27 மார்., 2014

ஒத்தைக்கு ஒத்த கூப்பிடும் கேப்டன் விஜயகாந்த்...

தனது தொண்டரை ஒத்தைக்கு... ஒத்த வர்ரீயாடா ... என கூப்பிட்டிருக்கிறார் விஜயகாந்த். கோடை வெயிலில் அனல்காற்று அடிக்கிறது.இதில் அரசியல் தலைவர்களின் அனல்பரக்கும் பிரச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதென்ன அனல்பரக்கும் பிரச்சாரம்...ஜெயலலிதா, கருணாநிதியை திட்டுவது... கருணாநிதி ஜெயலலிதாவை திட்டுவது. காங்கிரஸ், பாஜகாவை திட்டுவது, விஜயகாந்த் ஜெயலலிதா,கருணாநிதி..தனது தொண்டர்கள் என வகை தொகை தெரியாமல் திட்டுவது தான் அனல்பறக்கும்.... ஓகே ..ஒத்தைக்கு ஒத்தைக்கு வரவோம்..
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் தொண்டர்களை அவமதிப்பதும், சண்டைக்குஅழைப்பதும், வேட்பாளர் பெயர் தெரியாமல் முழிப்பதும், கூட்டணி கட்சிகளை புறக்கணிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரத்தில் பா.ஜ.க. வேட்பாளர் குப்புராமுவை ஆதரித்து விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் அரண்மனை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் .பிரச்சார இடத்திற்கு வந்தது முதல் அவருக்கு முன்னால் கொடி பிடித்து உற்சாகத்துடன் இருந்த தொண்டர்களை அவமதிக்கும் வகையில் கொடியை இறக்கிவிட்டு ஓரமாக போ, சொல்வதை கேட்கமாட்டாயா, உன்னை பார்த்தால் என் கட்சிக்காரன் மாதிரி தொரியலையே,  நீ வேறு கட்சிக்காரனா என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

இதனால் மணிக்கணக்கில் கால்கடுக்க கொடிக்கம்புடன் நின்ற தொண்டர்கள் தங்களை அவமதித்தை பொறுக்க முடியாமல் அந்த இடத்தைவிட்டு கூட்டம் கூட்டமாக  காலி செய்தனர். இதன்பின்னர் விஜயகாந்த் பேச தொடங்கியபோது உற்சாக மிகுதியால் தொண்டர் ஒருவர் கத்தியதை கண்ட விஜயகாந்த் அவரை ஒருமையில் திட்டியதோடு மைக்கை கீழே வைத்து விட்டு வாடா வாடா.! வா வந்து மோதிப்பாரு. ஒத்தைக்கு ஒத்த மோதிப்பார்ப்போமா வாடா வா என்று கத்தி கூச்சலிட்டு சண்டைக்கு அழைத்தார் விஜயகாந்தின் இந்த செயலை கண்டு கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் முகம்சுளித்தனர். இதைத்தொடர்ந்து இன்னும் ஒருபடி மேலேபோய் விஜயகாந்த் ராமநாதபுரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் குப்புராமுவை அறிமுகப்படுத்தியபோது அவரின் சட்டையை பிடித்து தூக்கியது பா.ஜ.க. தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுமார் 45 நிமிடங்கள் வரை பேசிய விஜயகாந்த்தின் பேச்சு யாருக்குமே புரியாததால் கலைந்து செல்லும் போது ஒருவருக்கொருவர் அவர் என்ன பேசினார் உனக்கு புரிந்தத உனக்கு புரிந்தத என்று கேட்டபடியே சென்றனர்.வியகாந்த் உங்கள்
 ஊருக்கு வந்து சென்றுவிட்டாரா... இல்லையென்றால் ஒத்தைக்கு ஒத்தைக்கு ரெடியாக இருங்கள்...
ஆயிரம் தான் இருந்தாலும் விஜயகாந்தை விட்டுக்கொடுக்க முடியாது... எங்க ஊர்காரர் ஆச்சே...

தகவல் ராம்நாட் ரமேஷ்
தொகுப்பு செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...