அதிகம் ‘டிமிக்கி’ அடித்த எம்.பி.க்கள் ராகுல், அழகிரி

மிளகுப் பொடியை ஸ்பிரே செய்வது. மைக்கை  உடைப்பது. அறிக்கைகளை கிழித்தெரிவதுமாக  மிகச்சிறப்பான முறையில் கடந்த வாரத்தில் 15 மக்களவை முடிந்திருக்கிறது. பொரும்பாலும் கூச்சல், ஒத்திவைப்பு, மட்டுமே மக்களவையில் நடந்தது என்பதே உண்மை. நம் பிரச்சனை தீர்க்க, நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய, விவாதிக்க,....... ஓட்டு போட்டு தேர்வு செய்து நாம் அனுப்பிய எம்.பி.க்கள் அதை தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்தார்கள். மேலும்  அவர்களில் பலர் மக்களவைக்கே செல்லவில்லை என்பது வேதனையிலும் வேதனை..

நிறைவுபெற்றுள்ள 15 வது மக்களவையில் எம்.பி.,க்களின் வருகை விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிக மோசமான வருகைப்பதிவு வைத்திருக்கும் 30 எம்.பி.,க்களில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது.

மொத்தம் 545 உறுப்பினர் களில் 30 எம்.பி.,க்கள், அவைக்கு சரியாக வராமலும், வந்தாலும் வாய் திறக்காமலும் இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.ஆய்வு அறிக்கையில் கூறப்பட்ட விபரங்களின்படி, பிப்ரவரி 17 வரைராகுல் காந்தி வெறும் 42 சதவீதம்வருகைப்பதிவு மட்டுமே வைத்துள் ளார். இது சராசரி அளவான 76 சதவீதத்திற்கும் குறைவாகவே உள் ளது. அதேசமயம், ராகுலின் சொந்ததொகுதி இருக்கும் உத்தரப்பிர தேசத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அதிக பட்சமாக 80 சதவீதம் அவைக்கு வந் துள்ளனர்.

மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற கடைசி கூட்டத் தொடரில் தினமும் பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில் 2 விவாதங்களின் போது மட்டுமே ராகுல் கலந்து கொண்டார். அவைக்கு வந்த சமயத்திலும் கேள்வி ஏதும் கேட்கவும் இல்லை, தனிநபர் மசோதா எதையும் தாக்கல் செய்யவும் இல்லை. அவையில் கொண்டு வரப்பட்ட, விவாதிக்கப்பட்ட விவகாரங்களில், லோக்பால் மசோதாவில் மட்டுமே ராகுலின் தலையீடு இருந்துள்ளது.

ராகுலின் மோசமான செயல்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவரது அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.மக்களவை ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, 15வது மக்களவையில் சராசரியாக எம்.பி.,க்கள் 297 கேள்விகள் கேட்டுள்ளனர். 0.8 தனிநபர் மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, மு.க.அழகிரி, நெப்போலியன், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த டிம்பிள் யாதவ், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மோகன் ஜாதுயா, சிசிர் அதிகாரி மற்றும் கபிர் சுமவ், ஜார்கண்ட் முக்தி மோட்சாவைச் சேர்ந்த சிபு சோரன், பா.ஜ.,கவின் பலிராம் காஸ்யப், சதானந்த கவுடா, வித்தல்பாய் ஹன்ஸ்ராஜ்பாய் உள்ளிட்ட மேலும் பல எம்.பி.,க்கள் ராகுலை விடவும் மோசமான வருகைப் பதிவை தந்துள்ளனர்.

இவர்களில் 45 வயதிற்கு கீழ் இருக்கும் எம்.பி.,க்களின் பட்டியலில் ராகுல் 6வது இடத்தில் உள்ளார். மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் பிரச்சாரக் குழுவின் தலைவராக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள ராகுல், இத்தேர்தலில் கட்சியை வழிநடத்த உள்ளார் என காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அவர் பற்றி வெளியாகி உள்ள ஆய்வு அறிக்கை, அவர் பொறுப்புக்களில் ஆர்வமின்றி இருப்பதை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.1962ம் ஆண்டிற்கு பின் தற்போதைய மக்களவையின் செயல்பாடு தான் மிகவும் மோசமானதாக இருந்துள்ள தாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.---

--தொகுப்பு  செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்