மலேசிய விமானம் மாயமானது எப்படி? புதிய தகவல்


5 நாட்கள் முடிந்து போனது... வானில் பறந்து கொண்டிருந்த விமானம் என்ன ஆனாது என்ற கேள்விக்கு விடையில்லை.... ஆயிரம் கடல்மைல் பரப்பில் 10 நாடுகளைச் சேர்ந்த 36 போர் விமானங்கள், 40 போர்க்கப்பல் கள், நூற்றுக்கணக்கான படகுகள் விமானத்தை தேடி வருகின்றன.

விபத்து நடந்திருந்தால் அதற்கான தடமும் இல்லை. விமானம் பற்றிய சின்ன தகவலும் இல்லை... உண்மையில் என்னதான் நடந்திருக்கும் உலகமே அதிர்ச்சியோடும்,கவலையோடும் காத்திருக்கிறது.
விமாத்தில் பயணித்த சென்னையை சேர்ந்த சந்திரிகாஷர்மா(50) கணவர் நரேந்திரன்.... "கடந்த 5 நாட்களாக நாங்கள் குழப்பத்திலேயே இருக்கிறோம். மன நிம்மதி, தூக்கம் இல்லாமல் தவிக்கிறோம். ஏதாவது அதிசயம் நிகழாதா என்ற ஏக்கத்தில் இருக்கிறோம். காணாமல் போன விமானத்தை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்" என மனமுடைந்து பேசியுள்ளார். தன் மனைவி என்ன ஆனார் என தெரியாமல் இருப்பது சோகத்திலும் சோகம்...
விமானம் காணாமல் போன கடல்பகுதிக்கு அருகே டிராகன் முக்கோணம் என்ற பகுதியுள்ளது அந்த இடத்தை கடக்க முயலும் கப்பல்கள், விமானம் காற்றில் கரைந்து போவதாக மர்ம தகவல்கள் உண்டு. இது குறித்து 2012ல் ''கப்பல்,விமானங்களை வ¤ழுங்கும் லீலங்டிராகன் என்ற தலைப்பில்'' இன்றையவானம் பதிவில் வெளியிட்டுள்ளோம் மீண்டும் உங்கள் பார்வைக்கு...

 கீழே கிளிக் செய்துபடிக்கவும்........

                   கப்பல்,விமானங்களை விழுங்கும் 


விமானம் என்ன ஆனாது.அதிலுள்ள பயணிகளுக்கு என்ன ஆனார்கள் என்பதை தெரிந்துகொள்ள அவர்களது உறவினர்கள் மட்டுமல்ல உலகமே காத்திருக்கிறது.

-செல்வன் 


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

அசம்பாவிதம் எதுவும் நடந்திருக்கக் கூடாது...
நீங்கள் குறிப்பிட்ட உங்களுடைய பழைய பதிவினையும் படித்தேன். இரண்டு கட்டுரைகளுமே அமானுஷ்ய விஷயம் சார்ந்தவை. நல்ல விளக்கம். கப்பல், விமானங்களை மாயமாக்கும் பெர்முடா முக்கோணம் மற்றும் லீலங் டிராகன் முக்கோணம் போன்ற கடல் சார்ந்த நம்பிக்கைகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நவீன தொழில் நுட்பங்கள். அந்த மலேசிய விமான விபத்து பெரிய புதிர்தான்.
Anonymous said…
நீங்க நல்லா கப்ஸா விடுரீங்க...!
  • எனது இலவச மின் நூல் ...
    19.04.2020 - 1 Comments
    எனது இலவச மின் நூல் ... ---------------------------------------------------- கடந்த சில…
  • சிங்கப்பூரில் வீஸ்வரூபம் டிரைலர் வெளியீட்டு காட்சிகள்
    09.06.2012 - 1 Comments
    சிங்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விஸ்வரூபம் டிரைலர்…
  • ரஜினி .... வாழும் பென்னிகுக்கா?
    14.12.2014 - 2 Comments
    வாழும் பென்னி குக்கே,இராண்டாம் பென்னி குக்கே, தலைவா,வசூல் மன் னனே,சக்கரவர்த்தியே, உன் விழியசைவில் தமிழகம்…
  •    எனது இலவச மின் நூல்கள்
    01.02.2021 - 0 Comments
      free tamil e books என்ற இணைதளத்தில் வெளிவந்துள்ள எனது இலவச மின் நூல்களுக்கான இணைப்பு…
  • காந்தி படுகொலை ... ஆவணங்களை எரிக்க பா.ஜ.க. முயற்சி
    14.07.2014 - 2 Comments
    ஜூன் 23 அன்று பிடிஐ செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதன்படி, “பிரதமர் நரேந்திர மோடியின்…