5 பிப்., 2014

சாமிகளுக்கு சாவு உண்டா?...

.
உண்டு. கடவுள் நம்பிக்கையாளர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம்.கடவுள்கள் பிறக்கிற போது இறந்து போவதும் யாதார்தம் தானே. இந்த பூமியில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிருக்கும்,ஒவ்வொரு பொருளுக்கும் மரணமும், அழிவும் நிச்சயம். நாம் வாழும் பூமி தோன்றி 460 லிருந்து 500 கோடி ஆண்டுகளாகின்ற இன்னும் 500 கோடி ஆண்டுகளில் பூமிக்கும்,ஏன் சூரியனுக்கும் கூட அழிவு உண்டு.அதனால் கடவுளுக்கும் அழிவு உண்டு. இல்லை ... இல்லை இந்த பிரபஞ்சம்,பூமி,நம்மை எல்லாம் படைத்தவர் சாமி தானே அவருக்கு சாவு கிடையாது, இது நாத்திகம் பேசுபவர்களின் சதி என்று நீங்கள் நினைக்கலாம். நான் இந்த கட்டுரை மூலமாக பகிர்ந்து கொள்ள போவது முரட்டு நாத்கிகமல்ல. அறிவியல் பூர்வமான, சில தகவல்களை.

வசதியான சாமி.. வசதியில்லாத சாமி 

 சாமிகளில் இரண்டு வகை உண்டு. வசதியான சாமி, வசதியில்லாத சாமி. சிவன்,விஷ்ணு,பிரம்மா, இந்திரன், விநாயகர் என பூனூல், சைவசாப்பாடு,நாம் நேரடியாக சாமி கும்பிட முடியாதபடி இடையில் வேதம் கற்ற புரோகிதர், முறைப்படி கட்டப்பட்ட கோயில்கள், தங்க ஆபரணங்கள், நிறைய சொத்துக்கள்,தினந்தோறும் பூஜைகள், பக்தர்களுக்கு தரிசனம் இப்படி இன்னும் சில ஸ்பெஷல் இந்த மேல்சாதி சாமிகளுக்கு உண்டு. மேற்கண்ட வசதியான சாமிகள் ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது உருவாக்கப்பட்ட கற்பனை கடவுள்கள். நான்கு கை, பத்துதலை, தானாக கையில் சுற்றுகிற சக்கரம், விஸ்வரூபம் எடுக்கும் தன்மை என நிஜத்தில் நடக்காத சங்கதிகளோடு  உருவாக்ப்பட்டவை.


 சுடலைமாடன்,முனியாண்டி,மூத்தாலமன், வீரசின்னம்மா, கருப்பன், மதுரைவீரன் இந்த சாமிகள் வசதியில்லாத சாமிகள்.இந்த சாமிகளுக்கு சில இடங்களில் கோயில் இருந்தாலும்,பெரும்பாலும் இவை ஆலமரம், தெருவேரம்,சாலையோரங்கள், நடுகாட்டுக்குள் இருக்கும்.இந்தசாமிகள் மிரட்டும் பார்வையோடு  கையில் அருவாள் வைத்திக்கும். சிவன்ராத்திரி அன்று மட்டுமே இந்த சாமிகளுக்கு கவனிப்பு கிடைக்கும். கிடாவெட்டி, பொங்கல் வைத்து,சில சாமிகளுக்கு சரக்கு (விஸ்கி,பிராந்தி) வைத்து பெரிய கவனிப்பு கிடைக்கும். மற்ற நாட்களில் இந்த சாமிகளை கண்டு கொள்ளமாட்டார்கள். சுடலைமாடனும், வீரசின்னம்மா,மதுரைவீரனும் தங்கள் சமூகத்திற்காக உயிர் நீத்தவர்கள்.தங்கள் சமூகத்திற்காக பாடுபட்டவர்கள், உயிர்நீத்தவர்களை,நல்ல மனிதர்களை ஒரு சமூகம்,ஒரு இனம் தங்கள் தலைவர்களாக,கடவுளாக ஏற்றக்கொள்கிறார்கள். இதற்கு நமக்கு தெரிந்த உதரணமாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,முத்துராமலிங்க தேவர், இமானுவேல்சேகரன், அவ்வவு ஏன் மாவீரன் பிரபாகரன் இன்று தமிழர்களின் சாமியாக,கடவுளாக மாறிக்கொண்டிருக்கிறார். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்....

