஸ் நம்மை சுமந்து செல்லும் நிலையை சீன விவசாயி ஒருவர் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். ஹே லியாங்காய் என்னும் சீன விவசாயி மின்சார சூட்கேஸ் ஒன்றை வடிவமைத்திருக்கிறார்.
இதன்மீது இருவர் அமர்ந்து மணிக்கு 12 மைல் வேகத்தில் பயணம் செய்யலாம்.மத்திய சீனாவில் சாங்சா நகரில், ஹே லியாங்காய் தான் கண்டுபிடித்த சூட்கேஸ்-ஸ்கூட்டர் மீது அமர்ந்து 7 மைல்தூரத்திலிருந்த சாங்சா ரயில் நிலையம் வரை சென்று திரும்பினார். இந்த சூட்கேஸ்-ஸ்கூட்டரில் மணிக்கு 12 மைல் வேகம் வரை பயணம் செய்யலாம். சுமார் 7 கிலோ எடையேயுள்ள இந்த சூட்கேஸ்-ஸ்கூட்டர் ஒரு சிறிய பேட்டரி மூலம் இயங்கக்கூடியது.

இதன் மீதுஇருவர் பயணம் செய்யலாம். 37 மைல்கள் வரை பயணம் செய்யலாம். பேட்டரி தீர்ந்துபோனால் உடனடியாக மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.இதனைக் கண்டுபிடித்துள்ள ஹே லியாங்காய் ஒரு பொறியாளர் அல்ல.மாறாக அவர் ஒரு விவசாயி. முறையாகக் கல்வி கற்றவர் அல்ல. முறைசாராக் கல்விமான் அவர். ஹே 1999இல் கால் பாதுகாப்பு முறை ஒன்றை வடிவமைத்தமைக்காக அமெரிக்காவிடமிருந்து விருதினைப் பெற்றிருக்கிறார். அமெரிக்காவிற்கு விருதினைப் பெறுவதற்காகச் செல்கையில் லக்கேஜை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார். அப்போதுதான் லக்கேஜ்மீதே பயணம் செய்யக்கூடிய விதத்தில்சூட்கேஸ்-ஸ்கூட்டரைக் கண்டுபிடித்தால் என்ன என்று சிந்தித்திருக்கிறார். அத்தகைய சிந்தனையின் செயல் வடிவம்தான் தற்போது எதார்த்தமாகி இருக்கிறது.

தொகு்ப்பு
செல்வன்உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அட...! சூப்பர்...!