28 மே, 2014

உங்கள் மொபைலில் காசு காணாமல் போகிறதா?


மதிப்பு கூட்டப்பட்ட சேவை என்ற பெயரில் உங்களுடைய மொபைலிலிருந்து காசு காணாமல் போவதை தடுத்து தொரிந்தோ அல்லது தொரியாமலோ ஆக்டிவேட் ஆகியுள்ள தேவையற்ற
காலர்டியூன்ஸ்,கிரிக்கெட்,ஜோக்ஸ்,லவ்டிப்ஸ்,ஹெல்த் டிப்ஸ்,கிசுகிசு,நெட்பேக் போன்றவற்றை நீக்கி பணம் விரயமாவதை தடுத்திட இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டோல்பிரீ நம்பரை அறிமுகம் செய்துள்ளது.
மொபைல் போன்களை உபயோகித்து வரும் கிரிக்கெட் அறியாதவருக்கு கிரிக்கெட்பேக்(ரூ.30),அவசியம் இல்லாதவருக்கு காலர்டியூன்(ரூ.30),சன்னியாசிக்கு லவ்டிப்ஸ்(ரூ.30),பாட்டிக்கு பியூட்டி டிப்ஸ்(ரூ.30),ஜோதிடருக்கு ஜோதிடம்(ரூ.30),தாத்தாவுக்கு கிளுகிளு நடிகைகள் பேக்(ரூ.30),இன்டர்நெட் அறியாதவர்களுக்கு நெட்பேக்(ரூ.30),80வயது பாட்டிக்கு ஜாப்பேக்(ரூ.30),எழுத படிக்க தொரியாத பாமரர்களுக்கு ஹெல்த் டிப்ஸ்,குட்மார்னிங் எஸ்.எம்.எஸ்,கோலிவுட் கிசுகிசு போன்றவற்றை மதிப்பு கூட்டப்பட்ட சேவை என்ற பெயரில் செல்போன் நிறுவனங்கள் கேட்காமலே வழங்கி வருகின்றன.இதனால் தாங்கள் ரிஜார்ஜ் செய்திடும் தொகை திடீர் திடீரென என்று காணாமல் போய்விடுகிறது.எதற்காக தங்கள் மொபைலில் பணம் மாயமாகி விடுகிறது என்பதை கூட அறியாதவர்கள் பலர் தங்களது நிலைமையை நொந்து கொண்டு மீண்டும் டாப்அப் செய்து வருகின்றனர்.
மதிப்பு கூட்டப்பட்ட சேவை என்ற பெயரில் பாமர மக்களின் பணத்தை குறிவைத்து இந்த அநியாய கொள்ளை நடத்தப்பட்டு வருகிறது.இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் என்று கூறிக்கொள்ளும் நிறுவனங்கள் கூட இதுபோன்ற அல்பத்தனமாக ஆட்டையப்போடும் காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதுபோன்ற சேவைகளை தடுத்திட சம்பந்தப்பட்ட மொபைல் நிறுனவனங்களின் சேவைமைய எண்களை தொடர்பு கொண்டால் 1ஐ அழுத்து,5ஐ அழுத்து என்று அலைக்கழித்துவிட்டு கியூவில் காத்திருக்கவும் என்று சொல்லி சுமார் 10நிமிடங்கள் வரை வாடிக்கையாளரை காத்திருக்கவிட்டு பின்னர் எங்கள் சேவைமைய அதிகாரி பிசியாக இருப்பதால் பின்னர் முயற்சிக்கவும் என்று எஸ்கேப் ஆகிவிடுகின்றன. இதனால் ஆக்டிவேட் ஆகியுள்ள பேக்குகளை டிஆக்டிவேட் செய்திட முடியாமல் செல்போன் வாடிக்கையாளர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
செல்போன் நிறுவனங்களின் இதுபோன்ற மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்திடும் வகையில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்)பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன்ஒருபகுதியாக தொரிந்தோ தொரியாமலே ஆக்டிவேட் ஆகியுள்ள மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளை டிஆக்டிவேட் செய்திட 155223 என்ற இலவச அழைப்பு எண்ணை டிராய் அறிமுகம் செய்துள்ளது.இந்த டோல்பிரீ எண்ணை தொடர்பு கொண்டு தேவையின்றி ஆக்டிவேட் ஆகியுள்ள பேக்குகளை டிஆக்டிவேட் செய்து பணம்விரயம் ஆவதை தடுத்திடுமாறு டிராய் அறிவித்துள்ளது.மேலும் தேவையற்ற விளம்பர கால்கள் வருவதை தடுத்திட 1909 என்ற எண்ணை அழைத்து அவற்றை தடுத்திடலாம் என்றும் டிராய் தொரிவித்துள்ளது.எனவே 155223 என்ற எண்ணை இலவசமாக அழைத்து காசு காணாமல் போவதை தடுத்து இன்முகத்துடன் செல்போனை பணன்படுத்திடுங்கள்...வாழ்த்துக்கள்.-


தகவல் தொகுப்பு
செல்வராஜ்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்Related Posts Plugin for WordPress, Blogger...