9-வது இடத்தில் இளையராஜா

உலகின் சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டி யலில் 9-வது இடத்தை இளையராஜா பிடித்து ள்ளார்.உலகளவில் பிரசித்திப் பெற்ற சினிமா இணையத்தளமான 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம் உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட் டுள்ளது.
இப்பட்டியலில் இந்தியாவில் இருந்து இளையராஜாவின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 25 பேர்களில் இளையராஜா 9வது இடத்தினை பிடித்திருக்கிறார்.
இதில் இத்தாலியன் கம்போஸர் மொர்ரிகோன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க இசையமைப்பாளர் மேக்ஸ் ஸ்டைனர் 2-வது இடத்தையும், அமெரிக்க கம்போஸர் ஜான் வில்லியம்ஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

                                  டேஸ்ட் ஆப்  சினிமா பக்கம் படிக்க..


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் 4500-க்கும் மேற்பட்ட பாடல்கள் கொடுத்து, 950-க்கும் மேற்பட்ட படங்களில் இசைப்பணியாற்றியுள்ள இசைஞானி இளையராஜா இந்தப் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சிறந்த இசைக்கோர்ப்பு, இன்ஸ்ட்ருமென்டலிஸ்ட், இசை ஒருங்கிணைப்பு, பாடகர், பாடல் ஆசிரியர் ஆகிய பிரிவில் இளையராஜா சிறப்பான பணியை வழங்கியிருப்பதாக ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ இணைய தளம் பாராட்டியுள்ளது.-

தகவல் தி இந்து தமிழ்

தொகுப்பு செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
இளையராஜா சிறந்த இசையமைப்பாளர்; அற்புதமான இசைக்கோவைகளைத் தந்திருக்கிரார்; தருவார். ஆனால் 9 ஆம் இடம் என்பது பொய். யாரும் உலக இசை அமைப்பாளர்களின் தரவரிசை வெளியிடவோ, வரிசைப்படுத்தவோ இல்லை. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். இளையராஜாவைக் கேவலப்படுத்த வேண்டாம்.
  • செவ்வாயில் ஓடிய நதி வீடியோ +மங்கல்யாண்
    23.09.2014 - 0 Comments
    நொடிக்கு 22.1 கிமீ வேகத்தில்  செவ்வாயை நோக்கி பயணத்து கொண்டிருந்த மங்கள்யானை தற்போது வேகத்தை…
  •  பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதிபயங்கர ஏரி
    20.01.2021 - 0 Comments
    பல்வேறு மர்மங்களைக் கொண்ட இந்த பூமியில்   நீர் அருந்தும் பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் …
  • முதல் முறையாக விளம்பரங்களில் நடிக்கும் கமல்
    12.04.2012 - 0 Comments
    நடிகர், நடிகைகள் பலர் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளில் விளம்பர படங்களில் நடித்து பெரும் வருவாய் பார்த்து…
  • வழக்கு எண் 18/9.-ஆன்மாவை தொடும் படம் -நடிகர் பார்த்திபன் + டிரைலர்
    03.05.2012 - 3 Comments
    வழக்குஎண் 18/9.-  நாளை (வெள்ளிக்கிழமை 4.5.2012) வெளியாக உள்ளது. பாலாஜி சக்திவேலின் காதல் படம்…
  • தமிழ்த் திரையுலகில் முற்றும் மோதல்
    23.03.2012 - 0 Comments
    தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சி அமைப்பிற்கும் தயாரிப்பாளர்களுக்குமிடையே ஊ திய உயர்வு குறித்த…