ஐஸ் காளியம்மன்.... 
                         புதிய கடவுள்களின்  உருவாக்கத்திற்கு ஜஸ்காளியம்மன்  உருவான கதையை மிக சுருக்கமாக சொல்கிறேன்.
மதுரையிலிருந்து அழகர்கோயில் செல்லும் பாதையில் தாதுகிணறு என்ற சிறிய கிராமம் உள்ளது. ஒரு நாள் சைக்கிளில் மரப்பபெட்டி வைத்து அதில் ஐஸ் விற்கும் வியாபாரி ஒருவர் வந்துள்ளார். அவரிடம் ஒரு சிறுமி ஐஸ் கேட்க, அந்த வியாபாரி காசு தா ஐஸ் தர்ரேன் என்கிறார். காசு குடு..ஐஸ் குடு... இப்படி கொஞ்ச நேரம் இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்கிறார்கள். கடைசியில் ஐஸ்காரர் சிறுமிக்கு ஐஸ் கொடுக்கிறார், அந்த சிறுமி காசை கொடுக்காமல் ஓடுகிறார். அந்த சிறுமியை துரத்தி செல்லும் ஐஸ்காரார் கோபமாக பாப்பா காசு எடு என கேட்க. அந்த சிறுமி மகனே நான் தான் மடப்புரம் காளி (மதுரை ,சிவகங்கை மாவட்டங்களில் புகழ்பெற்ற பெண் தெய்வம்) அங்கிருந்து இங்கு வந்துவிட்டேன். இன்றிலிருந்து உனக்கு நல்ல நேரம் தான் என காசு கொடுக்கமலேயே ஆசி வழங்கி அனுப்பிவிடுகிறது. ஏமாற்றத்தோடு திரும்பி வந்த ஐஸ்காரர் தனது ஐஸ்பெட்டியிலிருந்த ஐஸ் முழுவதும் விற்று அதற்கான பணம் ஐஸ்பெட்டி யில் இருப்பதை பார்க்கிறார். இது மடப்புரம் காளியின் திருவிளையாடல் தான் என நம்பிய ஐஸ் வியாபாரி அந்த இடத்திலேயே ஒரு கல்லை நட்டு ஐஸ்காளியம்மனாக வணக்க தொடங்க. ஐஸ்காரர் ஐஸ்விற்றே வசதியாக இருக்கிறார். அந்த பகுதியில் தற்போது ஐஸ்காளியம்மன் பேமஸ்,
       
                   இன்னொரு சோகக்கதை. 1969ம் வருடம் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தனம் என்ற 11 வயது சிறுமி சாலை விபத்தில் துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து போகிறாள்.பார்த்தவர்கள் கதறி அழுதார்கள், கண்ணீர் விட்டார்கள். ஒவ்வொரு நாளும் அந்த இடத்தை கடக்கும் போதும் கொடூரமாக இறந்து போன அந்த சிறுமியின் ஞாபகம் மனதை கலக்கியது. அந்த சிறுமியின் ஞாபகமாக சாலையோரத்தில் ஒரு கல்லை நட்டார்கள், தற்போது அதுதான் இன்றைக்கும் தனகாளியம்மனாக அந்த பகுதி மக்களால் வணங்கப்படுகிறது. இப்படி இன்னும் நிறைய புதிய சாமிகளின் கதைகள் இருக்கின்றன. இந்து மதத்தில் மட்டுமல்ல இஸ்லாம்,கிருஸ்தவமத்திலும் இது போன்ற சாமிகள் உண்டு.

சாமிகளின் சாவு என்பது...


