20 ஜன., 2014

தண்ணீய விலைக்கு விக்குறது பாவம்டா.......

பஸ் அரைமணி நேரம் நிக்கும் சாப்பிட்டு வந்துருங்க....  அடுத்து கோயம்போடு தான் நிக்கும்... கன்டக்டர்.தூக்க கலகத்தில் ஜன்னல் வழியாக பார்த்த போது நகரத்தை விட்டு வெகுதூரம்  தள்ளியுள்ள ஹோட்டல் முன்பு பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. இரவு மணி 10 ஐ தாண்டியி ருந்தது.கன்டக்டருக்கும், டிரைவருக்கும் தனி டேபிள் போட்டு பரிமாறிக்கொண்டுருந்தார்கள்.நானும் குடும்பத்தோடு சாப்பிட்டு முடித்தேன்.  ஒரு சிறு கிண்ணத்தில் பல்குத்தும் குச்சியுடன் வந்த பில்லை பார்த்த போது தான் மயக்கமே வந்துவிட்டது.
அது உண்ட மயக்கமல்ல... வழக்கமான விலையை விட இரண்டுமடங்கு அதிகமாக பில் போடபட்டிருந்தது. என்ப்பா ரேட் அதிகமாக இருக்கே .. சார் இங்க இதான் ரேட் என்றபடியே நகர்தான் சர்வர். வேறவழி சாப்பிட்ட பிறகு பிரச்சனை பண்ண முடியுமா?.. பில்கட்டிவிட்டு பஸ்யேறினேன். பஸ் முழவதும் இதே பேச்சு தான்.. ரொம்ப கொள்ள சார். நல்லவேயிருக்கமாட்டானுக சார். கண்டக்டர்,டிரைவருக்கு பீரியாம் அதான் நடுகாட்டுக்குள்ள இருக்குற கடையில இறக்கிவிட்டுடான்க. எல்லோரும் புலம்பினார்களே தவிர யாரும்,நான் உட்பட நியாயம் கேட்ட போகவில்லை.. அது தமிழனின¢ குணம்.
           
                        ஆனால் 15 ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த தமிழனின் குணமே வேறு. சோறும் நீரும் விற்பனைக்கல்ல என்பதை தனது பண்பாடாகவே கொண்டு வாழ்ந்திருக்கிறான் தமிழன். உயிர் மருந்து என சோற்றினை வருணிக்கிறது மணிமேகலை காப்பியம். சமணம் ... சோறு, மருந்து,கல்வி,அடைக்கலம் என நால்வகை கொடைகளில் உணவு வழங்குவதையே முதலாவதாக பேசுகிறது. இன்று கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் சமணர்களின் அறிமுகமே. பிற்கால சோழர் கல்வெட்டுகளில் சட்டிச்சோறு வழங்கபட்ட தகவல்கள் சோறும்,நீரும் விற்பனை செய்யப்படுவதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்து கொள்ளமுடியகிறது.இவ்வளவு ஏன் 50.. 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமபுறங்களில் ஊர் மடத்தில் வழிபோக்கர்கள் யாரும் இரவு உண்ணாமல் படுத்தால் ஊர்க்காரர்கள் இரவுச்சோறு கொடுப்பது வழக்கம் இருந்துள்ளது. தங்கள் இடத்தில் இரவில் பசியோடு யாரும் உறங்கச்செல்வது தங்களுக்கு மானக்கேடு என நினைத்த காலம் அது. விஜய நகரத்து பேரரசுகளின் ஆட்சி, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு பிறகே உணவு விற்பனக்கு வர தொடங்கியது. அதுவும் பிராமணர்களும் , அவர்களை போன்ற மேல்சாதியினரும் அவர்களுக்கான ஹோட்டகளையே முதலில் துவக்கினர்.அது படிபடியாக வளர்ந்து உணவை மருந்தாக நினைத்த தமிழன் உயிர் கொள்ளை அடிக்கிறான்.
                         மினரல் வாட்டர்கள் விற்பனைக்கு வர தொடங்கிய போது எனது பாடியிடம் பாட்டிலை காட்டி ஒருபாட்டில் தண்ணீ 10ரூ என்றேன். தண்ணீய விலைக்கு விக்குறது பாவம்டா. இந்த உலகம் சீக்கிரம் அழிஞ்சுடும்ப்பா... என்றார்...

- செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...