மனிதர்களைச் சாப்பிடும் மாடுகள்!


டைம்ஸ் ஆப் இண்டியா” (4-4-2014) ஏட்டில் ஒரு செய்தி வந்துள் ளது. அதன் சாரம் பழசுதான்; அதற்கான ஆதாரம் புதுசு. பாபர் மசூதியைப் பாஜக உள்ளிட்ட ஆர்எஸ்எ ஸ் பரிவா ரம்தி ட்டமி ட்டுத் தகர்த் து தரைமட்ட மாக்கியது தெரிந்ததே. இதுபற்றி ஆய்வு செய்துள்ள “கோப்ரா போஸ்ட்” இணையதளத்தின் கே.அஷீஷ் அந்த உண்மைக்குப் புதிய சாட்சியங்களைத் திரட்டித் தந்துள்ளார்.
அந்தக் கொடூரத்தில் சம்பந்தப்பட்டவர் களை நேரில் கண்டு பேசி விஷ யங்களைக் கறந்துள்ள அந்த ஆய்வாளர் தரும் ஒரு திடுக் கிடும் தகவல்:“குஜராத்தில் உள்ள சர்கெஞ்ச் எனும்இடத்தில் பல பகுதிகளிலிருந்து திரட்டப் பட்டிருந்த தனது 38 தொண் டர்களுக்கு பஜ்ரங்கதள் 1992 ஜுனில் ஒரு மாதப் பயிற்சி கொடுத்தது. பயிற்சி கொடுத்தவர்கள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் என்றால், அவர்களுக்கு சித்தாந்த வெறி ஊட்டியவர்கள் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர், ஆச்சார்யா, தர்மேந்திரா, பிரவீன் தொகாடியா, கொய்பான் பவேயா மற்றும் அசோக் சிங்கால்”.

மோடியின் குஜராத்தில்தான் டிசம்பர் 6 இடிப்பு வேலைக்கு ஆறு மாதத்திற்கு முன்பே அச்சாரம் போடப்பட்டிருக்கிறது. நாட்டைப் பாதுகாத்து நின்ற ராணுவ அதிகாரி கள் சிலர் பணிஓய்வு பெற்றதும் நாட்டை மதத்தின் பெயரால் துண்டாடுகிற வேலையைச் செய்திருக்கிறார்கள். நமது நாட்டு ராணுவத்திற்குள் தனது இந்துத்துவா விஷத்தை ஆர் எஸ்எஸ் வெற்றிகரமாகச் செலுத்தியிருக்கிறது என்பதும் வெளிப்படுகிறது.பாபர் மசூதி முன்பு கூடிய ராம பக்தர்கள் ஏதோ உணர்ச்சி வசப் பட்டு இடித்து விட்டார்கள் என்று முதலில் சொல்லி வந் தார்கள் பாஜக தலைவர்கள். இப்போது அதிகதைரியம் வரப்பெற்றவர்களாக “ஆமாம், நாங்கள் தாம் இடித்தோம்“ என்று சொல்லஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு தொலைக் காட்சி விவாதத்தில் இப்படியாகப் பெருமை பொங்க அறிவித்தார் பாஜகவின் இல. கணே சன். அது உண்மைதான் என்பதை இந்த ஆய் வாளரும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.இடிப்பு வேலை ஏதோ பஜ்ரங்தள், விஸ்வஇந்து பரிஷத் தலைவர்கள் மட்டும் கூடிப்பேசிச் செய்தது அல்ல. தேர்தல் ஆணையத் தால் அங்கீகரிக்கப் பட்டுள்ள ஓர் அரசியல் கட்சியாகிய பாஜகவின் தலைவர்களும் இந்தக் கிரிமினல் வேலையில் கூட்டுக் கள வாணிகள். “எல்.கே.அத்வானி, அன்றைய உ.பி. முதல்வர் கல்யாண் சிங், அன்றைய காங்கிரஸ் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆகியோரும் இடிப்பு நடக்கப் போவதை அறிந்திருந்தார்கள்” என்கிறார் ஆய்வாளர்.

