மோடியின் அமெரிக்க கனவுக்குவுக்கு அதிரடி ஆப்பு

நரேந்திர மோடிக்கு விசா வழங்கும் தங்களது பழைய கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஏற்பட்ட மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதேநேரம், இந்த கலவரத்தை தடுக்க தவறியதுடன் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுப்பட்டன.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மேற்கத்திய நாடுகள் தங்களது நாடுகளுக்கு நரேந்திர மோடி வருவதற்கு அனுமதியளிக்க மறுத்தது. குறிப்பாக, அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்து கடந்த 2005ம் ஆண்டு மோடி விண்ணப்பித்திருந்த விசா அனுமதியின் மீது பரிசீலனை செய்த அமெரிக்கா “மதச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுத்தது” என்ற விதிமுறை மீறலின் அடிப்படையில் மோடியின் விண்ணப்பத்தை நிராகரித்தது.
இந்நிலையில், தங்களது கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை பாஜக அறிவித்தையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை அவர் சந்தித்து தனக்கான ஆதரவை திரட்டி வருகிறார். இச்சூழலில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதரான நான்சி பாவேல் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் சந்தித்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வியாழனன்று அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நரேந்திர மோடி குறித்தான அமெரிக்க அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அந்நாடு விசா நடைமுறையை தளர்த்த உள்ளதாகவும் மோடியின் ஆதரவாளர் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நரேந்திர மோடிக்கு விசா வழங்குவது குறித்த தங்களது பழைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமெரிக்க அரசு தரப்பில் அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சகி தெரிவிக்கையில், தனிநபர் ஒருவர் எங்களது நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள விசா கோரி விண்ணப்பிக்கும்போது, அமெரிக்க சட்டம் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். இதில் எந்த ஒரு சலுகையும் காட்டப்படாது. எனவே, இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நான்சி பாவேல் மற்றும் நரேந்திர மோடி ஆகிய இருவருக்கும் இடையே வியாழன்று நடைபெறும் சந்திப்பு ஒரு சாதாரண நிகழ்ச்சி மட்டுமே. இது ஒன்றும் விஷேசமான ஏற்பாடு அல்ல. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களை அமெரிக்க பிரதிநிதிகள் சந்தித்து இருநாடுகளுக்கிடையேயான நல்லுறவு மற்றும் வர்த்தகம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்.
அதன் ஒரு பகுதிதான் மோடியுடனான சந்திப்பு. இதில் மோடிக்கு விசா வழங்குவது போன்ற அரசு அலுவல் சார்ந்த எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது. இவ்வாறு அமெரிக்க அரசின் வெளியுறுத்துறையின் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்வது என்ற மோடியின் மற்றுமொரு நீண்டநாள் கனவு மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

அதிர்ச்சியான அறிவிப்பு தான்... மாறலாம்...!
bandhu said…
அமெரிக்கா வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவா? அப்படி ஒன்றும் பெரிய நாடு இல்லை அமெரிக்கா. அதே போல, எப்படி தேவயானி விஷயத்தில் பல்டி அடித்ததோ, அதே போல மோடி விஷயத்திலும் பல்டி அடிக்க அமெரிக்காவிற்கு அதிக நாள் ஆகாது!
Unknown said…
பாதிப்பேர் மோடி அமெரிக்காவின் அடியாள் என்கிறார்கள். நீங்கள் அமெரிக்கா விசா தர மறுக்கிறது என்கிறீர்கள். அப்படியென்றால் அங்கு செல்ல விசா வாங்குபவர்கள் எல்லோரும் அமெரிக்காவின் அடியாட்கள் இல்லையா.

கோபாலன்
Kartheesan said…
அமெரிக்கர்களுக்கு, அடுத்தவர் செய்த கொலைகளை பற்றி பேசுவதெற்கு அருகதை இருக்கிறதா என்று முதலில் கவனிக்கவும். அவர்களின் வரலாறே செவ்விந்தியர்களை கொன்று குவித்து அதன் மேல் நாட்டை எழுப்பியவர்கள். இன்று வரை அதனை தொடர்ந்து வருகிறார்கள். அவர்கள் அடுத்தவர்களை பற்றி பேசுகிறார்கள். வாழ்க வரலாறு.
  • முதல் ''குடிமகனும்'' கடைசி ''குடிமகனும்''
    13.09.2012 - 4 Comments
    டாஸ்மாக் பார்ல கடைதிறக்க சரக்கு வாங்குற முதல்குடிமகன்,இரவு 10 மணிக்கு பார் அடைக்கும் போது கடைசியா சரக்கு…
  • யாரோ ஒருவன்...
    26.01.2020 - 0 Comments
    ஒட்டிப்போன தன் வயிறு மடியும் அளவுக்கு குனிந்து ,நிமிர்ந்து மிக உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்தான்... அவன்…
  • பா.ம.க. ராமதாஸ்க்கு பிடிக்காத புத்தகம்...
    06.05.2013 - 3 Comments
    2016ல் தமிழகத்தின் முதல்வர் ராமதாஸ்தான். இந்த கனவு ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கு இருக்கிறது.…
  • விஜய், தனுஸ், ஹன்சிகா,கஜால்அகர்வால் 20 வருடங்களுக்கு பின்....
    04.03.2014 - 0 Comments
    இது ஜோதிடம் அல்ல...  எதிகாலம் எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில்  எல்லோருக்குமே ஆர்வம்…
  • தண்ணீரை குடிக்கலாம் பாட்டிலை சாப்பிடலாம்
    01.05.2014 - 1 Comments
    பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை அருந்தி விட்டு எறிந்து விட்டு செல்லும் மக்கள் அதிகம். அவர்களுக்கு…