டிராட்ஸ்கி மருது நூல் வெளியீட்டு விழா

ஏதேனும் ஓரு மாத,வார, இதழ்களை புரட்டும் போது .... சில பக்கங்கள் நம்மை மீண்டும் அந்த பக்கத்தை பார்க்கதூண்டும் .... அதில் நிச்சயமாக டிராட்ஸ்கி மருதின் ஓவிய பக்கமாக இருக்கும்.மெல்லிய கோடுகள் மூலம் ஓரு உருவத்தை ,உணர்வை நம்முன் நிறுத்துவதில் அவரின்  ஓவியங்களுக்கு ஈடுயில்லை எனலாம்.

தலையில் வைரக் கிரீடம், உடலில் தங்கக் கவசம், கழுத்தில் மாணிக்கம், முத்து மாலைகள் சரசரக்க மண்டபத்துக்குள் வந்த மன்னர் ‘யாரங்கே? நம் கஜனாவிலிருந்து பொன்னும் மணியும் மாணிக்கங்களையும், வைரங்களையும் கொண்டுவந்து இந்தப் புலவருக்குக் கொடுங்கள்.’ சொல்லிவிட்டு ராஜ சிம்மாசனத்தில் அமர்கிறார்.

இப்படித்தான் மன்னர்கள் நமக்கு அறிமுகமானார்கள் திரைப்படத்தின் மூலமும், சரித்திரக் கதைகளின் மூலமும். ஆனால் உண்மை அதுவல்ல என்கிறது சரித்திரச் சான்று.
சீனப் பயணி யுவான் சுவாங் தமிழ்நாட்டில் மதுரை வீதியில் வரும்போது மக்கள் எல்லாம் ‘பாண்டிய மன்னர் வருகிறார். பாண்டிய மன்னர் வருகிறார்’
எனப் பரபரப்பாக ஒதுங்கி வணங்கி வழிவிடுகிறார்கள். இதைப் பார்த்த யுவான் சுவாங் யார் மன்னன் என்று தேடுகிறார். பாண்டிய மன்னனும் மக்களைப் போலவே சாதாரணமாக இருக்கிறார். எந்த ஆடை, ஆபரண வேறுபாடும் இல்லை என்று யுவான் சுவாங் தன் பயணக் குறிப்பிலே எழுதிவைத்திருக்கிறார்.
இதுபோல் தமிழ் மன்னர்கள் 40 பேரின் வாழ்க்கைக் குறிப்புகளோடு ஒரு நிஜமான தமிழக வரலாற்று ஆவணமாக வந்திருக்கிறது ‘வாளோர் ஆடும் அமலை’ எனும் நூல்.
இது ஓவிய நூல். ஓவியர் டிராட்ஸ்கி மருது 40 மன்னர்களின் நிஜ வரலாற்றைப் படித்து ஆய்வு செய்து அவர்களின் நிஜத் தோற்றத்தில் எப்படியிருப்பார்கள் என்று தன் தூரிகையால் வண்ணம் தீட்டியிருக்கிறார்.

                      தற்போது எழுத்தாளர் அ.வெண்ணிலா தொகுத்த காலத்தின் திரைச்சீலை டிராட்ஸ்கி மருது நூல் வெளியீட்டு நாளை நடைபெறுகிறது அதற்கான அழைப்பிதல் கீழே இணைத்துள்ளேன்...


அனைவரும் வருக..

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
வணக்கம்
நிகழ்வு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விழா சிறக்க வாழ்த்துக்கள்...
  • ஜிகர்தண்டா... வித்தியாசமான சுவை
    03.08.2014 - 0 Comments
    எங்க ஊர் ஸ்பெஷல் ஜிகர்தண்டா.காலை காட்சிக்கு எப்போதையும் விட கூடுதலாக கூட்டம். நம்ம  ஊர்ல படம்…
  • தலைவா பட தடைக்கு 3 காரணங்கள் ....
    16.08.2013 - 3 Comments
    தலைவா படம் ஒரு வாரகாலமாக தடை செய் யப்பட்டுள்ளது. படம் தடை செய்ய ப்பட பல காரணங் கள் சொல்லப் படுகின்றன.…
  • காரில் பயணித்த வேற்றுகிரகவாசி வீடியோ+ 10 கெட்டப்புகளில் எலியான்
    26.11.2012 - 2 Comments
    நம்பமுடியாது... ஆனால் உண்மையா இருக்குமோ என்ற நிலையில் தான் வேற்றுகிரகவாசிகளை பற்றிய தகவல் அடிக்கடி…
  • பூமிக்கு செப்டம்பர் 28 ல் - ஆபத்து
    15.09.2015 - 1 Comments
    இந்த  மாதம் 15 மற்றும் 28 தேதிகளுக்குள் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியின் மீது மோதவிருப்பதாகவும்,…
  • இயக்குனர் மணிரத்தினத்தின் பெர்சனல்
    20.09.2012 - 4 Comments
    உலக அளவில் சிறந்த 10 படங்களில் மணிரத்தினத்தின் ''நாயகன்'' இடம்பிடித்துள்ளது. அவரின் படங்கள் சினிமா…