பக்தர்கள் வேண்டி, விரும்பி கும்பிடும் வரைதான் சாமிகளுக்கு மவுஸ், அந்த சாமிக்கு பவர் இல்லை,கும்பிட்டுபயனில்லை என நினைக்க தொடங்கினால் அந்த சாமிக்கு சாவு நெருங்கிவிடும். ஆரிய கடவுள்களில், அதாவது வசதியான கடவுள்களில் சிவன்,விஷ்ணு,பிரம்மா இந்த மூவரில் பிரம்மாவை கண்டுகொள்ள ஆளில்லை. கோயில் கூட இருப்பதாக தெரியரில்லை. பெண்கடவுள்களில் சரஸ்வதி, சரஸ்வதி பூஜை அன்று மட்டுமே கும்பிடுவார்கள் அவ்வளவுதான். ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த போது இந்திரன் பெரிய கடவுள் இப்போது அவருக்கு பவர் இல்லை . ஆரிய கடவுளான விநாயகருக்கு தற்போது மரியாதை அதிகம். 15 ஆண்டுகளுக்கு முன் விநாயகர் சிலை பால் குடிப்பதாக செய்தி பரவ தொடங்கியதும் தமிழகத்திலும், முருகனை விட ஒரு படி விநாயகருக்கு மரியாதை அதிகம் கொடுக்கிறார்கள்.

          சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களை படித்தால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் வணங்கி வந்த கடவுள்கள் பற்றியும், அந்த கடவுள்கள் தற்போது வணங்கப்படுவதில்லை என்பதையும் தெரிந்து கொள்ளாம். கொற்றவை என்ற பெண் கடவுள் ஆதி தமிழர்களின் கடவுள், மீனாட்சி இல்லாத மதுரையை நினைத்து பார்க்க முடியமா? சிலப்பதிகார காலத்தில்  மீனாட்சியம்மன் இல்லை, மதுராபதி என்ற கடவுள் தான் மதுரையின் முக்கிய கடவுள்.விநாயகர் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் இல்லை. வேதமதம் என்ற மதம்  இருந்துள்ளது ( இந்து மதம் அல்ல). சிவபெருமானின் மகனாக சாத்தான் வழிபாடு இருந்துள்ளது.தமிழகம் முழுவதும்  அரசர்களின் ஆதரவோடு பரவியிருந்து சமண மதமும், அதன் மூலவராகி மகாவீரர் வழிபாடும்  தற்போது திருவண்ணாமலை பகுதியில் தலைமையிடம் அமைக்கப்பட்டு  ஒரு சிறு பகுதியினர் மட்டுமே வணங்குகின்றனர். சிலப்பதிகாரத்திலிருந்து மட்டுமே ஊதாரணங்களை சொல்லியுள்ளேன்  இன்னும் பழந்தமிழ் இலக்கியங்களில் படித்து பார்த்தால் இன்னும் நிறை இறந்து போன கடவுள்கள் பற்¢றி தகவல் கிடைக்கலாம்.

கடவுள் இருந்தா நல்லாயிருக்கும்...

                 
 என்னை காப்பாத்துங்க.... என்னை காப்பாத்துங்க .... சிவபெருமானின் அலறல் சத்தம் உங்களுக்கு கேட்டதா. உத்தரகாண்ட் -மாநிலம் கேதர்நாத்தில் கழுத்தளவு வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சிவ பெருமான் சிலையை உற்றுபார்த்தால் கேட்கும். 10,000க்கும் மேற்பட்டவர்கள் பலி, 3000 மேற்பட்டவர்கள் காணவில்லை என்கிறார்கள்.இதில் பெரும்பாலனவர்கள் பக்தர்கள்.மேலும் பக்தர்களாக வந்த தாயும்,மகளும் கற்பழிக்கப்பட்ட  செய்தியை கேட்ட போது தாசவதாரம் படத்தில் கமல் சொன்னது தான் ஞாபத்திற்கு வருகிறது. கடவுள் இல்லைன்னு எங்க சொன்னேன்... கடவுள் இருந்தா நல்லாயிருக்கும்....


 -செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...