தண்ணீரை குடிக்கலாம் பாட்டிலை சாப்பிடலாம்

பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை அருந்தி விட்டு எறிந்து விட்டு செல்லும் மக்கள் அதிகம்.
அவர்களுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் பூமிக்கு இழைக்கும் துயரங்கள் குறித்து எதுவும் தெரியாது என்பதுடன் நாம் மட்டும் எறியாமல் இருப்பதால் பெரிதாக நன்மை எதுவும் ஏற்படப்போவதில்லை என்ற எண்ணத்துடன் எறிவோரே அதிகம். இனிமேல் எறிவதற்கு தண்ணீர் பாட்டில்கள் கிடைக்காது என்ற நிலைமை விரைவில் உருவாகும் நிலை உண்டாகி வருகிறது. யுனைடெட் கிங்டத்தைச் சேர்ந்த வடிவமைப்பு மாணவர் ஒருவர் பாட்டிலில் உள்ள தண்ணீரைக் குடித்து விட்டு பாட்டிலையும் தின்று விடக்கூடிய மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளார். லண்டனில் உள்ள இம்பிரீயல் கல்லூரி மாணவர்களான ரோட்ரிகோ கார்சியா கன்சாலஸ் உள்ளிட்ட மற்றும் சிலர் கடந்த சில மாதங்களாக உண்ணக்கூடிய பாட்டில் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
அதில் வெற்றியும் பெற்று விட்டனர். அவர்கள் இதற்கு ஓஹோபாட்டில் என்று பெயரிட்டுள்ளனர். மனிதன் உண்ணக்கூடிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாட்டில் ஒரு ஜெல்லி மீன் போல் காட்சியளிக்கிறது. சாறு நிரப்பப்பட்ட முத்துக்களில் இருந்தும், பிரபல ஸ்பானிஷ் சமையல் நிபுணர் பெர்ரன் அட்ரியான் படைப்புகளையும் முன்னுதாரணமாகக் கொண்டு கன்சாலஸ்இந்த பாட்டிலை உருவாக்கியுள்ளார். அட்ரியான் உண்ணுவதற்கு பயன்படும் சவ்வுகளில் திரவங்களை அடைத்து வைத்துக் கொள்வார். இந்தக் கண்டுபிடிப்பு விரைவில் குடிநீர் பாட்டில் வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பல ஐரோப்பிய நகரங்களில் இந்த பாட்டில்கள் சோதிக்கப்பட்டு வருகின்றன. ஆய்வாளர்கள் இதை முழுமை பெறச்செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர்.

தொகுப்பு
செல்வன்உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்

S SARAVANAKUMAR இவ்வாறு கூறியுள்ளார்…
இதைவிட வேறன்ன உதவி தேவை
நமக்கு இந்த காலத்தில்