தீயசக்திகள் - அநதணர் சாபம் ?... மாயமாய்போன கிராமம் + படங்கள்

காத்துகருப்பு,பேய், அந்தணர் சாபத்தால் மிகப்பெரிய கிராமே மாயமாய் போன அதிர்ச்சி தகவல்..மதுரை மாவட்டத்தின் மேற்கு  பகுதி கிராமம் ஓன்றில் நிகழ்ந்த சோகசம்பவம்.
மதுரை மாவட்டம் பேரையூர்  தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ளது வேளாம்பூர் கிராமம்.இன்றைக்கும் வேளாம்பூர் ஊராட்சி என்ற பெயரில் வி.சத்திரப் பட்டி, வி.குச்ச ம்பட்டி,வி. வெங்கடாசலபுரம்,வி.ரெட்ரபட்டி,வி.கோபாலபுரம் மற்றும் வி.கண்ணாபட்டி ஆகிய கிராமங்களுக்கு வி என்ற இன்ஷியலை கொடுத்து வேளாம்பூர்  கிராமம் தாய்க்கிராமமாக ஒருகாலத்தில் திகழ்ந்துள்ளது.மதுரை மாவட்ட அரசு ஆவணங்களில் வேளாம்பூர் எனும் ஊராட்சி என்ற பெயரில் உலாவந்தாலும் உண்மையில் என்னவோ வேளாம்பூர் கிராமம் தற்போது இல்லை என்பதுதான் ஆச்சர்யம்.அப்படி என்ன வகையில் தான் வேளாம்பூர் கிராமம் மாயமாய் மறைந்து போனது ....

வேளாம்பூர் ...... டி.கல்லுப்பட்டி அருகே பச்சைப் பசேலென்று விளைநிலங்கள்,வானுயர்ந்து நிற்கும் மரங்கள்,சலசலக்கும் நீரோடைகள்,மண்ணின் மணம் மாறாத மனிதார்கள் என ஒருகாலத்தில் செல்வச் செழிப்புடன் விளங்கியது தான் வேளாம்பூர் கிராமம்.பெரும்பாலானோர்  சட்டி,பானைகளை வனைந்திடும் குயவுத் தொழில் செய்வோர் மற்றோரெல்லாம் மும்மாரி பொழிவதை பயன்படுத்தும் விவசாயப் பெருமக்கள் என வாழ்க்கை நன்றாகத்தான் போயுள்ளது.இதில் இருவேறு சம்பவங்களால் செல்வச்செழிப்புடன் திகழ்ந்த வேளாம்பூர் கிராமத்திற்கு முடிவு வந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பீதியுடன் விவரித்தனர்.

அதில் முதலாவதாக .....

கடந்த சில நுற்றாண்டிற்கு முன்பாக வேளாம்பூரில் மண்பாண்டங்களை உருவாகிடும் குயவர்களின் வீடுகள் அதிகம் இருந்த பகுதிக்கு வந்த அந்தணர் ஒருவா; தான்வைத்திருந்த வெற்றிலைக்கு சுண்ணாம்பு தந்திடுமாறு மக்களிடம் கேட்டுள்ளார் .அப்போது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி நாங்கள் அனைவரும் உழைப்பாளிகள் வெற்றிலைபோட்டு வயிற்றில் உள்ளதை செறிக்க வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளனர் குயவர்களின் கேலிப்பேச்சால் மனமுடைந்த அந்தணர் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தராத இந்த வேளாம்பூர் கிராமம் வானத்திலிருந்து விழும் அக்கினியால் வெந்து போவது நிச்சயம் என்று கூறிச்சென்றுள்ளார் .இந்த சம்பவத்தை தொடர்ந்து குயவு வேலை செய்யும் பொழுது அவர்களது கைகள் சுண்ணாம்பில் வேகவைத்தது போல் மாறினது.வீட்டுக்குள் சுண்ணாம்பு காளவாசல் போன்று வெப்பம் அதிகரித்ததால் அவர்கள் குடும்பம் குடும்பமாக வேளாம்பூரை விட்டு வெளியேறிச் சென்றாத கூறப்படுகிறது.


                                  சிலைடு சோ - 6 படங்கள்          

        

இரண்டாவதாக ....

பண்டைய காலத்து புதையல் வேளாம்பூர் பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்தப் புதையலை யாரும் எடுத்துச் சென்றுவிடாத வகையில் பனைமர உயரத்திற்கு கருகருவென வரும் தீயசக்தியொன்று காவல்காத்து வந்துள்ளது.இது அந்த வழியே செல்பவர்களை அச்சப்படுத்தி வீடுகளுக்குள் புகுந்து கலாட்டா செய்வது பெண்கயை பிடித்துக்கொள்வது குழந்தைகளை கிணற்றில் தள்ளுவது என்று பல்வேறு சேட்டைகள் செய்து வந்துள்ளது.இந்த தீயசக்தியின் அட்காசம் காரணமாக வேளாம்பூhpலுள்ள மக்கள் குடும்பம்,குடும்பமாக கிராமத்தை விட்டு வெளியேறி பிழைப்பு தேடி வேறு ஊர்களுக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இன்றைய சூழலில் மக்கள் நடமாட்டமின்றி மாயமாகிப்போன வேளாம்பூருக்கு சென்று பார்த்தபோது கடந்த 4வருடங்களுக்கு முன்புவரை பேய்,பிசாசுகளுக்கு அஞ்சிடாமல் ராமுத்தேவர்(85)என்ற திருமணமாகாத முதியவர் எனது சொந்த மண்ணை விட்டு வரமாட்டேன் என்று போராடி வீரமரணத்தை தழுவியுள்ளார் .அவர் வசித்த மண்குடிசை கடைசி சான்றாக தற்போது கரைந்த நிலையில் உள்ளது.இதே போல் பழங்காலத்து வேளாம்பூர் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வந்த சுட்டசெங்கற்களால் கட்டப்பட்ட கிணறு,குயவுத் தொழிலாளர்கள் மண்பரப்பி மண்பாண்டங்கள் செய்த இடம்,ஆங்காங்கே சிதைந்த நிலையில் மண்ணோடு மண்ணாகி நிற்கும் வீடுகள்,மண்ணில் புதையுண்டு கிடக்கும் நடுக்கல் வீரன் சிலை என எஞ்சியவைகள் காணப்படுகின்றன.
காத்துக்கருப்பு...பேய்..அந்தணர்சாபம் என்பதெல்லாம் நம்பமுடியாத காரணங்கள்.  ஆனால் ஓரு கிரமாமே மாயமாய மறைந்து போக உண்மைகாரணம் என்னவாக இருக்கும் என்பது விடை தெரியா கேள்வி...

ஜெ.எஸ்.செல்வராஜ்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்

PonVannan இவ்வாறு கூறியுள்ளார்…
Interesting to know a few things about Tamilan culture. Thanks.
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
மண்பாண்டங்களின் பாவனை குறைந்ததால் , தொழில் பாதிப்பால் மக்கள் இடம் பெயர்ந்திருக்கலாம்.