அதற்கான சாட்சியங்களாக உமாபாரதி, வினய் கத்தியார் போன்றோரின் பேட்டிகளை எடுத்துக் காட்டியிருக் கிறார்.கிரிமினல் குற்றவாளிகள் என்று தண்டனை பெற்றவர்கள் மட்டுமல்லாது, அப் படிக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் கூட தேர்தலில் நிற்கக்கூடாது என்று சமூக ஆர்வலர் கள் எனப்பட்டவர்களிலிருந்து உச்சநீதிமன்றம் வரை இன்று முழங்கப்படு கிறது. ஆனால், யாருக்குச் சொந்தம் என்று வழக்கில் உள்ள ஒரு புனித இடத்தை- 450 ஆண்டுகாலப் பழமையான வர லாற்றுச் சின்னத்தை-சட்டவிரோத மாகத் திட்டமிட்டு ஒரு கும்பல் இடித் துத் தள்ளி யிருக்கிறது. அதில் சம்பந்தப் பட்டவர்கள் மீண்டும் மீண்டும் தேர்தலில் நிற் கிறார்கள்; அந்தப் பயங்கரவாதச் செயல் நடந்து 21 ஆண்டுகளுக்கு மேலாகிப் போனாலும் எவருக்கும் இன்னும் தண்டனை தரப்பட வில்லை! நமது நாட்டின் நீதிமுறைமை மட்டு மல்ல, மனச்சாட்சியும் கூடத் தூங்கித்தான் போனது;“ஆபரேஷன் ஜென்மபூமி” எனப்பட்ட அந்த இடிப்பு வேலைக்குப் பல மாதங்களாக ரகசியமாகத் திட்டமிட்டு, ஒரு ராணுவ நடவடிக்கை போல அதை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்கள் என்கிறார் அந்த ஆய்வாளர்.

                            copra post  இணைய பக்கம் செல்ல இங்கே கிளிக்

இதைக் கண்டறிய பெரிதும் மெனக்கெட்டு பல ஊர்களுக்கும் சென்று, அந்த அக்கிரம வேலையில் ஈடுபட்ட 23 பேரைப் பேட்டி கண்டிருக்கிறார் அவர்.இப்போதும் வலுவாய் இருக்கிற ஒரு பெரிய கட்டடத்தை சட்டவிரோதமாக, மக்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டுஇடித்து நொறுக்குவது உயிர்ப்பலி களுக்கு இட்டுச் செல்லாதா, அதுபற்றி சங் பரிவாரத்தினர் யோசித்திருக்க மாட்டார்களா என்று கேட்கத் தோன்றும். இதற்கான பதில் சக்ஷி மகராஜ் என்பவரது பேட்டியில் உள் ளது. அது: “என்னை வைத்துக் கொண்டே வாமதேவ் மகாராஜிடம் சிங்கால் சொன்னார் - `சில பேர் சாகாவிட்டால் இயக்கம் வலு வடையாது’. மகாராஜ் வாமதேவ் சொன்னார் - `குழந்தைகள் செத்துப்போனால் அது பேரழிவாக இருக்கும்? சிங்கால் மீண்டும் சொன்னார்: `அவர்கள் சாகாமல் இயக்கம் தீவிரமடையாது’.அப்பாவிகளின் உயிர் போகாமல், அதிலும் குழந்தைகள் சாகாமல் தங்களது “ராமஜென்மபூமி இயக்கம்“ வேகமடையாது என நினைத்த கொடூரன்கள் சங் பரி வாரத்தலைவர்கள்.

அதனால்தான் அத்தனை ஆயிரம் பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு ஏற்கெனவே பயிற்சி பெற்ற சிலரைக் கொண்டும், பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தியும் அந்தக் கம்பீரமான பள்ளி வாசலைத் தகர்த்தெறிந்தார்கள்.இத்தகைய கொடூரச் சித்தம் கொண் டவர்கள் மெய்யான ராம பக்தர் களாகவும் இருக்கமாட்டார்கள். தனக்கு கிடைத்த ராஜியத்தைத் தம்பிக்காகத் தாராளமாக விட்டுக் கொடுத்தவன் அந்த ஸ்ரீராமன். அவனா அடுத்த மதத் தவரது மசூதியை இடித் துத் தனக்கு கோயில் கட்டச் சொல்லுவான்? நமது கம்பன் அவனை அப்படிச் சித்தரிக்க வில்லையே! ராஜபதவி இல்லை என்றபோதும் அவனது திருமுகம் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை போலத் தான் இருந்தது என்று ஒரு தியாக சீலனாக வல்லவா வருணித் திருக்கிறான்!இவர்களுக்கு ராமபக்தி கிடையாது என்பது மட்டுமல்ல சாதாரண மனிதநேய புத்தி கூட கிடையாது. மனிதவதை யையும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறவர்கள், கம்பன் பாடியது போல “இரக்கம் எனும் ஒரு பொருள் அறியா அரக்கர்கள்”.இத்தகைய திருக்கூட்டத்தின் தற்போ தைய தலைவராகிய மோடிக்கும் மனித வதை பற்றிக் கவலை இல்லை என்பதை அறிவோம். 2002ல் குஜராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற் பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டதை வேடிக்கை பார்த்த முதல்வர் அவர்.

இன்றளவும் அதுபற்றி தனக்கு “குற்ற உணர்ச்சி ஏதுமில்லை” என்று சொல்லி வருகிறவர். ஒப்புக்குக் கூட அதற்காக மக் களிடம் மன்னிப்புக் கேட் காதவர். அதே நேரத்தில் தன்னை “ஆர்எஸ்எஸ்சின் ஊழியர்” எனச்சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறார்.இதிலே கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் இந்த மோடிக்கு வாக்குக் கேட்டுத் தெருத்தெருவாக வருகிறார்கள் விஜயகாந்தும், வைகோவும், அன்புமணி ராமதாசும். உச்சபட்சக் கொடுமை மோடியை “வடநாட்டுத் தந்தைப் பெரியார்” என்று விஜயகாந்த் வருணித்தது. மனிதர் சினிமாவில்தான் ஹீரோவே தவிர அரசியல் பேச்சில் காமெடி யனாகிப் போனார். சங் பரிவா ரத்தின் நேரடி எதிரியாக விளங்கியவர், இந்து மதவெறியை எதிர்த்துச் சளைக்காமல் போராடிய பெரி யாரை மோடிவசம் ஒப்படைக்கிறார் என்றால் அது காமெடித்தனமின்றி வேறு என்ன?பெரியார் மட்டுமல்ல அண்ணாவும் இந்து மதவெறியை எதிர்த்துக் களம் கண்டவர், மத நல்லிணக்கத்திற்காகக் குரல் கொடுத்தவர், சிறுபான்மையோர் உரிமைகளை எதிரொலித் தவர். அவரது பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் வைகோ மோடி பின்னால் செல்வது அண்ணாவின் கொள்கைகளுக்குச் செய்யும்பச்சைத் துரோகம், வடிகட்டிய சந்தர்ப்பவாதம்.ராமதாசும் அவரது புதல்வர் அன்பு மணியும் பெரியார், அண்ணா பெயர்களைச் சொல்வதை சிறிது காலத்திற்கு முன்பே விட்டுவிட்டார்கள். ஆனால், இப்போதும் தாங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக நிற்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.

அந்த மக்களுக்கு மண்டல்குழு பரிந் துரையின்படி மத்திய அரசில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து தில்லியில் கலவரத்தில் இறங்கி யவர்கள் தாம் சங் பரிவாரத்தினர். வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்க்க அயோத்தி ராமர் கோயில் பிரச் சனையைக் கையில் எடுத்துரதயாத்திரை கிளம்பியவர்தான் அத்வானி. அந்தக் கூட்டத்தோடு கூட்டுச் சேர்ந்ததன் மூலம் இவர்களும் தம் சொந்த மக்களுக்குத் துரோகம் இழைக்கிறார்கள்.“வளர்ச்சிப் பாதைக்கு” பாஜக தலைமை திரும்பிவிட்டதாக யாராவது நினைத்தால் அது தப்புக் கணக்கு.அதெல்லாம் வேஷம். அவர்களுக்கு வளர்ச்சிக்கான மாற்றுக்கொள்கையெல்லாம் கிடையாது.

பெரு முதலாளிகளது ஆசையையெல்லாம் நிறை வேற்றி வைப்பதுதான் அவர்களது ஒரே பொருளாதாரக் கொள்கை. அவர்களது உள்ளார்ந்த, அடிப்படையான கோட்பாடு இந்துமதவெறிதான். அதைக் கிளப்பிவிட்டு பாமர இந்து மக்களை நாட்டின் மெய்யான சமூக - பொருளாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் திசை திருப்புவது தான். இதை அவர்களோடு கூட்டுச் சேர்ந்திருக்கிற தலைவர்கள் உணர்ந்திருக் கிறார்களோ இல்லையோ தமிழர்கள் உணர்ந் திருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாளும் ஏமாறமாட்டார்கள்.

-அருணன்உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்

Nasar இவ்வாறு கூறியுள்ளார்…
Well said, now our turn so vote for congress
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

வலைச்சர தள இணைப்பு : எனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் !!
indrayavanam.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி தனபாலன்... உங்களை போன்றவர்களின் ஆதரவால் கிடைக்கும் ஆங்கிராரம் .